கோவிட்-19 பணிமுடக்கத்தின் போது YSS ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது
நன்கொடை அளிப்பீர்
கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச எல்லைகளைத் தாண்டி வேகமாகப் பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் பணிமுடக்கத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்திய அரசு மார்ச் 25, 2020 முதல் நாடு தழுவிய பணிமுடக்கத்தை அறிவித்துள்ளது. மேலும் பணிமுடக்க நிலை 2020 மே முதல் வாரம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை அனைவரையும் பாதித்துள்ளது, ஆனால் அனைவருக்கும் மேலாக வறுமையின் விளிம்பில் வாழ்பவர்களான – தினசரி கூலித் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்களை இது பாதித்துள்ளது. பணிமுடக்கம் விதிக்கப்பட்ட உடனேயே, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, சமுதாயத்தின் இந்தப் பிரிவினர்களுக்கு உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்கத் தொடங்கிவிட்டது. அதே சமயம், இந்த மனிதாபிமானப் பணிக்காக அனைத்து பக்தர்களும் முன்வருமாறும், நன்கொடை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

பக்தர்கள் தங்கள் முழுஇமனதுடன் வேண்டுகோளுக்கு பதிலளிக்கின்றனர்

தட்சிணேஸ்வர் :: சேரிகளில் உள்ள 300 குடும்பங்களுக்கு திட்ட உணவு விநியோகம் செய்ய தன்னார்வலர்களுடன் சுவாமி அச்யுதானந்தாஜி
நாங்கள் வேண்டுகோள் விடுத்த உடனேயே, நன்கொடைகள் வரத் தொடங்கின. பக்தர்கள் தேவையிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளுக்கு அன்பு, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மையின் வெளிப்பாடாக தங்கள் இதயங்களைத் திறந்தனர்.
இந்த தாராளமான பங்களிப்புகளால், ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் தங்களது ஆசிரமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பல ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்க முடிந்திருக்கிறது. ஒய் எஸ் எஸ் தேவைப் படுபவர்களை அடையாளம் காண உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை சென்று சேர்க்க Zomato’s Feeding India மற்றும் உள்ளூர் குழுக்கள் போன்ற பிற அரசு சாரா நிறுவனக்களுடன் கூட்டு சேர்ந்து
YSS கேந்திராக்களும் மற்றும் மண்டலிகளும் நெருக்கடி நிலையை சமாளிக்கும் ஆற்றல் உடையவையாய் விளங்குகின்றன.

நொய்டா: நொய்டா ஆசிரமத்தைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் உலர் உணவுப் பங்கீடுகள் விநியோகம்
கோவிட்-19 நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு தனது கேந்திரங்களையும் மண்டலிகளையும் கோருவதற்கு YSS தயங்கிக் கொண்டிருந்தது, ஏனெனில் பணிமுடக்க நிலையில் இந்தப் பணியைச் செய்ய தன்னார்வலர்கள் கிடைப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். இருப்பினும், கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல், பல YSS கேந்திராக்களும் மற்றும் மண்டலிகளும் ஆர்வத்துடன் அண்டை பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வந்தனர். அவர்கள் தங்கள் சொந்த சுற்றுப்புறத்தில் உள்ள ஏழைகளை கவனித்துக்கொள்வதன் மூலம் “அன்பை செயலில்” கொண்டு வருகிறார்கள்.!

நொய்டா: நொய்டா ஆசிரமம் வழங்கிய நிவாரணப் பொருட்களை விநியோகிக்க காவல்துறை உதவுகிறது
வறியவர்களுக்கு உதவுவதோடு, ஒய் எஸ் எஸ் காவல்துறையினருக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் இயன்ற வழிகளிலெல்லாம் ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. ஒய் எஸ் எஸ் நொய்டா ஆசிரமம் காவல் துறையினருக்கு குடிநீர் பாட்டில்கள், பழச்சாறுகள் மற்றும் முகக்கவசங்களை சப்ளை செய்து வருகிறது. YSS தியான கேந்திரா – கோயம்புத்தூர் தங்கள் பகுதியில் உள்ள பல நூறு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளனர். ராஞ்சிக்கு அருகிலுள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 2,700 குடும்பங்களுக்கு குளியல் மற்றும் சலவை சோப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பக்கத்தில், நாடு முழுவதும் உள்ள YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளிடமிருந்து எங்களுக்கு வந்து கொண்டிருக்கிற “சேவா”வின் சில புகைப்பட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் செய்யும் சேவை செய்தித்தாள்கள் மற்றும் பதிவர்களின் கவனத்தை ஈர்த்தது, அவர்கள் தங்கள் ஊடகங்களில் செய்திகளை அச்சிட்டும், டிஜிட்டல் முறையிலும் வெளியிட்டனர். அந்த அறிக்கைகளில் சிலவற்றையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த நெருக்கடியின் பிடியில் உள்ளவர்களின் இதயங்களில் நம்பிக்கையின் விளக்கை ஏற்றி வைப்பதில் தங்கள் நேரம், வளங்கள், நிதி உதவி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் இதயத்தின் அன்பு முதலிய வடிவத்தில் பங்களித்த YSS பக்தர்கள் மற்றும் அனைத்து அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவன துணைவர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.
இறைவனும் மற்றும் குருமார்களும் உங்கள் அனைவரையும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் அன்பின் அனைத்து உள்ளடக்கிய ஒளியில் வைத்திருக்க வேண்டும் என்பது எங்கள் இதயப்பூர்வமான பிரார்த்தனை.





ஊடகச் செய்திகள்
மே 11
மே 4
ஏப்ரல் 30
ஏப்ரல் 29
ஏப்ரல் 21
ஏப்ரல் 19
ஏப்ரல் 18
ஏப்ரல் 12
ஏப்ரல் 11
ஏப்ரல் 10
ஏப்ரல் 9