குரு பூர்ணிமா செய்தி — 2022

8 ஜூலை, 2022

இந்த ஆண்டு ஜூலை 13 அன்று வரும் குரு பூர்ணிமாவிற்கு நமது மதிப்பிற்குரிய தலைவரிடமிருந்து சிறப்பு செய்தி

குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான உறவு நட்பில் அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடாகும்; இது ஒரு பொதுவானதான, ஒருமை இலக்கை அடிப்படையாகக் கொண்ட நிபந்தனையற்ற தெய்வீகத் தோழமையாகும்: இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பதற்கான ஆசை.

— ஶ்ரீ ஶ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

அன்புக்குரியவர்களே,

இந்த புனிதமான நாளில், நமது ஆன்மீக வாழ்க்கையின் புனித அடித்தளமான நமது அன்புக்குரிய குருதேவருடன் இதயம், மனம் மற்றும் ஆன்மாவின் உள்ளார்ந்த ஒத்திசைவை மதிப்பதில் உங்கள் அனைவருடனும் நான் இணைகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் மற்றும் எப்போதும், அவரது தெய்வீக வாக்குறுதியை உங்கள் இதயங்களில் வைத்திருங்கள்: “அறியப்படாது நான் உங்கள் அருகில் நடந்து, கட்புலனாகாத கரங்களால் உங்களைக் காப்பேன்.” அவர் மீதான உங்கள் விசுவாசத்தின் மூலமும், அவர் அளித்த பயிற்சிமுறைகளின் உங்கள் விசுவாசமான பயிற்சியின் மூலமும், நீங்கள் தெய்வீக இலக்கை நோக்கி சீராகவும் உறுதியாகவும் முன்னேறுவீர்கள்.

முழுமையாக, இறைவனுடன்-ஐக்கியப்பட்ட குரு, இறைவனின் அனைத்து குணங்களையும் உள்ளடக்கியுள்ளார் – சர்வஞானம், சர்வவல்லமை, மற்றும் சர்வ வியபாகத்தன்மை – எனவே, குருவின் உதவி, பாதுகாப்பு, வழிகாட்டுதல் மற்றும் அன்பிற்காக நாம் அவரை அணுகும் போதெல்லாம், அவர் நம் ஆன்மாக்களின் ஆழமான அழைப்புக்கு மறுமொழி கூற தயாராக உள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இடைவிடாத அன்புடனும் அருளாசிகளுடனும்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர