சங்கத்தின் தலைமைப் பொறுப்பு

Paramahansa Yogananda founder of YSS and SRF1917-ஆம் ஆண்டில் நிறுவப் பட்டதிலிருந்து 1952-ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தரின்  மகாசமாதிக்கு சற்று முன்பு வரை, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் செயல்பாடுகள் மற்றும் நிறுவன விஷயங்கள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் பரமஹம்ஸ யோகானந்தரால் வழிநடத்தப்பட்டன. அதன் பின்னர், ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் தலைமைப் பதவியில் பணியாற்றுவதற்கு பரமஹம்ஸரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது நெருங்கிய சீடரான  ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர், அவர்களுக்கு, அவரது பணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது; இப்பதவி 1952 முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வுலகை விட்டுச்செல்லும் வரை அவரால் வகிக்கப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பின் மூன்றாவது தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் இருந்தார். அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக யோகானந்தரால் தனிப்பட்ட முறையில் பயிற்சியளிக்கப்பட்ட பின்னர் 1955-ஆம் ஆண்டில் ராஜரிஷி ஜனகானந்தரின் மகாசமாதிக்குப் பிறகு ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் ஆனார் – இது 2010-ல் இவ்வுலகை விட்டுச்செல்லும் வரை அவர் வகித்த பதவி.

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா ஸ்ரீ தயா மாதாவுக்குப் பிறகு யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பின் சங்கமாதா மற்றும் தலைவராக பொறுப்பேற்றார். அவரும் தனிப்பட்ட முறையில் பரமஹம்ஸ யோகானந்தரால் தேர்வு செய்யப்பட்டு, அவருக்குப் பின்னர் பணிக்கு வழிகாட்டி உதவுவதற்குப் பயிற்சியளிக்கப்பட்டார், மேலும், அவர் தமது ஏழு தசாப்தங்களில் எஸ் ஆர் எஃப் சன்னியாசச் சீடராக பல முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்தார். ஸ்ரீ மிருணாளினி மாதா 2011 முதல் ஆகஸ்ட் 2017 -ல் அவர் இவ்வுலகை விட்டுச் செல்லும் வரை ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் சங்கமாதா மற்றும் தலைவராக பணியாற்றினார்.

சுவாமி சிதானந்தர்

சுவாமி சிதானந்தா கிரி  ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் தற்போதைய சங்கத் தலைவரும் ஆன்மீக முதல்வருமாவார் மற்றும் இவர் நாற்பது ஆண்டுகளாக ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சன்னியாசியாக இருந்து வருகிறார். இவர் தனது துறவற வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, ஸ்ரீ மிருணாளினி மாதாவுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் மற்றும் எஸ் ஆர் எஃப் -ன் பிற வெளியீடுகளைத் திருத்துவதற்கும் வெளியிடுவதற்கும் உதவி புரிந்து, அவருடன் நெருக்கமாகப் பணியாற்றினார். 2009-ஆம் ஆண்டில் ஸ்ரீ தயா மாதாவால் ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார், மேலும் தலைவரது வழிகாட்டுதலின் கீழ் எஸ் ஆர் எஃப் -ன் எண்ணற்ற நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தலைவர் என்ற முறையில் சுவாமி சிதானந்தர் அவர்களுக்கு பரமஹம்ஸரின் நேரடி சீடர்களால் பயிற்சியளிக்கப்பட்ட மற்ற துறவிகளை உள்ளடக்கிய ஓர் இயக்குநர் குழு உதவி புரிகிறது.

யோகானந்தருடனான தனிப்பட்ட தொடர்பினால் பயனடைந்த பல நேரடி சீடர்கள் அவரது மறைவைத் தொடர்ந்து பல தசாப்தங்களில் விசுவாசமாக அவரது அமைப்புக்கு சேவை செய்து மற்றும் அவர் நியமித்த தலைமைக்கு ஆதரவளித்து ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் ஆசிரமங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் கதைகளைப் படியுங்கள்.

இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் துறவு மேற்கொண்ட இறுதி சங்கல்பம் எடுத்துக் கொண்ட எங்களது  சன்னியாசப் பரம்பரை, உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் ஆசிரமங்களில் உள்ள மற்ற சன்னியாசிகளும், சன்னியாசினிகளும் பரமஹம்ஸ யோகானந்தர் தொடங்கிய பணிக்காக தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்.

தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளும் சன்னியாசினிகளும் இச்சமூகத்தின் ஆசிரம மையங்களில் பல்வேறு செயல்நிலைகளில் பணியாற்றுகிறார்கள்: விரிவுரைகள் மற்றும் வகுப்புகளை நடத்துவதற்கு பயணித்தல், ஏகாந்தவாசப் பயிற்சியை வழிநடத்துதல், யோகதா சத்சங்க போதனைகளின் மாணவர்களுக்கு – தொலைபேசி, கடிதம் மற்றும் நேரில் – ஆன்மீக ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் வழங்குதல்.

அர்ப்பணிப்புள்ள ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் பல சாதாரண உறுப்பினர்களும் கூட, பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய பணியில் இன்றியமையாத வழிகளில் சேவை செய்கிறார்கள் — சர்வதேச தலைமையகம் மற்றும் பிற ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் ஆசிரமங்களில் துறவிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆசிரமங்கள் மற்றும் தியான மையங்களில் பல பொறுப்புகளை நிறைவேற்றுகின்றனர்.

இதைப் பகிர