ஆன்மீகப் பரம்பரை

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் (ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்) போதனைகள் பகவான் கிருஷ்ணரின் மூல யோகம், இயேசு கிறிஸ்துவின் மூலக் கிறிஸ்தவம் ஆகியவற்றின்  அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.  ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் ஆன்மீகப் பரம்பரை இந்த இரு பெரிய அவதாரங்களையும் மற்றும் சமகாலத்தின் உயர்ந்த குருமார்களின் வரிசையையும் கொண்டுள்ளது: மகாவதார் பாபாஜி, லாஹிரி மகாசயர், சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர், மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் (ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் குருமார்களின் வரிசையில் கடைசியாக).

கிரியா யோகா ஆன்மீக அறிவியலை நவீன உலகிற்கு கொண்டு வருவதற்கான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் பணியில் இந்த ஒவ்வொரு மகான்களும் பங்கு வகித்தனர். (மேலும் படிக்க நிழற்படங்களைக் கிளிக் செய்க.)

புனிதமான கிரியா யோகா தீட்சையை எடுத்துள்ள யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா உறுப்பினர்கள்) அனைவரும் (சன்னியாசிகள் மற்றும் சாதாரண உறுப்பினர்கள்) பரமஹம்ஸ யோகானந்தரின் சீடர்கள் ஆவர். அவர், அவர்களின் தனிப்பட்ட குருதேவராக மரியாதை மற்றும் பக்தியுடன் வணங்கப்படுகிறார், அதேபோன்று அவரது மரபுவழி குருபரம்பரையும் ஒய் எஸ் எஸ் சீடர்களால் வணங்கப்படுகிறது.  குரு-சிஷ்ய உறவு பற்றி மேலும் வாசிக்க.

குரு-பரம்பரை — ஒரு குருவின் ஆன்மீகப் பொறுப்பின் ஸ்தானம்

ஒரு குருவின் ஆன்மீகப் பொறுப்பை அந்த குருவைச்சார்ந்த மரபுவழியில் கொண்டுசெல்ல நியமிக்கப்பட்ட சீடருக்குக் கைமாற்றம் செய்கின்ற மரபுவழி குருபரம்பரை என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறாக பரமஹம்ஸ யோகானந்தரின் நேரடி குரு பரம்பரை மகாவதார் பாபாஜி, லாஹிரி மகாசயர் மற்றும் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆவர்.

பரமஹம்ஸ யோகானந்தர், தமது மறைவிற்கு முன், ஒய் எஸ் எஸ் குருக்களின் வரிசையில் அவரே கடைசியாக இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் என்று கூறினார். அவரது சங்கத்தில் அடுத்தடுத்து வரும் எந்த ஒரு சீடரோ அல்லது தலைவரோ ஒருபோதும் குரு என்ற பட்டத்தை ஏற்க மாட்டார்கள். (இந்த தெய்வீக கட்டளை மத வரலாற்றில் தனித்துவமானது அல்ல. சீக்கிய மதத்தை ஸ்தாபித்த மாபெரும் துறவி குருநானக் காலமான பிறகு, குருக்களின் மரபுவழித்தொடர் வழக்கமாக இருந்தது. அந்த வரிசையில் பத்தாவது குரு அவர் அந்த குருக்களின் வரிசையில் கடைசியாக இருப்பார் என்றும், எனவே இனிமேல் போதனைகள்தான் குருவாக கருதப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.)

பரமஹம்ஸர், தாம் காலமான பிறகு, அவர் நிறுவிய சங்கங்களான, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மூலம் பணியை தொடர்வேன் என்று உறுதியளித்தார். அவர் மேலும் கூறினார்,  “நான் சென்ற பின்னர் போதனைகள் குருவாக இருக்கும் …. போதனைகள் மூலம் நீங்கள் என்னுடனும் என்னை அனுப்பிய குருமகான்களுடனும் ஒத்திசைவாய் இருப்பீர்கள்.”

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் அடுத்தடுத்த தலைமையைக் குறித்து கேள்வி எழுப்பியபோது, பரமஹம்ஸர் பதிலளித்தார், “இந்த அமைப்பின் தலைவர்களாக எப்போதும் ஆன்ம-அனுபூதி பெற்ற ஆண்களும், பெண்களும் இருப்பார்கள். அவர்கள் ஏற்கனவே இறைவனுக்கும், குருமார்களுக்கும் தெரிந்தவர்கள். அவர்கள் எனது ஆன்மீக வாரிசாகவும், பிரதிநிதியாகவும் அனைத்து ஆன்மீக மற்றும் நிறுவன விஷயங்களில் பணியாற்றுவார்கள்.”

குரு மரபில் பின் தொடர்வோர்

ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தருக்குப் பின், ராஜரிஷி ஜனகானந்தர் 1952-இல் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் பதவிக்கு வந்தார். ஜேம்ஸ் ஜே. லின் என்ற இயற்பெயருடன் அவர் 1892 மே 5 அன்று லூசியானாவின் ஆர்க்கிபால்டில் பிறந்தார்; 1932 இல் கன்சாஸ் நகரில் குருவின் சொற்பொழிவுத் தொடரின் போது பரமஹம்ஸ யோகானந்தரைச் சந்தித்தார்.

