(ஜனவரி 31, 1914 --- நவம்பர் 30, 2010)

அஞ்சலி செய்திகள்

ஸ்ரீ தயா மாதாஜியின் மறைவைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள நலனில் அக்கறையுடைய நண்பர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான செய்திகள்-மின்னஞ்சல்கள், கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தலைமையகத்தில் வந்து குவிந்தன. சில பக்தர்கள் பல வருடங்களாக மாவுடனான கடந்த கால சந்திப்புகளில் பெற்ற உத்வேகத்தை நினைவுகூர்ந்தனர், ஆனால் அவளை நேரில் சந்திக்காதவர்களாக பலர் இருந்த போதிலும் அவர்கள் அக ஒருமுகப்பாட்டின் மூலம் அவளுடன் நெருங்கிய தொடர்பை உணர்ந்தனர்.

இங்கு பார்வைக்கு வழங்கப்பட்ட கருத்துக்கள், இந்த அன்பான ஆன்மீகத் தலைவருடனான மக்களின் தனிப்பட்ட அனுபவங்களின் பெரும் நோக்கத்தின் ஒரு சிறு துளியை வழங்குவதாக இருந்தாலும் அனைத்தும் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் சாராம்சமான நிபந்தனையற்ற அன்பு மற்றும் இரக்கத்தின் ஒருங்கிணைந்த கருப்பொருளையே பிரதிபலிக்கின்றன.
“எஸ் ஆர் எஃப் மற்றும் இறைவனுக்கு உனது உண்மையான மகிழ்ச்சியான அறிவார்ந்த சேவை என்னை மிகவும் மகிழ்வுறச் செய்கிறது. நீ தெய்வீக அன்னையில் பிறந்து, உனது ஆன்மீக தாய்மையால் மட்டுமே அனைவரையும் ஊக்குவிப்பாயாக – உனது வாழ்க்கையின் உதாரணத்தால் மட்டுமே மற்றவர்களை இறைவனிடம் கொண்டு வருவாயாக. என்றன்றைக்குமான அருளாசி. ”

– பரமஹம்ஸ யோகானந்தர்

இந்தியாவின் மேன்மையான துணை ஜனாதிபதி, ஸ்ரீ எம். ஹமீத் அன்சாரி: “தயா மாதா, யோகதா சத்சங்க சொசைட்டி/ஸெல்ப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவர் மற்றும் சங்கமாதாவின் மறைவுக்கு எனது உண்மையான இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

“நிறுவனர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக வாரிசாக, ஸ்ரீ தயா மாதா தனது குறிக்கோள்களையும் இலட்சியங்களையும் 55 ஆண்டுகளாக முன்னெடுத்துச் சென்றார். உலக மதங்களின் அத்தியாவசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில், அனைத்து மக்களிடையே சகோதரத்துவ உணர்வை பரப்புவதிலும், மனிதகுலத்திற்கு ஒரு பெரிய சுயமாக சேவை செய்வதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

“இன்றைய சச்சரவு நிறைந்த உலகில், இந்த இலட்சியங்கள் பொருத்தமானவையாக இருக்கின்றன. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இந்த இலட்சியங்களை நடைமுறைக்கு கொண்டு வர தொடர்ந்து போராடும். மேலும் நல்லவர்களாக இருக்கவும் மற்றும் நல்லதைச் செய்யவும் மனிதகுலத்தை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’’

ஜார்க்கண்டின் மேன்மைமிக்க ஆளுநர் ஸ்ரீ எம்.ஓ.எச். ஃபாரூக்: “ பரமஹம்ஸ யோகானந்தரின் முதன்மை சீடரான ஸ்ரீ தயா மாதாவின் மறைவுக்கு நான் வருந்துகிறேன், ஸ்ரீ தயா மாதா அன்பு, கருணை மற்றும் காலவரம்பற்ற பிற இந்திய கலாச்சார மதிப்புகளின்/ பொக்கிஷங்களின் வடிவானவர்…. ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் ஆற்றலை இந்திய யோகதா சத்சங்க சொஸைடி உறுப்பினர்களுக்கு வழங்க இறைவனை வேண்டிக்கொண்டு, என் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு ஜார்கண்ட் முதல்வர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா: “ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா இனி நம் மத்தியில் இல்லை என்பது இதயத்தை உருக்கும் துக்கமான விஷயம். இது இந்திய ஆன்மீக சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகான்கள் இறக்க மாட்டார்கள் ஆனால் பேரிறையுடன் ஒன்றிணைவதற்கு அவர்களின் சொந்த விருப்பத்தினால் வெறும் அழியும் உடலை களைகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இத்தகைய ஆன்மாக்கள் மனித உடலின் வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி முழு அண்டத்திலும் விரிவடைகின்றன. “பண்டைய இந்திய ஆன்மீக கொள்கைகளை முழுமையாக உள்வாங்கி, வெளிப்படுத்திய ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் வாழ்க்கை உலக அரங்கில் கிழக்கு மற்றும் மேற்கத்திய சிந்தனை-நீரோட்டங்களின் ஒரு மிகச்சிறந்த இணக்கமான ஒன்றிணைப்பை வழங்குகிறது. அவளுடைய வாழ்க்கை முழு பிரபஞ்சமும் ஒரே கடவுளின் படைப்பு என்றும், முழு மனித இனமும் அந்த ஒருவரின் பிரதிபிம்பம் என்றும் காட்டுகிறது. “பரலோகத்திற்கு ஏகிய அந்த ஆத்மாவுக்கு நான் எனது உண்மையான அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன், மேலும் அவருடைய மற்ற உலக அன்பும் அருளாசிகளும் என்றென்றும் நம்முடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.”

சுவாமி சத்யசங்கானந்தா, ரிக்கியாபீத்: “தயவுசெய்து என் தாழ்மையான இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள்; ஸ்ரீ தயா மாதாஜி தனது குருதேவரின் பணிக்கு ஊக்கமளிக்கும் மற்றும் அர்ப்பணிப்புள்ள சீடர். அவருடைய நிபந்தனையற்ற அன்பு பலரின் வாழ்க்கையை தொடர்ந்து ஆசீர்வதிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அவருடைய தெய்வீக இருப்பு எல்லா படைப்புகளிலும் பரவி மற்றும் நம் இதயங்களில் தொடர்ந்து வாழுவதன் மூலம் அவர் இப்போது மொத்த உடலின் பிடியில் இருந்து சுதந்திரமடைந்துவிட்டார். ஓம்-தத்-சத். “

சுவாமி விமலானந்தா, தலைவர், தெய்வீக வாழ்க்கைக் கழகம், ரிஷிகேஷ்: “எங்கள் அன்புக்குரிய மற்றும் மரியாதைக்குரிய தயா மாதாவின் மறைவு பற்றி அறிந்தவுடன் நமது அற்ப மனம் துக்கத்தை மட்டுமே பதிவு செய்யும். ஆனால் உண்மையில், அவர் உச்சத்துடன் (அ) பேரிறையுடன் இணைந்தார். மகான்கள் (அ) உயர்ந்தவரகள் இறப்பதில்லை. அவர்கள் நம் நடுவே நித்தியமாக வாழ்கிறார்கள்.

