நினைவேந்தல்: ஸ்ரீ மிருணாளினி மாதா ( மே 8, 1931 – ஆகஸ்ட் 3, 2017)

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் இயக்குநர் குழுவின் சிறப்புசெய்தி

 ஆகஸ்ட் 4, 2017

அன்புக்குரியவர்களே,

2011 முதல் யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பின் தலைவர் மற்றும் சங்கமாதாவாக இருந்த, நம் அன்புக்குரிய ஸ்ரீ மிருணாளினி மாதா அவர்கள், ஆகஸ்ட் 3, 2017 அன்று , இவ்வுலகத்திலிருந்து அமைதியாக வெளியேறினார். நாம் அவரது இழப்பை அதிகமாக உணர்வோம். ஆயினும் வேறு உலகில் அவர் இப்போது அனுபவித்து வரும் பேரின்பத்தையும் சுதந்திரத்தையும், எந்த துயரமும் பாதிப்பதை நாம் விரும்ப மாட்டோம், அங்கு குருதேவர் அவரை எல்லையற்ற ஆனந்தத்துடன் வரவேற்றிருக்கிறார் மேலும் அவருடைய நம்பிக்கையை நிறைவேற்றிய விசுவாசத்திற்காக அவருடைய தெய்வீக அன்பையும் அருளாசிகளையும் பொழிந்துள்ளார். அவருடைய போதனைகளுக்கும், தெரிவிக்க விரும்பிய வழிகாட்டுதலுக்கும் ஒரு ஒரு தூய மார்க்கமாக அவர் இருந்தார், குருதேவரின் சீடராக கடந்த பல பிறவிகளிலிருந்து வந்த அவருடைய உயர்ந்த ஆன்மீக முன்னேற்றத்தின் காரணமாகவும். தன்னை ஒதுக்கி, இறைவனையும் குருதேவரையும் மகிழ்விக்க மட்டுமே நாடும் ஞானமும் பணிவும் அவருக்கு இருந்ததை அறிந்திருந்த காரணத்தாலும் குருதேவரால் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் போன்ற சிறந்த ஆத்மாக்கள் உலகப் பணிக்காக பூமியில் அவதாரம் எடுக்கும்போது, இறைவன் அவர்களின் பணியில் உதவுவதற்காக கடந்த பிறவிகளிலிருந்த நெருங்கிய சீடர்களை அவர்களிடம் ஈர்க்கிறார். மிருணாளினி மாதா நிச்சயமாக அத்தகையவர் தான். பதினான்கு வயதேயாகியிருந்த மிருணாளினி மாதாவுடனான குருதேவரின் முதல் சந்திப்பிலிருந்து, புனித விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தை பரப்புவதில் மிருணாளினி மாதா முக்கிய பங்கு வகிப்பார் என்பதை இறைவன் மற்றும் மகத்தான குருமார்களால் இதை கொண்டு வர நியமிக்கப்பட்டிருந்த அவர் உணர்ந்திருந்தார்.

இந்த அமைதியான, கூச்ச சுபாவமுள்ள இளம்பெண்ணில், தனது ஞானத்தின் சக்தி மற்றும் நம்பகத்தன்மையுடன் அவர் கற்பித்த மற்றும் அச்சிட்ட தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் சாரத்தில் ஆழக்கூடிய ஒரு புரிதலின் புனிதத்தையும் ஆழத்தையும் கண்டார். குருதேவரின் இலட்சியங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஒரு மனதோடு விசுவாசமாக இருக்கும் திறன் அவருக்கு இருப்பதை உணர்ந்தார்- அவர் ஒருபோதும் தன் விளக்கங்களிலிருந்து விலக மாட்டார் ஆனால் அதன் சாராம்சத்தை பற்றிக்கொள்வார் என்பதை அறிந்து, தனது விலைமதிப்பற்ற ரத்தினங்களாகிய உத்வேகமளித்தல்களை மெருகூட்ட ஒப்படைக்கக்கூடிய ஒரு சீடர் என்று உணர்ந்தார். குருதேவர் தனது எழுத்துக்களை வெளியிடத் தயார் செய்யும் முக்கிய பணியில் தாரா மாதாவுக்குப் பின் பதவிக்கு வர அவரை மிகுந்த அக்கறையுடன் தனிப்பட்ட முறையில் பயிற்றுவித்தார், அந்தப் பணிக்கு அவர் இதயம், மனம் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்தார். குருதேவரின் போதனைகளை கடைப்பிடிக்கும் நாமும், வரவிருக்கும் பக்தர்கள் தலைமுறையினரும், குருதேவரின் தெய்வீக ஞானத்தின் செல்வத்தை நமக்கு வழங்கக் காரணமான குருதேவருடனான அவரது இணக்கத்தின் புனிதத்திற்காகவும், அவருடைய பல வருட கால தன்னலமற்ற முயற்சிகளுக்காகவும், நித்திய நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