கிரியா யோகத்தில் அவரது விரைவான முன்னேற்றத்தின் காரணமாக, பரமஹம்ஸர் அவர்கள் அவரை “செயிண்ட் லின்” என்று அன்பாகக் குறிப்பிட்டார். 1951 ஆம் ஆண்டில் யோகானந்தர் அவருக்கு ராஜரிஷி ஜனகானந்தர் (பண்டைய இந்தியாவின் ஆன்மீக ரீதியில் புகழ்பெற்ற மன்னர் ஜனகரின் நினைவாக) என்ற சன்னியாசப் பட்டத்தை வழங்கினார், மேலும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் பணிகளை வழிநடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

ராஜரிஷி ஜனகானந்தர் பற்றி மேலும் வாசிப்பீர்

ஒரு சிறந்த மேற்கத்திய யோகியான ராஜரிஷி ஜனகானந்தரின் முன்மாதிரியான வாழ்க்கை பிப்ரவரி 20, 1955 அன்று முடிவுக்கு வந்தது.

ராஜரிஷி ஜனகானந்தாவை ஆசீர்வதிக்கும் யோகானந்தர்

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா

ராஜரி ஜனகானந்தருக்குப் பின், ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா 1955ல் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர் பதவிக்கு வந்தார்.

Daya Mata with Paramahansa Yogananda

1914 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி ஃபேயி ரைட் என்ற பெயரில் சால்ட் லேக் சிட்டியில் பிறந்த அவர், பரமஹம்ஸ யோகானந்தர் அங்கு 1931 இல் சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகள் நடத்த வந்தபோது அவரைச் சந்தித்தார். சிறிது காலத்திலேயே, அவரது ஆசிரமத்தில் பெண் சன்னியாசியாக நுழைந்தார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ரீ தயா மாதா அவர்கள், பெரும்பாலும் அவருடன் தொடர்ந்து இருந்த அவரது நெருங்கிய சீடர்களின் சிறிய வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல, 1930 களில் அவர் இன்னும் ஓர் இளம் பெண்ணாக இருந்தபோது, ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் இயக்குநர்கள் குழுவில் அதிகாரியாக அவரைத் தனிப்பட்ட முறையில் நியமித்தவாறு, குருதேவர் அவருக்கு மேன்மேலும் பொறுப்பை வழங்கினார். அவரது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், யோகானந்தர் அவரை எஸ் ஆர் எஃப் சர்வதேச தலைமையகத்தின் பொறுப்பில் அமர்த்தினார், மேலும் அவர் வகிக்க இருக்கும் உலகளாவிய பொறுப்பைப் பற்றி சீடர்களிடம் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். குரு தாம் செல்வதற்குச் சற்று முன்பு, அவரிடம் சொன்னார்: “இப்போது என் பணி முடிந்தது; உன் பணி தொடங்குகிறது.”

ஸ்ரீ தயா மாதா பற்றி மேலும் வாசிக்க.

பரமஹம்ஸர் தனது உலகளாவிய சங்கத்தின் எதிர்காலத் தலைவராக ஸ்ரீ தயா மாதாவைத் தேர்வுசெய்தது மகாவதர் பாபாஜியால் 1962 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு யாத்திரையின் போது தயா மாதா மகாவதாருடன் நடத்திய ஒரு சந்திப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவராக 55 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து, பின்னர் ஸ்ரீ தயா மாதா நவம்பர் 30, 2010 அன்று மகாசமாதி எய்தினார்.

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

ஆகஸ்ட் 3, 2017 அன்று, எங்கள் அன்பிற்குரிய சங்கமாதாவும் தலைவருமான  ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா, நிலையான பேரின்ப சாம்ராஜ்யத்திற்காக மற்றும் பரம்பொருளில் விடுதலைக்காக அமைதியுடன் இந்த உலகத்தை விட்டு நீத்தார். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளால் நல்மாறுதல் அடைந்த நூறாயிரக்கணக்கான உண்மை தேடுபவர்களுக்கு ஞானம், அன்பு மற்றும் புரிதலின் ஒரு வழிகாட்டும் ஒளியான ஸ்ரீ மிருணாளினி மாதா எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக குருவின் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

 ஸ்ரீ மிருணாளினி மாதா பற்றி மேலும் அறிய.

சுவாமி சிதானந்த கிரி

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் (ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப்) தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் சுவாமி சிதானந்த கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தியை யோகதா சத்சங்கா சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இயக்குநர்கள் குழு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆகஸ்ட் 30, 2017 புதன்கிழமை எஸ் ஆர் எஃப் இயக்குநர்கள் குழு ஒருமனதாக வாக்களித்ததன் வாயிலாக அவர் நியமனம் செய்யப்பட்டார். ஜெய் குரு.

 ஸ்வாமி சிதானந்தகிரி பற்றி மேலும் அறிய..

இதைப் பகிர