அழியும் தன் உடலை உதறித் தள்ளுவதன் மூலம், தாய், உடலின் எல்லைகளை வெற்றி கொண்டு எங்கும் நிறைந்தவராகிவிட்டார்…..
“தாயின் இருப்பு எண்ணற்ற தேடல் உடையவர்க்கு உத்வேகத்தை அளிக்கும் மிகப்பெரிய ஆதாரமாக இருந்தது. அவருடைய அன்பும் இரக்கமும் வருத்தத்துடன் வந்த பலருக்கு ஆறுதலளிப்பதாக இருந்தது.

அவருடைய கருணை முற்றிலும் நம்பிக்கை இழந்து வந்தவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. தாய் தன் உடலை விட்டு வெளியேறிவிட்டார், மேலும் பக்தர்களுக்கு எப்படி வழிகாட்டவும் ஊக்கமளிக்கவும் போகிறார்? வருத்தப்பட வேண்டாம்! இப்போது அம்மா தனது உடல் வரம்பு களைக் கடந்துவிட்டதால், அவரது இருப்பை உலகம் முழுவதும் மற்றும் எல்லா நேரங்களிலும் உணர முடியும். உண்மையுடன் தேடும் அனை வருக்கும் அவர் தொடர்ந்து ஊக்கமளித்து, ஆறுதல் மற்றும் நம்பிக்கையைத் தருவார். இறுதி அறிதலை அடையும் நம் முயற்சியில் , அன்னையின் சிறந்த அருளாசி நம் அனைவரின் மீதும் என்றும் இருந்து வழிகாட்டட்டும்.

சுவாமி வெங்கடேசானந்தா (தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் துறவி): “[பரமஹம்ச யோகானந்தர்] இந்த புவிப்பரப்பை/மண்ணுலகை விட்டு வெளியேறுவதற்கு முன்பு,’நான் சென்ற பிறகு, அன்பு மட்டுமே என் இடத்தை நிரப்ப முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் மறைந்த பிறகு, அன்பு தயா மாதாவின் வடிவெடுத்து, அவரது இடத்தை பிடித்துள்ளது. குருதேவர் மேற்கொண்ட பணியை விசுவாசத்துடன் அந்த அர்ப் பணிப்புள்ள சீடர் எடுத்துச்சென்றார் – அவர் சொன்னதைச் சொல்வதன் மூலம் மட்டுமல்லாமல், அவர் என்னவாக இருந்தாரோ அவ்வாறு இருப்பதன் மூலமும்.

மகாத்மா காந்தியின் நேரடி சீடர் ஸ்ரீ கே. கிருஷ்ணன் நாயர்: “அந்த சந்திப்பின் மகிழ்ச்சி [ஸ்ரீ தயா மாதாவுடன்] என் இதயத்தில் இன்னும் புத்தம்புதியதாக இருக்கிறது. அவர் அற்புதமான அன்பை வெளிப்படுத்துகிறார் : அதுவே அவருடைய செய்தி

1958 இல் எஸ்ஆர்எஃப் தலைமையகத்தில் ஸ்ரீ தயா மாதாவுடன் விஜயம் செய்தபின், பூரியின் சங்கர்சார்யா, புனித ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்தரின் கருத்துக்கள்
ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பில் நான் உயர்ந்த ஆன்மீகம், சேவை மற்றும் அன்பைக் கண்டேன். அவர்களின் பிரதிநிதிகள் இந்த கொள்கைகளை போதிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் அதன்படி வாழ்கின்றனர்.

டாக்டர் பினாய் ஆர்.சென், அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இயக்குநர் ஜெனரல்.
“பரமஹம்ஸ யோகானந்தரின் மரபு அவரது புனித சீடரான ஸ்ரீ தயா மாதாவை விட வேறு எங்கும் பிரகாசமாக ஒளிரவில்லை, அவர் தன் மறைவிற்குப் பின் தனது காலடிச்சுவட்டை பின்பற்ற ஶ்ரீ தயா மாதாவைத் தயார் செய்து இருந்தார்.
என்னைப் போலவே, பரமஹம்ஸாஜியைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றவர்கள், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பிற்கு சென்ற போது என்னை ஈர்த்த அவரின் தெய்வீக அன்பு மற்றும் இரக்கத்தின் அதே ஆன்மா, தயா மாதாஜியிடம் பிரதிபலித்ததை கண்டிருப்பார்கள்”.

ஸ்ரீ நானி ஏ.பல்கிவாலா, அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர்:
ஸ்ரீ தயா மாதா அன்பு, கருணை மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்ட மதிப்பு கொண்ட பிற இந்திய கலாச்சாரத்தை, மனித வடிவில் வெளிப்படுத்தினார். அவளுடைய உரைகள் சுருக்கிய இறையியல் கொள்கைகள் பற்றிய சுவாரசியமற்ற கல்வி ஆய்வுக் கட்டுரைகள் அல்ல, ஆனால் படைப்பாளியைப் பற்றிய அவரது பரவசப் பார்வைக்கு சாட்சியான இறைவனைப் புகழ்ந்து பாடும் தீவிரமான தனிப்பட்ட பாடல்கள்.”

சி.வி. நரசிம்மன், துணைச் செயலாளர், ஐக்கிய நாடுகள்:
“ஸ்ரீ தயா மாதாவை பலமுறை சந்திக்கும் பாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன் … அவள் முன்னிலையில் இருந்த எவரும், அவளிடமிருந்து வெளிப்பட்ட ஆன்மீக சமாதானம் மற்றும் அமைதியின் பிரகாசத்தால் பாதிக்கப்படாமல் இருந்திருக்க முடியாது.
சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை நிறைந்த இந்த யுகத்தில் ஸ்ரீ தயா மாதாவின் செய்தி மிகவும் முக்கியத்துவம் மற்றும் பொருத்தமான ஒன்றாகும்…..அவை மனித இனத்தின் ஒற்றுமை மட்டுமல்ல, கடவுளோடு மனிதனின் ஒற்றுமை பற்றிய ஒரு பிரகடனமாகும்.

சுவாமி ஷ்யாமானந்த கிரி, எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ்-ன் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் 1971 -ல் அவர் இறக்கும் வரை:
மரியாதைக்குரிய அன்னை தயா மாதாவை 1958 -ல் முதன்முதலில் சந்தித்தபோது நான் வியந்து போனேன். இந்தியாவின் சிறந்த மகான்களில் ஒருவரைப் போல ஒரு மேற்கத்தியர் எப்படி இருக்க முடியும்? ஸெல்ஃப் ரியலைசேஷனுடைய போதனைகளின் சக்தியை நான் புரிந்து கொண்டேன். அவளுடைய கடவுளைப் பற்றிய மெய்யுணர்வு தற்செயலாக வரவில்லை குருவின் போதனைகளைப் பயன்படுத்தி தனது முயற்சியால் அவள் தன்னை கடவுளோடு இணைத்துக் கொண்டாள், அதனால் அவனுடைய ஞானம் அவளுக்குள் பாய்ந்தது.

நவீன இந்தியாவின் மிகப்பெரிய மகானாகிய ஆனந்தமயீ மா, ஸ்ரீ தயா மாதா, ஆனந்தமயீ-மாவின் இந்திய ஆசிரமத்திற்கு விஜயம் செய்தபோது, அவரிடம் கூறிய குறிப்புகள்: “நான் உங்கள் குருவிடம் கண்ட அதே ஆன்மசக்தியை (பாவா), உங்களில் காண்கிறேன்.”

