பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் இருந்து ஜன்மாஷ்டமிக்கான செய்தி

ஜன்மாஷ்டமி-2021

"உருவத்திலும் அம்சத்திலும் அழகானவர், வசீகரத்தையும் நடத்தையிலும் தவிர்க்க முடியாதவர், தெய்வீக அன்பின் திருவுருவம், அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுப்பவர், சிறுவன் கிருஷ்ணன் சமூகத்தில் அனைவராலும் விரும்பப்பட்டான். . . ." --- பரமஹம்ஸ யோகானந்தா, அர்ஜுனனுடன் கடவுள் பேசுகிறார்: பகவத் கீதை

அன்புக்குரியவர்களே!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினத்தை பேரானந்தத்துடன் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். எல்லா இடங்களிலும் உள்ள எண்ணிலடங்கா ஆன்மாக்களை ஒருங்கிணைத்து இருக்கும் அன்பின் அவதாரமான மகத்தான தெய்வீகத்திற்கு நம் அன்பையும், பக்தியையும் மற்றும் நன்றியையும் காணிக்கையாக்குகிறோம்.

இந்த ஜென்மாஷ்டமியில், ஸ்ரீ கிருஷ்ணரின் சிறப்பான அருளும், ஆசீர்வாதங்களும், தெய்வீக ஞானத்தால் அவர் உருவகப்படுத்தி அதற்கு உதாரணமாகத் திகழ்ந்த சரியான செயல்பாடுகளுடன் கூடிய சமநிலை வாழ்க்கையை நமக்குள்ளும் ஊக்குவிக்கும். பகவத்கீதையில் பொதிந்துள்ள அவரது உலகளாவிய போதனைகளை உள்வாங்குவதன் மூலம் நாம் கடந்து செல்லும் காலங்களைப் பற்றி நேரடியாகவும் ஆழமாகவும் பேசுகின்றோம். நமக்குள் நாமே நம் ஆன்மாவின் அழியாத குணங்களான- தைரியம், நம்பிக்கை, அச்சமின்மை- ஆகியவற்றை விழிப்படையச் செய்து நம் சோதனைகள் நம்மை மூழ்கடிக்காதவாறு மனத்தை உருவாக்க வேண்டும். ஆனால் அவை நாம் வீர மற்றும் வெல்ல முடியாத தெய்வீக இயல்பை வெளிப்படுத்த வேண்டும். இறைவன் மற்றும் அவதாரங்கள் மீது மேற்கொள்ளப்படும் தினசரி தியானம் நமக்கு எல்லா வகைகளிலும் மற்றும் எல்லா வழிகளிலும் கடந்து வரவும், கடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும் சமமான எண்ணம் மற்றும் ஆக்கபூர்வமான உள்ளுணர்வு ஆகிய தோல்வியற்ற வளங்களை அணுகவும் வழிவகை செய்கின்றது.

நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் அர்ஜுன-பக்தனுக்கு பகவான் கிருஷ்ணர் அறிவிக்கும் செய்தி இதுதான். அநாதகம், மனம் ஆன்மாவை பரம்பொருளுடன் ஒருமுகப்படுத்தி கீதையில் போற்றப்படும் கிரியா யோகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அகத்தே எழும் குருக்ஷேத்திரம் போன்ற யுதங்களை நம்மால் அறிவுபூர்வமாகவும், அமைதியாகவும் வெற்றிப் பெறுவதற்குச் சிறப்பாக தயாராகி விடுகிறோம். அன்பினால் வழிநடத்தப்பட்ட மற்றும் அமைதியான சரியான செயல்பாடுகள் மூலம் நம் குடும்ப சூழலிலும் நம் சமூகங்களுக்கும் சமாதானம் ஏற்படுத்துபவர்களாக மாறுகின்றோம், கடவுளின் குழந்தையாக ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மரியாதை செலுத்துவதன் மூலம் இணக்கமான தொடர்பை உருவாக்குகின்றோம்.

நமது ஆன்மாவின் உள்ளார்ந்த குணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் பகவான் கிருஷ்ணர் மற்றும் பிற மகான்கள் செய்ததைப் போல இறைவன் உணர்வு நிலையில் வாழவும், சேவை செய்யவும், அவருடைய பிரகாசமான ஒளியையும், அன்பையும் நம் பாதையில் பயணிக்கும் அனைவருக்கும் வழங்கவும் நமக்கு சக்தி ஏற்படுகிறது. மனிதகுலம், “அனைவருக்கும் அன்பையும், பேரானந்தத்தையும் அருளும் தெய்வீக உருவமான” அன்பான கிருஷ்ணரின் அடிச்சுவட்டைப் பணிவுடன் பின்பற்றி பரம்பொருளின் உள்ளடக்கத்தில் இணைந்து பயணிப்போம். தெய்வீகமாக இருப்பதற்கான நமது விருப்பத்தின் மூலம் நம் ஆற்றல்களை பெருக்கி நிலையான மற்றும் நிச்சயமான ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் செய்தியும் ஆசீர்வாதங்களும் உங்களை இடைவிடாமல் வழி நடத்தட்டும்.

– சுவாமி சித்தானந்த கிரி

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.