அவேக்: தி லைஃப் ஆஃப் யோகானந்தா, ஜுன் 17 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது

 அவேக்: தி லைஃப் ஆஃப் யோகானந்தா, இந்தியாவில் திரையிடப்பட்ட முதற்காட்சி பற்றிய செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது, கிரியா யோகத் தியானம் குறித்த தனது விரிவான போதனைகள் மூலம் இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவரும், மேலைநாட்டில் யோகத்தின் தந்தை என்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டவருமான பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த ஆவணப்படம் ஆகும்.

அவேக் திரைப்படத்தைப் பற்றி:

அவேக்: தி லைஃப் ஆஃப் யோகானந்தா 1920-களில் மேற்கத்திய நாடுகளுக்கு யோகா மற்றும் தியானத்தைக் கொண்டுசென்ற பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றிய வழக்கத்திற்கு மாறான ஒரு சுயசரிதமாகும். இவர் ஆன்மீக இலக்கியமான– ஒரு யோகியின் சுயசரிதம் எழுதியருளியுள்ளார். இப் புத்தகம் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளன மேலும் இன்று சாதகர்கள், தத்துவவாதிகள், யோக ஆர்வலர்கள் ஆகியோர்
தேடக் கூடிய ஒரு புத்தகமாகும். (ஸ்டீவ் ஜாப்ஸ் தனது ஐபேட்-ல் வைத்திருந்த ஒரே புத்தகம் இதுதான் என்பது வெளிப்படை.)

பாவ்லோ டி ஃப்லோரியோ, லிஸா லீமன், பீடர் ராடர் (கௌன்டர்பாய்ன்ட் ஃபிலிம்ஸ், லாஸ் ஏஞ்ஜலிஸ், கலிஃபோர்னியா) ஆகியோரின் விருது-பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் குழுவால் மூன்று வருடங்களாக, உலகம் முழுவதிலும் 30 நாடுகளின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம், நவீன மற்றும் புராதன, கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய யோக உலகத்தினை ஆராய்ந்து, இலட்சக் கணக்கானோர் ஏன் இன்று தமது கவனத்தை அகமுகமாக, லோகாயத உலகத்தின் வரையறைகளை எதிர்த்து ஆன்ம-அனுபூதியைத் தேடுவதில் திருப்பியுள்ளனர் என்று ஆய்வு செய்கிறது.

 ““மறு-உருவாக்கங்கள் மற்றும் மனத்தை ஈர்க்கும் நிஜமான காட்சிகளின் ஓர் இசைவான கலவையைப் பயன்படுத்தி, இந்த சம-நடுநிலைப்பாடான ஆவணப்படம் தனது பார்வையாளர்களை — ஒரு மகானின் வாழ்க்கை முழுதூடாக, கருவில் அவரது முதல் உணர்வுகளிலிருந்து, 1952-ல் லாஸ் ஏஞ்ஜலிஸ்-ல் பில்ட்மோர் ஹோட்டலில் ஒரு பெரிய கூட்டத்தினரிடம் ஒரு கவிதையைக் கூறிய பின் அவர் வெறுமனே அப்படியே தனது உடலை நீத்த அந்தத் தருணம் வரை. . . .கொண்டு செல்கிறது — இந்த நிகழ்வுகளுக்கு இடையில் அவர் மேற்கத்திய உலகை மாற்றினார்.” —

– திரைப்பட விழா வலைதளத்திலிருந்து.

மேலும் தகவலுக்கு:  AWAKE theYogananda Movie.com

விருதுகள்

“ஒரு தற்காலத்திய மனிதனை அகமுகமாக நோக்க வைக்குமளவு வலிந்து ஈர்க்கக் கூடியது.” — தி நியூ யார்க் டைம்ஸ்

“கவனத்தை ஈர்க்கின்ற, மனவெழுச்சியூட்டுகின்ற. . . காவியம். . . படத்தயாரிப்பாளர்கள், ஆரம்பத்திலிருந்து உங்களை உணர்ச்சிபூர்வமாக மாட்டிவிடுகின்றனர்.” — யோகா ஜர்னல்

“ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கவனத்தை மூழ்கடிப்பதும், தகவல் அளிப்பதுமாகும்.” — தி வில்லேஜ் வாய்ஸ்

“அவேக், ஒரு முழுமையான புதையல், கவனிப்பது மட்டுமன்றி, அனுபவிக்கவும் வேண்டும்.” — தி மூவி நெட்வொர்க்

“கனவுத்தோற்றமானது, மயக்குகின்றது. . .
இயக்குனர்கள் பாவ்லோ டி ஃப்லோரியோ மற்றும் லிஸா லீமன், தடங்கல்களை அடக்கி ஆள்கின்றவர்கள்”

“காவியம் மற்றும் காலத்தைக் கடந்தது”

“அறிவொளியூட்டுகிறது! கவர்ந்திழுக்கிறது! கருத்தாழமிக்கது! இது உங்களது இதயம், மனம் மற்றும் ஆன்மாவிற்கு ஊட்டமளிக்கும்.”

“மிகவும் விசேஷமான ஒருவரைப் பற்றிய மன-வசியப்படுத்தும் திரைப்படம்.”

அவேக்: தி லைஃப் ஆஃப் யோகானந்தா (தமிழ் வசனங்கள்)

ஜூன் 13 முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.