திருமதி. முக்தமலா மித்ரா மற்றும் குடும்பம், கொல்கத்தா, குருதேவரின் பேத்தி: “எங்கள் அன்புக்குரிய ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் மறைவு குறித்து நானும் என் குடும்பமும் மிகவும் வருத்தமடைந்தோம். அவளுடைய தெய்வீக அன்பையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும், அவளுடைய வழிகாட்டுதலைப் பெறவும், தன்னலமற்ற அன்பைப் பற்றிய அவளுடைய தெய்வீக எழுத்துக்களைப் படிக்கவும் நாங்கள் பாக்கியம் பெற்றோம். அது இந்த கொந்தளிப்பான காலங்களில் எங்கள் உலக வாழ்க்கையின் பல சோதனைகள் மற்றும் ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிக்க உதவியது.
அவளின் மறைவை, இத்தனை காலம் நாங்கள் ஒரு பெரிய ஆல மரத்தின் சுகமளிக்கும் நிழலின் கீழ் வாழ்ந்து வந்து, திடீரென அம்மரம் எடுத்துச் செல்லப்பட்டதைப் போல நாங்கள் உணர்கிறோம். என் திருமணத்தின் போது அவள் எங்களுக்கு அனுப்பிய தெய்வத்தன்மை வாய்ந்த அழகான மற்றும் அன்பான கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இருப்பினும், ஆன்மா அழியாதது, தெய்வீக அன்பு அழியாதது என்பதை நாங்கள் அறிவோம், அதனால் அவள் வெறுமனே தனது ஆடைகளை மாற்றிவிட்டாள் மேலும் அவளுடைய தெய்வீக இருப்பு மற்றும் அன்பு எப்போதும் எங்களுடன் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

டைம் பத்திரிகை: : “வரலாறு, சுடர் விட்டு எரிந்த மற்றும் மினுமினுக்கி அணைந்து போன மதப் பிரிவுகளின் நினைவுச்சின்னங்களால் தெளிக்கப்பட்டிருக்கிறது/ தூவப்பட்டிருக்கிறது – ஒரு கவர்ச்சியான தலைவரால் ஏற்றி, அவர் இறந்த சிறிது நேரத்திலேயே இறந்துபோன நம்பிக்கையின் சிறிய மெழுகுவர்த்திகள்……
1952-ல் நிறுவனர் பரமஹம்ஸ யோகானந்தரின் மரணத்திற்குப் பிறகு, ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் கூட வெளியேறப் போவது போல் தோன்றியது, ஆனால் அதற்குப் பதிலாக அது செழித்தோங்கியது…. 1955 முதல், இந்த பிரிவை மிஸ் ஃபே ரைட் நிர்வகித்து வருகிறார், ஃபெலோஷிப்பில் இவர் தயா மாதா என்று அறியப்படுகிறார்.

டான் த்ராப், லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸின் முன்னாள் மத ஆசிரியர்: “நான் [ஸ்ரீ தயா மாதாவை] நேர்காணல் செய்தேன், பல காரணங்களுக்காக அவளிடம் மிகவும் ஈர்க்கப்பட்டேன்: அவளுடைய புத்திசாலித்தனம், அவளுடைய நேர்மை, அவளுடைய உண்மைத்தன்மை – நான் எப்போதும் மக்களை அவர்களின் உண்மைத் தன்மையால் அளவிடுகிறேன் – மற்றும் மதம் துறையில் அவரது பரந்த மனப்பான்மை….. ஒரு மலையின் உச்சி எப்போதும் என்னைப் பொறுத்தவரை அதன் சொந்த ஒளிவீசும் தன்மையையும், அதன் சொந்தப் பிரகாசத்தையும் உருவாக்குகிறது. மேலும், என்னைப் பொறுத்தவரை, மவுண்ட் வாஷிங்டனின் முனை தயா மாதாவின் தனித்துவமான பிரகாசத்தை எப்போதும் கொண்டுள்ளது….. நான், எனது நிரந்தர மரியாதை, அபிமானம் மற்றும் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவளுடைய பணி தனித்துவமானது, அவள் அதை தனித்துவமாக நிறைவேற்ற முடிந்தாலும் கூட என்பதை ஒப்புக் கொள்வேனாக.

அறக்கட்டளையின் ஒரு கத்தோலிக்க சகோதரி: “என்னைப் பொறுத்தவரை, ஒரு மத ஒழுங்கின் உறுப்பினராக, தயா மாதா இறைவன் மற்றும் அண்டை வீட்டாரின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு பிரகாசமான உதாரணம். அவள் முன்னிலையில் எவரும் கத்தோலிக்கர்களோ, புராட்டஸ்டன்ட்களோ அல்லது இந்துக்களோ இல்லை, ஆனால் இறைவன் என்ற ஒரே ஒரு தந்தையின் குழந்தைகள் மட்டுமே. மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் அவள் மனதார ஏற்றுக்கொள்கிறாள், மற்றும் அவர்கள் அனைவருக்கும் அவளுடைய இதயத்தில் ஒரு இடம் இருக்கிறது. நான், ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி, அவளுடைய தயவையும் அவளுடைய ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அனுபவித்திருக்கிறேன். அவள் என்னை சொந்த உறவினருள் ஒருவராகவே நடத்துவதை நான் எப்போதும் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அவள் எப்போதும் ஒரு மதவாதியாக என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலட்சியமாக இருப்பாள் ……அவள் கடவுளை வெளிப்படுத்துகிறாள்’’

பிரிசில்லா பிரெஸ்லி: “[ஸ்ரீ தயா மாதா] மென்மையாக பேசுபவராகவும் இயல்பாகவும், வெளிப்படையாக தன்னுள் சமாதானமாக இருந்த ஒரு நபராக இருந்தார். எல்விஸ் உடனடியாக அவளை அழைத்துச் சென்றார். இவ்வாறு எல்விஸுக்கும் ஸ்ரீ தயா மாதாவுக்கும் இடையே ஒரு உரையாடல் தொடங்கியது, அது அவரது வாழ்க்கையை ஆழமாக பாதித்தது ….” இந்தப் பெண்மணி மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது.”

இசைக்கலைஞர் ஜார்ஜ் ஹாரிசன்: “ஒரு தேவதையின் சாரம் என்ன? எவர் தேவதையின் குணங்களை கொண்டவரோ, எவர் தங்களுக்குள் அந்த தூய்மை கொண்டவரோ – அதுவே தயா மாதா போன்ற ஒரு நபருக்குள் இருப்பதைத்தான் நான் தேவதையின் தரம் என்று அழைப்பேன்.’’

டாக்டர் எஸ்.டி. ஜோஷி, எழுத்தாளர், தொழில்நுட்பவியலாளர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகி, வால்சந்த் இண்டஸ்ட்ரீஸ், லிமிடெட்.
“1967 ஆம் ஆண்டில், சங்கமாதா தயாமாதாஜி இந்தியாவிற்கு வந்தார் – நான் தேடிக்கொண்டிருந்த ஒரு நிகழ்வு – அவர் முன்னிலையில் இருந்த போது நான் அவரிடம் ஒரு உலகளாவிய தாயைக் கண்டேன் – தெய்வீக ஆற்றல், தாய்மையான அன்பு மற்றும் இரக்கத்தின் உருவகம்…… தயாமாதாஜி, அவளது ஒளி, கருணை மற்றும் இரக்கம் ஆகியவற்றினால் எனது மரியாதையை அவருக்கு அளிக்கும்படி கட்டளையிட்டாள்.