குருதேவரின் பரந்த உணர்வுநிலையில் எப்போதும் வேரூன்றிய புரிதலுடன், மிருணாளினி மாதா அவர்கள் , அவரது ஆசிரமங்களில் பல வருடங்களில் பலவேறு பணிகளில் தன் பங்காற்றல்களை நிறைவேற்றினார். குருதேவரின் எழுத்துக்களை பதிப்பிக்கும் தனது வாழ்நாள் பொறுப்பைத் தவிர, அவர் பல ஆண்டுகளாக துணைத் தலைவராக பணியாற்றினார், மேலைநாடுகள் மற்றும் இந்தியாவில் குருதேவரின் பணி வளர்ச்சிக்கு உதவ ஸ்ரீ தயா மாதாவுடன் இணைந்து பணியாற்றினார். குருதேவரின் தாய்நாட்டிற்கு அவர் இதயத்தில் ஒரு சிறப்பான இடம் இருந்தது, அங்கே அவரது வேலை செழித்தோங்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். தயா மாதாவின் மறைவுக்குப் பிறகு அவர் YSS/SRF இன் தலைவரானபோது, தயா மாதா அவர்கள் வெளிப்படுத்திய அதே உணர்வுடன் அவரது சமூகத்திற்கு வழிகாட்டினார்: “எனக்கு என்ன வேண்டும் என்பதை அல்ல, ஆனால் குருதேவர் என்ன விரும்புவார் என்பதை. ” குருதேவர் இந்தப் புனிதப் பணிக்குப் பொறுப்பாக இருக்கிறார் என்ற மாற்றமற்ற உண்மையை அவர்களின் உதாரணம் உறுதிப்படுத்தியது, அது எப்போதும் அப்படித்தான் இருக்கும்.

நம்மை ஊக்கப்படுத்தி, ஆன்மீக ரீதியாக வளர உதவியவர்களின் வாழ்க்கை, நம் ஆன்மாவில் நீடித்த முத்திரையை விட்டுச் செல்கின்றது. இறைவன் மற்றும் குருதேவர் மீதான அவரது அசைக்க முடியாத பக்தி,
குருதேவரின் எழுத்துக்களுடனான அவரது பணி, அவருடைய ஆன்மீகக் குடும்பத்தின் மீது ஆழ்ந்த அக்கறை ஆகியவற்றால், நம் அன்புக்குரிய மிருணாளினி மாதா எப்போதும் நம் இதயங்களில் நிலைத்திருப்பார். நம்முடைய அன்பையும் நன்றியையும் பிரார்த்தனைகளையும் அவருக்கு அனுப்புவதில் நாம் ஒன்றுபடுகிறபோது, அவர் அந்த எண்ணங்களைப் பெறுகிறாள் என்பதையும், இறைவனின் ஒளியிலும் ஆனந்தத்திலும் நாம் மீண்டும் சந்திப்போம் என்றும் நாம் உறுதியாக நம்பலாம். குருதேவரின் எழுத்துக்களில் உள்ள சத்தியங்களை, அவை ஒரு வாழ்க்கையாக, நம் வாழ்வில் மாற்றும் சக்தியாக, மாறும் வரை பெரும் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் அவற்றைப் பயன்படுத்தும் நமது சொந்த முயற்சிகளே, அவருக்கு நாம் செலுத்தும் நீடித்த அஞ்சலியாக அமையும். குருதேவரின் காலடியில் வைக்கப்படும் அந்த பரிசே , அவருடைய ஆன்மாவை மிகவும் தொடும் நன்றியின் வெளிப்பாடாகும்.

தெய்வீக தோழமையில், உங்களுடைய,

சுவாமி அச்சலானந்தகிரி, துணைத் தலைவர்
ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் இயக்குநர்கள் குழுக்காக

இதைப் பகிர