யோகதா சத்சங்க இதழுக்கான புதிய பாதை

16 செப்டம்பர், 2021

அமெரிக்கா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் வழக்கமாக தொடர்பு கொள்வதற்காக, பரமஹம்ஸ யோகானந்தர் 1925 ஆம் ஆண்டு ஸெல்ஃப் ரியலைஸேஷன் (யோகதா சத்சங்க) இதழை முதன்முதலில் அறிமுகப்படுத்தியபோது, அவர் கூறினார்,”நான் உங்கள் அனைவருடனும் இந்த இதழின் பத்திகள் மூலம் பேசுவேன்.” ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக ஆன்மீக வாழ்க்கைக்கான இந்த இதழ், காலத்தால் அழியாத உலகளாவிய உண்மைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக குருமார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு அவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த உதவியது – பல ஆயிரக்கணக்கானோருக்கு தங்கள் வாழ்க்கையை மாற்றவும் மற்றும் இறைவனின் நேரடி அனுபவத்தை பெறவும் காலம் கடந்து நிற்கும் யோகத்தின் கொள்கைகள் மற்றும் உத்திகளை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

வரும்காலத்தில், யோகதா சத்சங்க இதழின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கான எங்கள் திட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இவை நமது குருதேவரின் கிரியா யோகத்தின் போதனைகளைப் பரப்புவதில் அடைந்த குறிப்பிடத்தக்க சமீபத்திய வளர்ச்சிகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை. நீங்கள் அறிவீர்கள், 2019 ஆம் ஆண்டு யோகதா சத்சங்கா சொஸைடி ஆஃப் இந்தியா ஒய் எஸ் எஸ் பாடங்களின் முழுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. இவை இதுவரை வெளியிட்டிராத அளவு பரமஹம்ஸரின் போதனைகள் மற்றும் உத்திகளின் மிக ஆழமான விளக்கங்களை உள்ளடக்கியது. மேலும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அவருடைய எழுத்து, சொற்பொழிவு மற்றும் பக்தர்களுக்கு அவர் அளித்த தனிப்பட்ட அறிவுரை ஆகியவற்றின் மொத்தத்திலிருந்து அதிக அளவில் எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை பாடங்கள் தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு, புதிய கிரியா யோக பாடங்கள் தொடர், அதைத் தொடர்ந்து பல முக்கிய பாடங்கள் அடங்கிய துணைப் பாடங்கள் தொடரும் வெளியிடப்பட்டது மற்றும் பல ஆண்டுகள் இவை தொடர்ந்து வெளியிடப்படும். விரைவில் நாங்கள் உயர்நிலை பாடங்கள் (கிரியாபான்களுக்கு மட்டும்) மற்றும் வாராந்திர ‘பரமஹம்ஸ யோகானந்தருடன் சத்சங்கம்’ தொடர்களை அறிமுகப்படுத்துவோம். இது ஒய் எஸ் எஸ் பாட மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கூடுதலான வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளுக்கான ஊற்றாக விளங்கும்.

புதிய ஒய் எஸ் எஸ் பாடங்கள் மற்றும் நமது ஆன்லைன் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் – ஒய் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் ஒய் எஸ் எஸ்-ஐப் பற்றி முதன்முறையாக அறிந்து கொண்டவர்கள் – அளித்த வரவேற்பு மிகவும் உற்சாகம் தரும் வகையில் உள்ளது, அத்துடன் பரமஹம்ஸரின் போதனைகள் தங்களை மாற்றும் திறன் கொண்டவை என்பதையும் மற்றும் இன்றைய உலகின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் அவை இருப்பதையும் பலர் அறுதியிட்டு கூறியுள்ளனர். இந்த விரிவான பல்வேறு கருத்துக்கள் அடங்கிய போதனைகள், ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் -க்காக நமது குருதேவர் மனதில் எண்ணியிருந்த உலகளாவிய ஆன்மீக சமூகம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அதிக அளவில் உணர உதவியது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வெல்லா நிகழ்ச்சிகள் மூலம், 1925ல் நமது பத்திரிக்கையின் முதல் இதழ் வெளியானதில் இருந்து சிறிய அளவில் பரவத் தொடங்கிய ஆன்மீக எழுச்சி பன்மடங்கு அதிகரித்து, பரமஹம்ஸரின் போதனைகளின் ஞானம் மற்றும் ஊக்கத்தை முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆன்மீகத்தேடலில் ஈடுபடுபவர்களுக்குக் கிடைக்கச் செய்தது, பத்திரிகையை துவக்கிய பொழுது இருந்ததைவிட அதிக அளவில்.