ரெவரெண்ட் பிரேம் அஞ்சலி, பிஎச்.டி., நிர்வாக இயக்குனர், சச்சிதானந்த ஆசிரமம்-யோகவில்லே, வர்ஜீனியா:
‘அன்புக்குரிய மற்றும் மரியாதைக்குரிய ஸ்ரீ தயா மாதாஜி ஸ்தூல உடலை விட்டு வெளியேறியது பற்றி இப்போதுதான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சச்சிதானந்த ஆசிரம-யோகவில்லின் அறங்காவலர்கள் சார்பாக,ஒருங்கிணைந்த யோகா அமைப்பு மற்றும் சங்கம் முழுவதின் சார்பாக, உங்களுக்கும் அனைத்து ஸெல்ப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் உறுப்பினர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான பிரார்த்தனைகளை வழங்குகிறோம்.

ஸ்ரீ தயா மாதாஜியை நினைவுகூருவதற்கும் மற்றும் கௌரவிப்பதற்கும் சச்சிதானந்த ஆஸ்ரமம்-யோகாவில்லில் சிறப்பு பிரார்த்தனை சேவையை நாங்கள் நடத்துகிறோம். “இறைவனுக்கும், குருவிற்கும், மற்றும் தெய்வீகத்தின் பெயரில் ஆத்மாக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கும் சேவை செய்த சிறந்த/உன்னதமான ஆத்மாக்களில் ஒருவருக்கு நாங்கள் தொடர்ந்து மரியாதை செலுத்துவோம்.
ஸ்ரீ தயா மாதா, தனது மரியாதைக்குரிய குருதேவர், பரமஹம்ஸ யோகானந்தாஜி மற்றும் அவரது அமைப்பைப் பின்பற்றுபவர்களை அன்புடன் மேய்ப்பவராக, மனிதகுலத்திற்கு ஆற்றிய சேவை மகத்தானது/பரந்த சேவை ஆற்றினார்.

“எங்கள் பிரார்த்தனைகளும் இதயப்பூர்வமான எண்ணங்களும் இந்த நேரத்தில், மற்றும் எப்போதும் உங்களுடன் இருப்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் புனித குருவின் ஆழ்ந்த விருப்பங்களையும் மற்றும் ஸெல்ஃப் ரியலைசேஷன் பற்றிய தொலைநோக்கையும் நிறைவேற்றுவதற்காக , நீங்கள் அனைவரும்,அவருடைய மகத்தான செய்தியின் ஒளி விளக்காக தொடர்வீர்களாக. ஸ்ரீ தயா மாதாஜியின் வாழ்நாள் முழுவதுமான பக்தி மற்றும் அர்ப்பணிப்பு என்ற உதாரணங்களால் தொடர்ந்து உத்வேகம் பெற்று, உங்கள் புனித குருவுக்கு உங்கள் வாழ்க்கையை தொடர்ந்து காணிக்கையாக்குவீர்களாக.”

விளா மரியானா தியானக் குழு, பிரேசில்: “எங்கள் சிறிய குழுவில், தெய்வீகத் தாயுடன் எங்களை இணைப்பவராக, தயா மாதாஜியை நாங்கள் நேசிக்கிறோம்.
இந்த செய்திகளை ஏற்றுக்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
நாங்கள் அவளுக்காக ஒரு தியான சேவை செய்தோம். எங்களுக்கு இழப்பினால் ஏற்பட்ட கண்ணீர் மற்றும் துன்ப உணர்வுகள் இருந்தன, ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரே அனுபவமாக இருந்தது.அதாவது, தயா மாதாஜி எங்களை சோகமாக இருக்க விடாதது போல் இருந்தது. அமைதி மற்றும் ஆனந்த உணர்வு எங்கள் இதயங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது (அனைத்தும் தற்போது – விதிவிலக்குகள் இல்லை). மேலும் நாங்கள் அனைவரும் பொறுப்புணர்வையும் கூட உணர்ந்தோம். அவள் ஒரு பூரணமான சீடரின் வாழ்க்கையை வாழ்ந்தாள். அவளைப் போன்ற வாழ்க்கை வாழ்வதை குறிக்கோளாகக் கொள்வது இப்போது நமது பொறுப்பாகும். நான் சோகமாக உணர்ந்தேன், ஆனால் அவள் என்னை சோகமாக இருக்க விடவில்லை.
அவள் முன்னெப்போதையும் விட அதிகமாக உடனிருக்கிறாள்.”

டி. இசட்., கலிபோர்னியா: “நான் சந்தேகித்தது போல், எங்கள் அன்புக்குரிய தயா மாதாஜியின் மறைவின் பொழுது, மாவின் மென்மையான குரல் நேரடியாக எங்கள் இதயத்தில் ஆழ்ந்த தியானங்கள் மற்றும் அன்பான உள்ளுணர்வுகளில் கிசுகிசுத்ததால், பல பக்தர்களும் ஆழ்ந்த ஆசீர்வாதத்தைப் பெற்றனர் என்பதை நான் கண்டுகொண்டேன். மகிழ்ச்சிகரமான நினைவுகூரும் இந்த கடந்த நாட்களின் பொழுது நான் அடைந்தது போன்ற ஒரு அளவற்ற அன்பை ஒருபோதும் உணர்ந்ததில்லை. எங்கள் அன்புக்குரிய மா அவளுடைய மேலுலகப் பயணத்தில் கூட எங்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கிறார் மேலும் நாங்கள் ஒருபோதும் முன்பு இருந்தது போல் இல்லை, இதை நான் நிச்சயமாக அறிவேன்.”

அனாமதேயம், பின்லாந்து: “அவளுடைய மறைவு அவள் வழங்கிய மிகப்பெரிய கோரக்கூடிய மற்றும் குறிப்பிடத்தக்க சேவையைப் பற்றிய அதிக புரிதலை – நம் அனைவருக்கும் மட்டுமல்லாமல், இத்தனை ஆண்டுகளாக இப்பெரிய உலகிற்காகவும் கொண்டு வந்தது.”

எஃப். பி., பிரேசில்: “பக்தர்கள் ஆகிய நமக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிற்கும் இது ஒரு மாபெரும் இழப்பாகும். ஏனெனில் ஒரு பெரிய மகான் மற்றும் கடவுளின் காதலன் இனி இந்த பூமியில் நடக்க மாட்டார் என்பதால், அவளுடைய வாழ்க்கை, அவளுடைய செய்தி மற்றும் அவளுடைய பரிபூரண சீடர்களின் உதாரணம் பல தசாப்தங்களாக நம் அனைவரையும் ஊக்கப்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை, நான் அவளுடைய புத்தகங்களைப் படித்தேன், அவளுடைய ஒலி நாடாக்களைப் பலமுறை கேட்டேன் என்று சொல்லலாம், அவளுடைய குரல் என் மனதில் நிரந்தரமாகப் பதிவுசெய்யப்பட்டது, அவளுடைய வார்த்தைகள் என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கின்றன. அவள் எப்போதும் என் சாதனாவில் ஊக்கப்படுத்தும் ஒரு ஆழமான ஆதாரமாக இருக்கிறாள் மற்றும் இருப்பாள். அவளை இவ்வளவு காலம் எங்களுடன் இருக்கும்படி கேட்டதற்கு தெய்வீக அன்னைக்கு நான் நன்றி கூறுகிறேன். இழப்பு பற்றி வருத்தப்பட்டாலும், தயா மாதாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர் இப்போது எங்கள் தெய்வத்தாயின் எல்லையற்ற ஆனந்தக் கடலில் சுதந்திரமாக இருக்கிறார். அவள் தற்போது எங்கு இருக்கிறாளோ, குருவின் உடனிருந்து, எங்களை தொடர்ந்து வழிநடத்துவாள் மேலும் எங்களுக்காக பிரார்த்திப்பாள் என்று நான் நம்புகிறேன்’.

