தக்ஷிணேஸ்வரம் ஆசிரமத்தைச் சென்றடையும் வழிகள்

இரயில் வண்டி மூலம்

கொல்கத்தாவில் இரண்டு பெரிய இரயில் நிலையங்கள் உள்ளன; ஹவ்ரா மற்றும் சியால்தா.

ஹவ்ரா நிலையம் தில்லி (1450 கி.மீ), மும்பை 1970 கி.மீ), சென்னை (1660 கி.மீ) போன்ற நகரங்களையும் சேர்த்து, நாட்டின் மற்ற பெரிய நகரங்களுடன், நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தக்ஷிணேஸ்வரம் ஹவ்ராவிலிருந்து 15—20 கி.மீ தொலைவில் உள்ளது. ஆசிரமம் செல்வதற்கு மிக எளியதான வழி ஹவ்ரா நிலையத்திற்கு வெளியே முன்-கட்டணம் செலுத்தப்பட்ட வாடகை வண்டியை (டாக்சி) தக்ஷிணேஸ்வரத்திலுள்ள சாரதா மடத்திற்குச் செல்ல அமர்த்திக் கொள்வதுதான் (சுமார் 200 ரூபாய்). ஒய்.எஸ்.எஸ். ஆசிரமம் சாரதா மடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

இதைவிட செலவு குறைந்த மாற்று வழியானது உள்ளூர் ரயில் வண்டி மூலம் உத்தார்பாரா இரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து படகு மூலம் ஹூக்ளி நதியைக் கடந்து ஆசிரமத்தை அடைவதுதான். ஆசிரமம் படகுத்துறையிலிருந்து 10 நிமிட நடைதூரத்தில் உள்ளது.

சியால்தா, வடக்கு, வடகிழக்கிலிருந்து வரும் இரயில்களுக்கும் புறநகர் இரயில்களுக்கும் இறுதி நிறுத்தமாகும். தக்ஷிணேஸ்வரம், சியால்தா-தாங்குனி இரயில்பாதையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. தக்ஷிணேஸ்வர இரயில் நிலையத்திலிருந்து ஆசிரமம் சுமார் 1கி.மீ தூரம் உள்ளது. அங்கு சைக்கிள் ரிக்கஷாக்களும் மூன்று சக்கர வாகனங்களும் எளிதாகக் கிடைக்கும்.

ஆசிரமத்திற்கு மிக அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம் சியாம்பஜார்.

விமானம் மூலம்

டம்டம் மிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் கொல்கத்தாவை இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள பல நகரங்களுடன் இணைக்கிறது. தக்ஷிணேஸ்வரம் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது. முன்கட்டணம் செலுத்தப்பட்ட வாடகை வண்டிகள், (டாக்ஸிகள்) சுமார் ரூ200க்கு கிடைக்கப்பெறும். தஷிணேஸ்வர சாரதா மடத்தின் அருகில் அரியதாஹாவிலுள்ள யோகதா என்று கேளுங்கள்.

இதைப் பகிர