ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து கிறிஸ்துமஸ் செய்தி

9 டிசம்பர், 2016

கிறிஸ்துமஸ் 2016

கிறிஸ்மஸ் புனித பருவத்தில், அனைத்து படைப்புகளிலும் பரவும் எல்லையற்ற கிறிஸ்துவின் பிரகாசிக்கும் அன்பினாலும் ஆனந்தத்தினாலும் முழு உலகமும் மிகவும்  உணரக்கூடிய வகையில் ஆசீர்வதிக்கப்படுகிறது. அது உங்கள் வாழ்க்கையை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் ஏற்புத்திறன் மிக்க இதயங்களில் மேம்படுத்தும், ஒத்திசையச் செய்யும் தாக்கத்தை  எப்போதும் ஏற்படுத்த முயலும்  இறைவனின் மகிமை மற்றும் அன்பின் வல்லமை மீதான விசுவாசத்துடன்  ஒளிரச் செய்யப் பிரார்த்திகிறேன். உலகளாவிய கிறிஸ்து உணர்வுநிலை [கூடஸ்த சைதன்யா] முழுவதுமாக வெளிப்பட்ட இயேசுவின் பிறப்பைப் பற்றிய நமது மகிழ்ச்சியான கொண்டாட்டம், நாமும் கூட இறைவனின் ஒளியில் பிறந்தவர்கள், அவருடைய எல்லையற்ற உணர்வுநிலையையும் அன்பின் ஆற்றலையும் பிரதிபலிக்கும் திறனைப் பெற்றுள்ளோம் என்ற உணர்வை நம்மில் எழுப்பட்டும்.

இறைவன் தனது குழந்தைகளை மீண்டும் தம்மிடம் அழைத்து வர அனுப்பும் அனைத்து மகான்களின் வாழ்க்கையிலும், அந்த தெய்வீக உணர்வுநிலையின் சர்வ வல்லமை தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவர்களும் கூட அவருடைய மென்மை, கருணை மற்றும் அளவற்ற அன்பான அக்கறையை ஒவ்வொரு ஆன்மாவிற்காகவும் வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதற்கல்லாமல்  உதவுவதற்காகவே, இயேசு தம்முடைய ஆற்றலை பயன்படுத்தினார்; தனக்கு சேவை புரியப்படுவதை நாடுவதற்கு பதிலாக உடல் ரீதியான அல்லது ஆன்மீகத் தேவை உள்ளவர்களுக்கு பணிவுடன் சேவை செய்யப் பயன்படுத்தினார். அவரது வாழ்க்கையின் உலகளாவிய செய்தி என்னவென்றால், இறைவன் அன்பு வடிவானவன், மற்றும் கிறிஸ்துவின் உணர்வுநிலையின் சாராம்சமே அன்பு தான். நமது ஆன்மாக்களின் மேன்மையான தெய்வீக ஆற்றலின் சாசுவத நிறைவேற்றத்திற்கு வழிவகுக்கும் பணிவு, தன்னலமற்ற தன்மை மற்றும் நிபந்தனையற்ற அன்பின் வழியை நமக்குக்காட்டும் அவர், நம்மில் ஒருவராகப் பிறந்தது உண்மையிலேயே அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு தெய்வீகப் பரிசாகும். கிறிஸ்துவை போன்ற அந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்வதும், அதன்மூலம் நம் மனங்கள் மற்றும் இதயங்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதும் தான் அவருக்குப் பிரதிபலனாக நாம் அளிக்கக்கூடிய ஒரு பரிசு; மேலும் இதன் மூலம் அவரது பிறப்பின் ஆன்மீகக் கொண்டாட்டத்தில் மேலும் ஆழ்ந்து பங்கேற்கலாம். “கிறிஸ்து மென்மையின் தொட்டிலில் பிறந்தார்” என்று குருதேவர் நமக்கு நினைவூட்டினார். “வெறுப்பின் அழிவு சக்தியை விட அன்பின் இரக்க சக்தி பெரியது. பிறரிடம் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது அன்புடன் இருக்கட்டும். யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். யாரையும் மதிப்பீடு செய்யவேண்டாம். யாரையும் வெறுக்காதீர்கள், அனைவரையும் நேசிக்கவும்; எல்லாவற்றிலும் கிறிஸ்துவைப் பாருங்கள். உங்களுக்கு கிடைத்த அருளாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.” இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றும் ஒவ்வொரு ஆன்மாவும் முதல் கிறிஸ்துமஸில் தேவதூதர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அறிவார்: அவரவர் சொந்த வாழ்க்கையின் அமைதியும் நல்லெண்ணமும், அனைத்து உலகத்துடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

இயேசுவின் எல்லையற்ற கிறிஸ்து அன்பை முழுமையாக அனுபவிக்க, அவரை காத்துப் பேணிய நிறைவு எனும் ஊற்றிலிருந்து நாம் பருக வேண்டும். இந்த கிறிஸ்துமஸில் புனித அக மௌனத்திற்குள் ஆழ்ந்து சென்று, தியானம் மற்றும் அகத் தொடர்பின் மூலம், உங்கள் இருப்புக்கு ஆதாரமானவரிடமிருந்து நித்தியமாகப் பாயும் தெய்வீக அன்பு மற்றும் ஆனந்தத்தின் நீரூற்றைத் நாடவும். அதன் குணப்படுத்தும் நீர் பிரிவுத் தடைகளை விலக்கி செல்வதால், எல்லையற்ற கிறிஸ்துவை உங்கள் விரிவடையும் உணர்வுநிலையில் பெற நீங்கள் இசைவித்திருப்பீர்கள். இந்த கிறிஸ்துமஸில் அந்த தெய்வீக மகிமையின் அருளும் அருளாசிகளும் உங்கள் இதயத்திற்குப் பாயட்டும், மற்றும் உங்கள் ஆனந்தத்தை உங்கள் எல்லையற்ற சுயத்தின் ஒரு பகுதியான மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்திலும் நிரம்பி வழியட்டும்.

உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும் இறைவனின் ஒளி மற்றும் அன்பு நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

இதைப் பகிர