யோகதா சத்சங்க இதழுக்கான புதிய வருடாந்திர அச்சு வெளியீடு

சமீபத்தில் விரிவாக விளக்கப்பட்டு வெளியிடப்பட்ட நம் குருவின் போதனைகள் அடங்கிய இப்பாடங்கள் தொடர்பாக, ஒய் எஸ் எஸ் பாடங்கள் மற்றும் ஆன்லைனில் நாங்கள் வழங்கும் பலவிதமான நிகழ்ச்சிகளுடன் ஒருங்கிணைந்து, யோகதா சத்சங்க பத்திரிகை அதன் பணியை எவ்வாறு சிறப்பாக தொடர்ந்து நிறைவேற்றுவது என்பது குறித்து மறு பரிசீலனை செய்துள்ளோம். உங்களில் பெரும்பாலோருக்குத் தெரியும், கடந்த இருபது வருடங்களில், தகவல்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுவதிலும் மற்றும் உலக மக்களிடம் அவற்றை பரப்புவதிலும் நமது உலகம் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் மற்றும் பிற அச்சிடப்பட்ட ஊடகங்கள் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செயல் திறனில் குறைந்துவிட்டன; இணையதளங்கள், ஆன்லைன் வீடியோ மற்றும் பிற டிஜிட்டல் மீடியாக்கள் முன்பை விட பலதரப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மிகப் பெரிய வாய்ப்புகளை அளித்துள்ளன. மேலே குறிப்பிட்டுள்ளபடி, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா இவற்றிலிருந்து பல வழிகளில் பரிணாம வளர்ச்சியடைந்து பயனடைந்துள்ளது. இது பத்திரிகைக்கான நமது திட்டங்களுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

உடனடியாகத் தொடங்கி, அச்சிடப்பட்ட பத்திரிகையை வெளியிடும் எண்ணிக்கையை குறைக்கும் அதே வேளையில், ஆன்லைனில் எழுச்சிமிக்க மல்டிமீடியா நிகழ்ச்சிகளை தொடர்ந்து அளிப்பதை அதிகரித்துள்ளோம். நாங்கள் “யோகதா சத்சங்க இதழ்என்ற ஒய் எஸ் எஸ் வலைத்தளத்தின் சிறப்புப் பிரிவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.” மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, யோகதா சத்சங்கத்தின் சிறப்பு பெரிய வடிவ அச்சிடப்பட்ட இதழ், தற்போதைய காலாண்டு இதழ்களுக்குப் பதிலாக ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வெளியிடப்படும். இந்த யோகதா சத்சங்க வருடாந்திர அச்சிடப்பட்ட இதழ்களில் பரமஹம்ச யோகானந்தரின் முன்னர் வெளியிடப்படாத ஊக்கம் அளிக்கும் கட்டுரைகளும், தற்போதைய மற்றும் கடந்த ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர்களின் கட்டுரைகளும் அடங்கும். கூடுதலாக, பிற ஆசிரியர்களின் கட்டுரைகள், ஊக்கம் மற்றும் வாழும் கலை பற்றிய வழிகாட்டுதலை பரவலாக வழங்கும்; மேலும் அந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க ஒய் எஸ் எஸ் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் இருக்கும்.

இந்த சிறப்பு ஆண்டு இதழ்களை நமது வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவார்கள் என்று நம்புகிறோம்; அதே நேரத்தில், இந்த மாற்றம் ஒய் எஸ் எஸ் பாட மாணவர்களுக்கு இப்போது கூடுதல் பாடங்கள் மற்றும் பிற பாடத் தொடர்கள் மூலம் அவர்கள் பெறுகின்ற விலைமதிப்பற்ற போதனைகளில் கவனம் செலுத்துவதற்கும், அவற்றை கிரகிப்பதற்கும் அதிக நேரத்தை வழங்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை இதற்கு முன் வெளியிடப்படாதவை. YSS பாடங்களைப் பற்றி மேலும் அறிக) நான்கு காலாண்டு இதழ்களுக்குப் பதிலாக ஒரு வருடாந்திர இதழ் என்ற இந்த திட்டம் அடுத்த 2 – 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அதன் பிறகு, வரும் ஆண்டுகளில் இதழின் பணிக்கான சிறந்த பங்கு குறித்து நாங்கள் மறு மதிப்பீடு செய்வோம்.

