சுவாமி சித்தானந்த கிரியின் குருபூர்ணிமா வாழ்த்துச் செய்தி 2021

ஓ! அழிவற்ற குருவே உம்மை மெளனமான இறைவனின் பேசும் குரலாக கருதி வணங்குகிறேன். முக்தியின் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் தெய்வீக வாயிலாக எண்ணி உம்மை பணிந்து வணங்குகிறேன்.

—Sri Sri Paramahansa Yogananda

அன்புக்குரியவர்களே,

இந்த குருபூர்ணிமா தினத்தில், எனது இதயப் பூர்வமான அன்பையும் பணிவான நல்வாழ்த்துக்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாளில், பல நூறு ஆண்டுகளாக ஆன்மீகத்தின் கோட்டையாக விளங்கும் இந்தியாவில், அன்றும் இன்றும் அருளாசி வழங்கிவரும், மெய்ஞானம் பெற்ற குருமார்கள் அனைவரையும் போற்றிப் பணிவோம்.

நமக்கு முக்தி அளிப்பதற்காக இறைவனே அனுப்பி வைத்த நமது தெய்வீக குரு, நம் வழிகாட்டி, நம் அன்பிற்குரிய குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பாதக் கமலங்களில் நாம் நமது ஆழ்ந்த நன்றி அறிதலையும் அன்பான வணக்கங்களையும் சமர்பணம் செய்வோம்.

அவரது இருப்பின் கதிரியக்க ஒளியை நீங்கள் உணர்வீர்களாக. உங்களது இதயத்தை அவரது எல்லையற்ற அன்புக்கும் அருளாசிகளுக்கும் திறந்து வையுங்கள் – ஏனெனில் அது, அனைத்து சோதனைகளையும் கடந்து முன்னேறி நாம் அழிவற்ற பரம்பொருள் என்பதை உணர்ந்து, இறைவனோடு ஐக்கியமாகும் உன்னத குறிக்கோளுக்கு வெகு அருகாமையில் நம்மை கொண்டு சேர்க்கும் உயர் உணர்வு நிலை.

நம்மை அடியோடு மாற்றிவிடும் குருதேவரின் ஸ்பரிசத்தையும் கருணையையும் உங்கள் வாழ்வில் எப்பொழுதும் உணர்வீர்களாக.

தெய்வீக அன்பு மற்றும் ஆசிகளுடன்,

சுவாமி சித்தானந்த கிரி

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.