A.R. இத்தாலி:”நான் அவளுக்கு பல முறை எழுதியிருக்கிறேன், மேலும் எங்கள் ஒவ்வொருவரிடமும் அவள் கொண்ட தனிப்பட்ட ஆர்வத்தால் நான் ஆச்சரியப்பட்டேன், எப்போதும் அன்பு மற்றும் ஞானத்தின் எண்ணங்களுடன் பதிலளிப்பது, அவள் செய்ததைப் போல பொறுமை மற்றும் அன்புடன் சாதனாவைப் பின்பற்றுவதற்கான நடைமுறை ஆலோசனைகள்.

“அவள் தெய்வத்தாயினுடைய அன்பின் ஒரு தெளிவாகத் தெரியக் கூடிய வெளிப்பாடாக இருந்தாள் – அன்பின் வடிவம், எங்கள் குருவின் அன்பு மற்றும் தெய்வீகத்தின் அன்பு!”

எஸ். பி., ஜார்ஜியா: எஸ். பி., ஜார்ஜியா: “பரமஹம்ஸ யோகானந்தாஜி தனது உடலை விட்டு வெளியேறிய பிறகு, ‘அன்பு மட்டுமே என் இடத்தை பிடிக்க முடியும்’ என்றார். அன்பு என்பது படைப்பாளரை நோக்கி எப்போதும் படைப்பை இழுக்கும் வலிமைமிக்க உலகளாவிய ஈர்ப்புவிசை என்பதை புனிதமான விஞ்ஞானம் என்ற புத்தகத்திலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.இந்த உலகில் யாரும் ‘அன்பை’ கொடுக்க முடியாது; தெய்வீக அன்பு நம்முள் பாய்ந்து பரவும் வகையில் நம்மை நாமே தூய்மைப்படுத்த மட்டுமே முடியும். இதைத்தான் ஸ்ரீ தயா மாதா அழகாகவும் முழுமையாகவும் செய்தார். அவள் எங்கு சென்றாலும், தெய்வீக அன்பு அவளிடமிருந்து பிரகாசமாக வெளிப்படும். வருடாந்திர எஸ்ஆர்எஃப் மாநாட்டில் அவள் பேசியபோது, அவளுடைய அன்பின் அதிர்வு போனாவென்ச்சர் ஹோட்டலில் உள்ள கலிபோர்னியா பால்ரூமை முழுவதுமாக நிரப்பும், மேலும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் பக்தர்களாக இல்லாவிட்டாலும் கூட அனைவராலும் அது உணரப்படும். மேலும், அவளுடைய அன்பு அவளது உண்மையான, மாசற்ற பணிவினால் அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியமாக இருந்தது. மனிதகுலத்தின் முழு வரலாற்றிலும், அறுபது ஆண்டுகளாக ஒரு பெரிய அமைப்பின் தலைவர், அந்த அமைப்பின் வெற்றிக்கான புகழாரத்தை எடுத்துக் கொள்ள ஒரு முறையாவது முயற்சி செய்யாத மற்றொரு உதாரணத்தை எனக்குத் தெரியாது. ஸ்ரீ தயா மாதா ஒருபோதும் செய்ததேயில்லை; அவளுடைய எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களில் அவள் எப்போதும் புகழாரத்தை, உண்மையில் அப்புகழாரம் எங்கு சொந்தமோ அவர்களுக்குக் கொடுத்தாள் – நம் குருவுக்கும் இறைவனுக்கும்.
.”வருங்கால தலைமுறை ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் ஆசிரம சன்னியாசிகள் மற்றும் சாதாரண சீடர்கள் ஸ்ரீ தயா மாதாவின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொண்டு தங்கள் சொந்த வாழ்க்கையை கருணை மற்றும் பணிவான அன்புடன் வாழ ஊக்குவிக்கப்படுவார்கள்.”

ஜே.சி., போர்ச்சுகல்: “மிகச் சிறந்த குருமார்கள் உள்ளனர்: அவர்கள் நமது உலகத்தின் குழப்பமான காலங்களின் போது, இருளிலும், வழி தெரியாத விரக்தியிலும் இருக்கும் மனிதகுலத்திற்கு வழி காட்டும் ஒளிக்கற்றைகளைப் போன்றவர்கள்; பின்னர் சீடர்கள் இன்னும் முக்கியமான பணியுடன் இருக்கிறார்கள்: அவர்களின் வேலை அந்த ஒளிக்கற்றையை பராமரிப்பதும் உணவளிப்பதும் ஆகும், இதனால் அது ஒருபோதும் மறைந்து போகாது அல்லது மங்காது, இதனால் அது பிரச்சனையான நேரங்களில் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும். எங்கள் மரியாதைக்குரிய ஸ்ரீ தயா மாதா மேற்கொண்ட பணியும் அதுதான்.” அவள் எங்கள் குருதேவரின் போதனைகள் மற்றும் பணியின் ஒளி காப்பாளர் போல் இருந்தாள்’

ஈ.ஆர்., நியூயார்க்:  “நம்முடைய மிகவும் பிரியமான ஸ்ரீ தயா மாதாஜி போன்ற ஆன்மாவின் நிலைமாற்றத்துடன் தொடர்புடைய உணர்வுகளை – வேகமான நீரோட்டத்தைப் போன்ற – வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம். தற்போதைய துவாபர யுகத்தில், நிகரற்ற தீவிரத்துடன் அவள் குருதேவரின் தூய்மை மற்றும் ஆணைகளை மிக உன்னிப்பாகப் பாதுகாத்தாள்.

“அவளது குறைபாடற்ற தன்னலமற்ற தன்மை, அவளது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அவளது வியக்கத்தக்க விசுவாசம், அவளுடைய மிகவும் ஆற்றல்மிக்க ஆன்மீகம் மற்றும் அவளது திணறச் செய்யும் எளிமை ஆகியவை இன்றைய உலகில் ஆழமாக பற்றாக்குறையான மற்றும் புண்பட்ட காணாமல் போன குணங்கள்; ஆயினும், எப்போதாவது, என்றைக்காவது அந்த ஒருவன் நேருக்கு நேர் வருவதை நாம் அனைவரும் ஆர்வத்துடன் விரும்ப வேண்டும் என்பதற்காக அவள் முழுமையான அன்பையும் பக்தியையும் கொண்டு சென்றாள்-ஒரு சரியான மற்றும் நிகரற்ற முன்மாதிரியை அமைப்பது மட்டுமல்லாமல், விரைவில் நகலெடுக்க வாய்ப்பில்லாத ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றாள்.

“மனித மனநிலையிலிருந்து/மனோபாவத்திலிருந்து தயா மாதாஜியின் வாழ்க்கையின் நோக்கம் எளிதாக நழுவி விடுகிறது. வார்த்தைகள் சொல்லப்படலாம், புத்தகங்கள் எழுதப்படலாம், ஆனால் இறைவன் மற்றும் குருதேவரின் பணிக்கான அவளுடைய சீரிய ஒத்திசைவு என்றென்றும் வாழும் ஒன்றாகும். அதை நாம் அனைவரும், விதிவிலக்கு இல்லாமல், நம் வாழ்வில் பின்பற்றவும், செயல்படுத்தவும் பார்க்க வேண்டும்.

“அவள் ஒரு உண்மையான தலைமை தாங்குபவர், இறைவன் மற்றும் குருவின் அன்பின் சுடரை ஒரு உண்மையான போர்வீரனின் துணிவுடன் சுமந்து, காரணம் மற்றும் அவளுடைய பேரரசனுக்காக அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருந்தாள்.”

O. மற்றும் D. B., பல்கேரியா: “மாதாஜிக்கு கருத்தை தெரிவிக்கவும், அவருடைய அன்பும் கருணையும் எங்கள் இதயங்களைத் தொட்டது மற்றும் தெய்வீக உற்சாகத்தால் அதை நிரப்பியது.”

எல். எம்., கனெக்டிகட்: “தயா மாதாஜியை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு இல்லை, ஆனால் எனது பல வருட சாதனாவில் அவள் பலமுறை கனவில் என்னிடம் வந்தாள். ஒரு முறை ஒரு அன்பான நண்பருக்காக அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தீவிர பிரார்த்தனையின் போது, அம்மா வந்து அவரது நெற்றியை என்னுடையதுடன் ஆசீர்வதித்து அழுத்தி, பிரார்த்தனையின் போது என் நண்பனுக்காக அதையே மனக்கண்முன் காட்சிப்படுத்தி செய்வதை ஒரு சக்திவாய்ந்த வழியாக உள்ளுணர்வில் எனக்குக் காட்டினார். அவ்விதமாக, நீங்கள் பார்க்கிறீர்கள், என் வாழ்க்கையில் அம்மாவின் இருப்பு மிகவும் உண்மையான மற்றும் உறுதியான வழியில் இருந்தது, இருப்பினும் அவளை உடலால் சந்திக்கவில்லை.”

அநாமதேய, ஜெர்மனி: “”நான் ஒரு கதையும் சொல்ல விரும்பவில்லை; அவள் என் இதயத்தில் இருக்கிறாள் என்று மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன். அவள் என் இலட்சிய மனிதர். நான் அவளைப் போல இருக்க விரும்புகிறேன்.”

அநாமதேய, கலிபோர்னியா:“2003 ஆம் ஆண்டில், என் அம்மாவும் என் கணவரும் மெட்டாஸ்டேடிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர், இருவரும் வாழ்வதற்கு குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டது. அவர்கள் ஏறக்குறைய ஒரே சமயத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். என்னால் கிழக்குக் கடற்கரைக்கு இறுதிப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது, என் அம்மா அமைதியாக கடந்து செல்லும் அவரது இறுதி நேரத்தில் அவரை என் கரங்களில் ஏந்தும் பரிசும் வழங்கப்பட்டது.

அவள் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, என் கணவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால், வீடு திரும்ப எனக்கு அழைப்பு வந்தது. நான் வீட்டுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார், அவர் வாழ்வார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அன்று இரவு நான் தெய்வத்தாயிடம், அந்த நேரத்தில் அவள் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தாலும், தயவுசெய்து அதை உறுதிப்படுத்த எனக்கு ஒரு மனித அடையாளத்தைக் கொடுங்கள் என்று ஆழ்ந்த பிரார்த்தனை செய்தேன். நான் என் மையத்தை பராமரிக்க போராடிக்கொண்டிருந்தேன், மேலும் சில சமயங்களில் துக்கம் மூழ்கடிக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தது.

“அதற்கு மறுநாளே தாய் மையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், ஏனென்றால் நான் தாய் மையத்திற்கு அழைக்கவோ எழுதவோ இல்லை. அந்த அழகிய குரல் கூறியது, ‘தயா மாதாஜியிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி உள்ளதால், நீங்கள் ஒரு சன்னியாசினியுடன் பேசுவதற்கான சந்திப்பை நான் திட்டமிட விரும்புகிறேன், ஆனால் நான் அதை செய்வதற்கு முன், தெய்வத்தாய் உங்களுடன் இருக்கிறார் என்று உங்களிடம் நேரடியாகச் சொல்லும்படி அவள் என்னிடம் கேட்டாள்.’ அந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மண்டியிட்டேன், அளவு அல்லது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியால் உள்ளுக்குள்ளேயே அழுதேன். சில கணங்கள் கழித்து ஒரு சன்னியாசினி போனுக்கு வந்து, அன்பான மாதாஜியின் செய்தியைப் படித்து, என் ஆத்மாவுக்கு ஆறுதல் கூறினார்.

இறைவன் மற்றும் குருதேவருடனான அன்பிற்குரிய மாதாஜியின் பரிபூரண ஒத்திசைவு மற்றும் அனைவரிடமும் அவள் கொண்ட பெருங்கருணை மற்றும் அன்புக்கு இது ஒரு ஆழமான எடுத்துக்காட்டு. அன்பிற்குரிய மாதாஜியை அவரது ஸ்தூல வடிவத்தில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை, ஆனால் அவளுடைய அன்பும் கருணையும் என் இதயத்திலும் ஆன்மாவிலும் பதிக்கப் பெற்றிருக்கிறேன்.”

டபிள்யூ. சி., ஆஸ்திரேலியா: “, என்னால் மாதாவைப் பார்க்கவும், 1993 இல் நடந்த மாநாட்டில் அவள் பேசுவதைக் கேட்கவும் முடிந்ததை எனது மிகப்பெரிய ஆசீர்வாதமாக உணர்கிறேன். அந்த மாலையை என் வாழ்க்கையின் மிக மதிப்பு மிக்க அனுபவங்களில் ஒன்றாக நான் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றுவேன்.

அவள் அறைக்குள் நுழைந்த தருணம் அந்த இடம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டது என்றால் அதைத் தூய்மையான அன்பு என்று மட்டுமே என்னால் விவரிக்க முடியும்.
நான் அந்த உணர்வை வெறுமனே என்றென்றும் பிடித்துக் கொள்ள விரும்பினேன்.

அநாமதேய, கனடா: “அவள் முன்னிலையில் இருப்பது என்பது ஒரு அனுபவம், நான் மறக்கவே மாட்டேன். நாங்கள் அவளுடைய அன்பின் அலைகளில் குளித்தோம், அது எங்களை மகிழ்ச்சியின் கண்ணீரால் திடமாக்கியது.”

எஸ். டபிள்யூ., ஒரேகான்: “எங்கள் அன்புக்குரிய தயா மாதாஜி மற்றும் எஸ்ஆர்எஃப் போதனைகளுடன் ‘வளர்ந்த’ எங்களுக்கு, அவள் எங்களுடன் இருப்பது அற்புதமாக இருக்கிறது, மேலும் அவளுடைய அன்பை முன்பை விட மிகவும் உறுதியாக உணர்கிறேன். இத்தனை வருடங்களாக நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருப்பதாகவும், மேலும் அவள் எனக்கு இணையாக ஓடி வந்து கொண்டிருந்தாள் என்றும் நான் உணர்கிறேன் – நான் அதிகமாக தடுமாறினால் என்னை நிலைநிறுத்த தயாராக இருந்தாள். எப்படியோ நான் நன்றாக இருப்பேன் என்று எனக்குத் தெரியும். குரு-சிஷ்ய உறவு மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் நமக்குக் கொடுத்த போதனைகளுக்கு மாறாத அர்ப்பணிப்பு மற்றும் பாராட்டு- மற்றும் நாங்கள் எப்போதும் நேசிக்கப்படுகிறோம் என்று அவள் தன் உதாரணத்தின் மூலம் எனக்குக் கற்றுக் கொடுத்தாள். இப்போதோ அந்த அன்பை அனைவருக்கும் அனுப்ப அனுமதிப்பதற்கு. “

எம். எஸ்., ஜெர்மனி: “எங்கள் அன்புக்குரிய ஸ்ரீ தயா மாதாவின் மறைவைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது அது என்னை வேதனைப்படுத்தியது. முப்பது வருடங்களுக்கும் மேலாக எனது முழு ஆன்மீக வாழ்க்கைப் பாதையில் என்னுடன் எங்கள் அன்பான மா தலைவர் மற்றும் ஆன்மீக தலைமையாக சேர்ந்து வந்துள்ளார். நான் மகிழ்ச்சியை உன்னுள் கண்டுபிடி என்ற மாவின் புத்தகத்தை எடுத்து 1948 இல் அவளது மரணத்திற்கு அருகில் இருந்த அனுபவத்தைப் பற்றிப் படித்தேன். இது எனக்கு ஆறுதலளித்தது மற்றும் அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஆன்மீக குடும்பத்தின் அடித்தளமாகவும், எஸ் ஆர் எஃப் அமைப்பாகவும் இருக்க மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த பணியை அவள் மேற்கொண்டாள் என்பது என்னை நன்றியால் நிரப்பியது! அப்போது அவள் அனுபவித்த அந்த அருமையான அன்பில் அவள் இப்போது முழுமையாக மூழ்கிவிட்டாள் என்று நான் நம்புகிறேன்.”

L. W., ஒரேகான்: “நான் அவளுக்கு எழுதும்போதெல்லாம், அவள் எப்போதும் எனக்கு பதிலளித்தாள்; அவள் அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று நான் சொன்னாலும், அவள் எவ்வழியிலேனும் செய்தாள். உலகெங்கிலும் உள்ள எத்தனை பேரை மிகுந்த சிரத்தையுடன் தன் சிறகுகளுக்கு அடியில் எடுத்துக் கொண்டு அவள் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு எழுதி, அறிவுரை கூறி, பிரார்த்தனை செய்தாள்! தயா மா ஒரு உண்மையான மகான். நான் இதுவரை சந்தித்ததிலேயே மிக அழகான ஆன்மா. அவளுடைய எடுத்துக்காட்டு மற்றும் அவளுடைய நிபந்தனையற்ற அன்பின் காரணமாக என் வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது.”

என்.எஸ்., இந்தியா: “2001 -ல் நான் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். நான் தயா மாவின் ஆசீர்வாதங்களை கேட்டு அவளுக்கு எழுதினேன், ஆனால் அவளுடைய மிகப்பெரிய பொறுப்புகளையும் அவளது நேரத்திற்கான பல கோரிக்கைகளைப் பற்றியும் அறிந்ததால், உண்மையில் பதிலை எதிர்பார்க்கவில்லை. எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கும்படியாக, ஒரு பதில் உடனடியாக வந்தது, இந்த முயற்சியை ஊக்குவித்து விரிவான ஆலோசனைகளை வழங்கியது. அக்கடிதத்தின் தொனி இதமாகவும் மிக நெருக்கமான உணர்வுடனும் இருந்தது, அவள் என்னை காலம் காலமாக அறிந்தது போல், நிஜம் என்னவென்றால் நாங்கள் சந்தித்ததேயில்லை.

இது மெய்யாக, உண்மையாக, என் நல்ல அதிர்ஷ்ட வசீகரமாக இதுவரை உள்ளது – நான் அம்மாவின் கடிதத்தை கண்ணாடி சட்டத்திற்குள் வைத்து இத்தனை வருடங்களாக என் அலுவலக அறையில் வைத்திருந்தேன். அவள் கடிதம் வந்தபோது அதை ஒரு நல்ல சகுனமாக நான் பார்த்தேன், ஒருவேளை அது எதிர்பாராதது என்பதால். பெருநிறுவனங்களின் ‘காட்டில்’ உள்ள என்னைப் போன்றவர்களுக்கு மாவின் அப்பழுக்கற்ற குணமும் சேவைசெய்யும் இயல்பும் ஒளி காட்டும் கலங்கரை விளக்காகும்.’அன்பு, சேவை, மற்றும் மீதமுள்ளதை, இறைவனுக்கு விட்டு விடுங்கள்’ என்ற அவரது குறிக்கோள் எனது வணிக பயணத்தில் மிகவும் ஊக்கமளித்தது. எட்டு தடையற்ற தசாப்தங்களாக, குருவின் கொள்கைகளை அத்தகைய களங்கமற்ற முறையில் நிலைநாட்டியதற்காக அவளைப்பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்!’’

ஹெச். எஸ்., கலிபோர்னியா: “தயா மாதாஜியை நான் நேரில் சந்தித்ததேயில்லை, ஆனால் நான் அவளை எப்பொழுதும் அறிந்தவன் போல் அவள் உடலை விட்டுச் செல்வதை உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரையில் அவள் மலைபோன்ற வலிமை மற்றும் பாதுகாப்பின் பிரதிநிதியாக இருந்தாள் – அவள் அங்கு இருக்கிறாள் என்று வெறுமனே அறிவதே எனக்கு ஆறுதல் அளித்தது…… அவள் ஞானம், கருணை மற்றும் அன்பின் உருவகம் – இவை அனைத்தும் ஒரு மனித வடிவத்தில்.”

ஈ.பி., கலிபோர்னியா: “அவள் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை என்னால் முழுமையாக விவரிக்க முடியாது: அவள் எனக்கு பெண் தன்மை கொண்ட தெய்வீக அழகு மற்றும் அன்பின் மாதிரியாக மாறிவிட்டாள்.”

ஆர்.கே., ஜெர்மனி: “”அன்புக்குரிய ஸ்ரீ தயா மா….. பல ஆண்டுகளாக உங்கள் கடிதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். குருதேவரும் நீங்களும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளீர்கள். உங்கள் அறிவுரை, நிபந்தனையற்ற அன்பு மற்றும் இடைவிடாத ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உதவியது. ஓ அம்மா, நான் உங்களை எப்போதும் நேசிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்திற்காக நான் என் இதயத்தையும், மனதையும், ஆன்மாவையும் இன்னும் திறந்து வைப்பேன். உங்கள் பரிசுத்த புத்தகமான ‘அமைதியான இதயத்தில் நுழையுங்கள் ‘ (டை ஸ்டிம் டெஸ் ஹெர்சன்ஸ்) எனது தினசரி பைபிள் ஆகும்!”

ஜி. டி., கலிபோர்னியா: “”1970 களின் பிற்பகுதியில், ஸ்ரீ தயா மாதா மாநாட்டுக்கு பிறகு பக்தர்களுக்கு வழங்கிய சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவளுடைய பேச்சுக்குப் பிறகு, ஒவ்வொரு பக்தரையும் அவர்கள் தேவாலயத்திலிருந்து கிளம்பும் பொழுது அவள் வாழ்த்தினாள். நான் அவளுக்கு நமஸ்காரம் செய்தபோது, நான் அவள் கண்களுக்குள் பார்த்தேன். அந்த எல்லையற்றதற்குள் இறைவனின் கண்களுக்குள் பார்ப்பது போல் இருந்தது. அவை முடிவற்ற ஆழங்களாக இருந்தது. நான் இதை ஒருபோதும் அனுபவித்ததில்லை. அவள் புன்னகையுடன் என்னை தாய் மையத்திற்கு வருமாறு அழைத்தாள், ஒரு பிரமிப்புடன் நான் தேவாலயத்திலிருந்து கிளம்பினேன். இந்த அனுபவத்தை நான் மறக்கவேயில்லை…….“குருதேவரை தெரியாத எங்களைப் போன்றவர்களுக்கு, அவர் கற்பித்த எல்லாவற்றிற்கும் அவள் வாழும் உதாரணமாக இருந்தாள் ….”

ஜி. எச்., கலிபோர்னியா: “பல வருடங்களுக்கு முன்பு, தாய் மையத்தில் ஸ்ரீ தயா மாதாவை சந்திக்க பக்தர்கள் குழுவுடன் வருமாறு நான் அழைக்கப்பட்டேன். நாங்கள் நூலகத்தில் அமர்ந்திருந்தபோது, அவள் எங்களுக்கு ஒரு முன்னறிவிப்பில்லாத/திடீர் சத்சங்கத்தைக் கொடுத்தாள். தயா மாதாவின் கண்களால் நான் முற்றிலும் நிலைகுத்தி நின்றேன். ‘கடலைப் போல் ஆழமான பார்வை’என்ற சொற்றொடரை நான் கேள்விப்பட்டிருந்தேன், ஆனால் இதற்குமுன் அப்படி ஒருவரின் கண்களை நான் பார்த்ததில்லை, மேலும் அது போன்ற மிகப்பெரிய ஆழம், வலிமை மற்றும் அழகை அவள் கண்களில் பார்த்தேன். எங்கள் அன்பான மாவின் சம காலத்தில் இந்த பூமியில் நான் நடை பயின்றதை கௌரவமாக உணர்கிறேன்.”

எம்.பி., நெவாடா: “”தயா மா என் வாழ்க்கையை எவ்வளவு பாதித்திருக்கிறார் என்பதை என்னால் விவரிக்கக் கூட முடியவில்லை. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக, அவளுடைய பேச்சுக்களைக் கேட்பது அல்லது அவளுடைய வார்த்தைகளைப் படிப்பது என் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அவை உண்மையில் என் வாழ்க்கையை வடிவமைத்தன. தவறாமல் அவள் என்னை உற்சாகத்துடனும் ஆன்மீக உறுதியுடனும் கடவுளுக்காக ஏங்கவும் வைத்தாள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பிற்குரிய இறைவனுடன் அத்தகைய உணர்வுபூர்வமான, இனிமையான, அன்பான, நம்பிக்கையான மற்றும் போதை தரும் நட்பை வளர்க்க அவள் எனக்கு உதவினாள்.”


தயா மா என் தியானங்களை உண்மையாக இறைவனுடன் தோழமை கொள்ளும் நேரமாக மாற்ற எனக்கு உதவினார். என் கடவுளின் முன்னிலையில் என் கடமைகளை அன்பின் செயல்களாக செய்ய அவள் எனக்கு உதவினாள். சீடராக இருப்பதன் அர்த்தம், நண்பனாக இருப்பதன் அர்த்தம், தாழ்மையான வேலைக்காரனாக இருப்பதன் அர்த்தம், தலைவராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அம்மா எனக்குக் காட்டினார் – ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவள் ஒரு காதலனாக இருப்பது என்றால் என்ன என்பதைக் காட்டினாள் . கடவுள் மீது பக்தி கொண்ட மது அருந்திய ஒரு காதலன்.”

அநாமதேய, மேரிலாந்து: “அவளுடைய இருப்பு, சாதனைகள், உதாரணம், ஒரு நட்சத்திரத்தைப் போல பல தலைமுறைகளுக்கும் பிரகாசிக்கும். ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் வடிவத்தில் இந்தியாவின் மிகச் சிறந்தவர் லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்தார்.”

எஸ். எல்., டெக்சாஸ்: “அவளுடைய வாழ்க்கை கதை எண்ணிலடங்கா வண்ணம் என்னுடன் பேசியது. குருவின் மீதான அவரது தவறாத பக்தி மற்றும் எஸ்ஆர்எப் மீதான அவரது தலைமை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இறைவனுடன் ஆழ்ந்த தொடர்பைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒரு ஆன்மீக வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றி அவள் எனக்கு தொடர்ந்து உத்வேகம் கொடுத்தாள். என் வாழ்நாள் முழுவதும் அவள் எவ்வளவு செல்வாக்கு என் மீது செலுத்தினாள் மற்றும் தொடர்ந்து செலுத்துவாள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.”

அநாமதேய, ஸ்பெயின்: :“அவளை வெறுமனே பார்த்தாலே உங்களுக்குத் தெரியும், எந்தவிதமான சந்தேகம் என்ற நிழலையும் தாண்டி, ஸ்ரீ தயா மாதா ஒளியின் இருப்பு, முழுமையான அன்பு மற்றும் நற்குணம் கொண்டவராக இருந்தார் என்பதை, எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஸ்ரீ தயா மாதா ஒரு வற்றாத உத்வேகத்தின் ஆதாரமாக இருந்தார், இருக்கிறார், இருப்பார் அத்துடன் பரமஹம்ஸ யோகானந்தரின் உண்மையான சீடர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார்’.

பி. டி., கலிபோர்னியா: “நான் மாவை நினைக்கும் போதெல்லாம் அன்பை உணர்ந்தேன்.”

எச்.டபிள்யூ ஆஸ்திரேலியா: பரந்த பசிபிக் பெருங்கடல் இனி என்னை ஸ்ரீ தயா மாதாஜியின் காந்த இருப்பிலிருந்து பிரிக்காது. எங்கள் அன்புக்குரிய தலைவர், வழிகாட்டி, ஆசிரியர், நண்பர் தனது குருவிடம், ஒளி உலகிற்குள் சென்றுவிட்டார். அவளுடைய இனிமையான மகிழ்ச்சி ஆனந்தத்தின் அலைகளாக எங்கள் இதயங்களைக் குளிப்பாட்டுகிறது. நாங்கள் கரையில் எஞ்சியிருந்தாலும், நாங்கள் சோர்ந்து போகவில்லை அல்லது அங்கே அவள் குருவின் பக்கத்தில் இருக்கிறாள் என்று வருத்தப்படவும் தேவையில்லை.
குருவும் சிஷ்யனும்-அவர்களின் அன்புக் கதிர்கள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன. இரக்கத்தின் தாய், உங்கள் கருணை நிரம்பிய வாழ்க்கைக்கு நன்றி. ”

என்.ஆர்., கனடா: “பூமியோ அல்லது சொர்க்கமோ, ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா எனக்கு முன் உள்ள பாதையை ஒளியூட்டுகிறார்.”

இதைப் பகிர