ஜனவரி 2022 இல் வெளியிடப்படும் 2022 ஆண்டு இதழ், அடுத்த அச்சிடப்பட்ட இதழாகும். இதற்கிடையில், புதிய யோகதா சத்சங்க ஆன்லைன் வலைப்பக்கத்தை. பயன்படுத்த வாசகர்களை அழைக்கிறோம். இதில் கீழ்க்கண்டவை அடங்கும்:

  • முன்னர் அச்சிடப்பட்ட இதழிலும் மற்றும் எங்களது இணையதளத்தில் வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள விஷயங்களுக்கான தொகுக்கப்பட்ட இணைப்புகளின் பட்டியல்: வலைப்பதிவு உள்ளீடுகள்,  ஒய் எஸ் எஸ் செய்திகள் போன்றவை.
  • அனைத்து ஆன்லைன் சேவைகள், சத்சங்கங்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானங்கள் அடங்கிய எளிதில் பயன்படுத்தக்கூடிய நூலகம்.
  • வருடாந்திர அச்சு இதழின் டிஜிட்டல் பதிப்பு  (வெளியிடப்பட்ட பிறகு).

நீங்கள் பதிவுசெய்யவில்லை என்றால், dev.yssofindia.org/enewsletter-க்கு சென்று அவ்வாறு செய்யுமாறு இப்போது நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். ஒவ்வொரு பதிவிலும் பல புதிய ஊக்கம் தரும் தகவல்கள் இடம்பெற்று, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்பப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில், பத்திரிகையின் கடந்தகால இதழ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல வருடத்திய ஊக்கம் தரும் விஷயங்களை உள்ளடக்கிய சிறப்பு ஆன்லைன் நூலகத்தையும் நாங்கள் துவக்குகிறோம். பரமஹம்சர், ஸ்ரீ தயா மாதா மற்றும் பிற அபிமான ஆசிரியர்களுடைய படைப்புகளின் நூற்றுக்கணக்கான பக்கங்களும் – யோகதா சத்சங்கem> பத்திரிக்கை வாசகர்கள் கடந்த காலத்தில் ஆர்வத்துடன் உள்வாங்கிக் கொண்ட கருத்துக்கள் அடங்கிய படைப்புகள் – அத்துடன் அரிய புகைப்படங்கள் மற்றும் ஒய் எஸ் எஸ் செய்திகளும் ( இப்போது ஒய் எஸ் எஸ் வரலாறு! ) அதில் அடங்கும். இந்த அரிய ஞான-புதையல் ஒய் எஸ் எஸ் இணையதளத்தில் என்றும் இருக்கும் மற்றும் வருடாந்திர அச்சு பதிப்பிற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

வருடாந்திர அச்சிட்ட இதழைப் பெறவும் (இது டிஜிட்டல் வடிவத்திலும் கிடைக்கும்) மற்றும் ஆன்லைன் நூலகத்தில் இடம்பெற்றுள்ள கடந்தகால இதழின் கட்டுரைகளை வாசிப்பதற்கும், யோகதா சத்சங்கத்திற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்பது பற்றிய கூடுதல் தகவல்களை எங்களது யோகதா சத்சங்க இதழ் வலைப்பக்கத்தில் விரைவில் வெளியிடுவோம். இதற்கிடையில், நீங்கள் பத்திரிகையில் உள்ள பல இலவச கட்டுரைகளை வாசிக்கலாம், மேலும் இன்னும் கிடைக்கக்கூடிய முந்தைய அச்சு இதழ்களை நீங்கள் வாங்க விரும்பினால், கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் எங்கள் புத்தகக் கடையில் வாங்கலாம். இந்தியாவின் ஆன்மீக ஞானம் மற்றும் பரமஹம்ச யோகானந்தரின் தனித்துவமான அறிவுரைகள் மற்றும் நடைமுறை போதனைகளை உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஊக்கமளிக்கும் இதழை – நீங்கள் புதிதாக – அல்லது முதல் முறையாக படித்து மகிழும் அதேவேளையில் உங்களுடன் இந்தப் பயணத்தைத் தொடர நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

இதைப் பகிர