பகவான் கிருஷ்ணன்

பகவான் கிருஷ்ணன்

பகவான் கிருஷ்ணன் கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தார். ஒரு அவதாரமாக (பூமியில் இறைவனின் பிறப்பு) இந்தியா முழுவதும் போற்றப்படும் கிருஷ்ணனுடைய வாழ்க்கையின் வரலாற்று உண்மைகள் பழங்கதை மற்றும் புராண இலயக்கியம் எனும் ஒரு சிக்கலான வலையில் பின்னிக் கிடக்கின்றன.

பகவான் கிருஷ்ணனின் உன்னதமான போதனைகள் பகவத் கீதையில் பொதிந்துள்ளன. கீதை குறித்த அவரது மிகவும் பாராட்டப்பட்ட இரண்டு தொகுதிகள் கொண்ட விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் இவ்வாறு எழுதியுள்ளார்:

“பகவத் கீதையே இந்தியாவின் மிகவும் பிரியமான மறைநூல், மறைநூல்களுக்கெல்லாம் பெரிய மறைநூல், ஆகும். இது இந்துக்களின் புனித ஏற்பாடு, அல்லது பைபிள், மறைநூல் அதிகாரத்தின் உச்சபட்ச ஆதாரமாக எல்லாக் குருமார்களும் சார்ந்திருக்கும் ஒரே புத்தகம்… .

“ஆன்மீக வழிகாட்டியாக மிகவும் விரிவானது கீதை, இது எளிதில் புரிந்துகொள்ள முடியாத நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள் மற்றும் இந்து தத்துவத்தின் ஆறு அமைப்புகளின் சாராம்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது… . பிரபஞ்சம் பற்றிய முழு அறிவும் கீதையில் நிரம்பியுள்ளது. மிகவும் ஆழமான, ஆனால் ஆறுதலளிக்கும் அழகும்

எளிமையும் கொண்ட புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் அமைக்கப்பட்டு, கீதை மனித முயற்சிகள் மற்றும் ஆன்மீக முயற்சிகளின் அனைத்து மட்டங்களிலும் புரிந்து கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது — முற்றிலும் மாறுபட்ட இயல்புகளையும் தேவைகளையும் கொண்ட பரந்த பல்வேறு வகையான மனிதர்களுக்கு அடைக்கலம் தருகிறது. ஒருவர் இறைவனுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் எங்கிருந்தாலும், கீதை பயணத்தின் அந்தப் பகுதியின் மீது தன் ஒளியை வீசும்…

“கிருஷ்ணன் கிழக்கில் யோகத்தின் தெய்வீக முன்மாதிரியாக இருக்கிறார். மேற்கிற்கான இறை-ஐக்கியத்தின் முன்மாதிரியாக கிறிஸ்து இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்… .கிருஷ்ணனால் அர்ஜுனனுக்கு போதிக்கப்பட்டு மற்றும் கீதை அத்தியாயங்கள் IV: 29 மற்றும் V: 27–28 -ல் குறிப்பிடப்பட்டுள்ள கிரியா யோக உத்தி, யோகத் தியானத்தின் உன்னதமான ஆன்மீக அறிவியல் ஆகும். பொருள்சார் யுகங்களின் போது மறைக்கப்பட்ட இந்த அழிக்க முடியாத யோகம், தற்கால மனிதனுக்காக மகாவதார் பாபாஜியால் புத்துயிர் பெற்றது மற்றும் யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் குருமார்களால் போதிக்கப்பட்டது.”

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.