கிறிஸ்துமஸ் செய்தி 2021

6 அக்டோபர், 2021

அன்புக்குரியவர்களே,

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகக் குடும்பத்தினருக்கும், உலகெங்குமுள்ள நண்பர்களுக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். நாம் ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் மறுபிறப்பைக் கொண்டாடும் இந்த பேரானந்தம் மிக்க பருவத்தில் ஒளியும் ஆன்மீக சக்தியும் உங்களுக்கு உத்வேகமளித்து மேம்படச் செய்யட்டும்.

அன்பான அவதாரம் (இறைவனின் தனிப்பட்ட வெளிப்பாடு) தன்னுள் அனைத்தையும் தழுவிய கிறிஸ்து உணர்வுநிலை (கூடஸ்த சைதன்யா) இயேசு மற்றும் மகாவதார் பாபாஜி இருவரும் என்றும் அழியாத இணைந்து புகழ்பெற்ற கிரியா யோகத்தை இந்தியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குப் பரவச் செய்தனர். இயேசு மற்றும் பாபாஜியின் உத்தரவுகளை ஏற்ற பரமஹம்ஸ யோகானந்தர் அவர்களது உன்னதமான போதனைகள் மற்றும் நுட்பங்களை உலகம் முழுவதும் பரப்பினார். இதனால் நம் ஒவ்வொருவருக்கும் பிறக்கவிருக்கும் எல்லையற்ற குழந்தை இயேசுவிற்காக நம் சொந்த தொட்டிலை உருவாக்கும் இதயம் ஏற்படுகின்றது. புனித உணர்வு நிலையுடன் கூடிய தியானத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் நமக்குள் நாமே உண்மையான “இயேசுவின் இரண்டாம் வருகையைக்” கண்டு கொள்ளலாம். என் இதயம் கனிந்த பிரார்த்தனை என்பது பரலோக காந்தமும், அருளும், பிரகாசமான வான் மண்டலங்களில் இருந்து சிறப்பான சக்தியுடன் இந்த புண்ணிய காலத்தில் ஆழமாக தியானம் செய்யும் உங்கள் ஆன்மாவை அன்பானதாகவும் வாழ்க்கையை மாற்றும் கடவுளின் இருப்பை உணர்த்தி அனைத்து உயிரினங்களையும் ஒரே தெய்வீகக் குடும்பமாக இணைக்க வேண்டும் என்பதாகும். இதுவே உலகம் முழுவதும் உள்ள பரமஹம்ஸஜியைப் பின்பற்றுபவர்களின் உண்மையான ஆன்மீக கொண்டாட்டமாக இருக்க வேண்டுமென்று ஆண்டின் இந்த நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கிறோம்.

பின்னர் நமக்குள் விழித்திருக்கும் தெய்வீகத்தால் புதுப்பிக்கப்பட்டு, அந்த உணர்வு நிலையை நாம் அழகான சமூக கொண்டாட்டங்களிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரங்களிலும்- பிரகாசமான ஒளி மற்றும் பேரானந்தத்தை நமது அன்பானவர்களுக்கு வழங்குவதோடு, அன்பு, புரிதல் மற்றும் பாராட்டு போன்றவற்றையும் நமது பரிசாக வழங்குகிறோம். கிறிஸ்துவின் பேரொளியில் நாம் இத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் போது எங்கே சென்றாலும் தானாக நல்லிணக்கத்தைப் பரப்புகிறோம். நமது தியானத்தினாலும் கருணைமிக்க செயல்களினாலும் பிறருக்குச் செய்யும் சேவையினாலும் இந்தப் புத்தாண்டு முழுவதும் நமது உணர்வுநிலை விரிவடைந்து ஒவ்வொரு நாளும் புதிய தெய்வீக அன்பால் நிரப்பப்படுவதை உணர்கின்றோம். இதன் மூலம் அமைதி மற்றும் நல்லெண்ணம் நமது சமுதாயங்களிலும், தேசங்களிலும், உலகிலும் பரவ நாம் தனிப்பட்ட முறையில் பங்களிக்கிறோம்.

இவையே இந்த கிறிஸ்துமஸுக்கு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர் களுக்கும் கூறும் என் ஆன்மாவின் வாழ்த்துக்கள் — மறுபிறப்பு என்ற உங்கள் சொந்த உணர்வு நிலையில் எப்போதும் உலகளாவிய இயேசுவின் தன்மை மற்றும் கிறிஸ்துவின் அன்பு மற்றும் பேரானந்தம் ஆகிய இவையே மனித குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் அவர் வழங்கும் நித்திய பரிசு.

உங்களுக்கு மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆன்மீக ரீதியில் நிறைவானதாக அமையட்டும்!

சுவாமி ஶ்ரீ சிதானந்த கிரி

இதைப் பகிர