YSS மூலம் அமைக்கப்பட்ட PHDU

14 அக்டோபர், 2021

அக்டோபர் 6, 2021 அன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ ஹேமந்த் சோரன், கோவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலையை எதிர்நோக்கும் வகையில் சிறப்பாகத் தொடங்கப்பட்ட பல சுகாதார வசதிகளை ஆன்லைன் மூலம் துவக்கி வைத்தார். ராஞ்சி மாவட்டத்தின் அங்காரா பகுதியில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா அமைத்த குழந்தை மருத்துவ உயர் சார்பு பிரிவு (PHDU) அவற்றில் ஒன்று. தொடக்க நிகழ்ச்சியின் போது சுகாதார அமைச்சர் ஸ்ரீ பன்னா குப்தா, கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்ரீ ஏ.கே.சிங் மற்றும் ஒய்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுவாமி ஈஸ்வரானந்த கிரி ஆகியோரும் உடனிருந்தனர்.

2021_கோவிட்_நிவாரண_ராஞ்சி_0020
திறப்பு விழாவிற்கு முன் வார்டின் அலங்கரிக்கப்பட்ட கதவு
2021_கோவிட்_நிவாரண_ராஞ்சி_0048
சுவாமி ஈஸ்வரானந்தா ரிப்பன் வெட்டினார்

மார்ச் 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, ஒய் எஸ் எஸ், இந்தியா முழுவதும் பல்வேறு கோவிட் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது. இந்த அனைத்து செயல்பாடுகளின் சுருக்கமான விவரங்கள் இந்த விஷயத்தைப் பற்றிய எங்கள் முந்தைய வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது, அதை இங்கே படிக்கலாம் .

.

தொற்றுநோயின் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்பே, ஒய் எஸ் எஸ் ஒரு கிராமப்புற மருத்துவமனையில் ஒரு சிறப்பு கோவிட் வார்டை அமைப்பதற்காக ஜார்க்கண்ட் சுகாதாரத் துறையை அணுகியது. அதுவரை, நம் கோவிட் நிவாரண நடவடிக்கைகளில் பெரும்பாலானவை நகர்ப்புறங்களிலும் அதைச் சுற்றிலுமே இருந்தன. ஒரு கிராமத்தில் ஒரு சிறப்பு கோவிட் வார்டை உருவாக்குவதன் மூலம், ஒய் எஸ் எஸ் தனது தொண்டு நடவடிக்கைகளை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்த விரும்புகிறது.

ஜூன் 2021 இல், ராஞ்சி மாவட்டத்தின் கிராமப்புற சமூக சுகாதார மையங்களில் ஒன்றில் பிஎச்டியு-வை நிறுவ உதவுவதற்காக ஜார்க்கண்ட் சுகாதாரத் துறையால் ஒய் எஸ் எஸ் அழைக்கப்பட்டது. ஜார்கண்ட் அரசு, சாத்தியமான மூன்றாவது அலையின் தாக்குதலை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது, மேலும் அதன் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, COVID-19-ன் மூன்றாவது அலை வரும்பொழுது அதிக அளவு பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதன் சுகாதார வசதிகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தது. ராஞ்சி நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிராமப்புற நகரமான அங்காராவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பிஎச்டியு-வை அமைக்கும் பணியை ஒய் எஸ் எஸ் மேற்கொண்டது. மொத்தம் 1.1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 82 கிராமங்களைச் சேர்ந்த ஏழை பழங்குடியினருக்கு இந்த சிஹெச்சி சேவையை வழங்குகிறது.

சிஹெச்சி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் ஒன்றின் முதல் தளத்தில் உள்ள மத்திய ஹால் பிஎச்டியு-வாக புதுப்பிக்கப்பட்டது. முன்பு வெற்று சுவர்களாக இருந்த ஹாலின் சுவர்கள் 7 அடி உயரம் வரை வண்ணமயமான பீங்கான் டைல்களால் மூடப்பட்டுள்ளன. இது வார்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க உதவும். மீதமுள்ள கூரை வரை உள்ள மூன்று அடி இடைவெளியில் குழந்தைகள் விரும்பக்கூடிய படங்கள் வரையப்பட்டுள்ளன, அது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு அன்பான வரவேற்பை அளிக்கிறது .

பிஎச்டியு என்பது மிதமான மற்றும் கடுமையான கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வார்டு ஆகும். இந்த வார்டில், பத்து செமி-ஃபோலர் மருத்துவமனை படுக்கைகள் (படுக்கையின் ஒரு பக்கத்தை உயர்த்துவதற்காக வின்ச் பொருத்தப்பட்ட படுக்கைகள்) உள்ளன. ஒவ்வொரு படுக்கைக்கும் தனி ஆக்சிஜன் சப்ளை மற்றும் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு போன்ற முக்கியத் தேவைகளை தொடர்ந்து கண்காணிக்கும் கருவிகள் உள்ளன. கூடுதலாக,
குழந்தையை கதகதப்பாக வைத்திருக்கும் நிலையங்கள், சிறப்பு ஆக்ஸிஜன் மாஸ்க்குகள், ஆட்டோகிளேவ் மற்றும் சிரிஞ்ச் பம்புகள் போன்ற மிகச் சிறிய குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கான சிறப்பு உபகரணங்களும் உள்ளது.

2021_Covid_Relief_Ranchi_0014
வார்டின் ஒரு காட்சி.
2021_கோவிட்_நிவாரண_ராஞ்சி_0057

நோயுற்ற குழந்தைகளை திறம்பட கண்காணிப் பதற்காக அனைத்து படுக்கைகளும் தெரியும் வகையில் ஹாலின் நடுவில் நர்சுகளுக்கான ஒரு மருத்துவ அறையும் கட்டப்பட்டுள்ளது. வார்டு முழுவதுமாக செயல்படத் தேவையான அனைத்து மின் சாதனங்களின் பழுதுகளை சரி செய்தல், அவற்றை பொருத்துதல் மற்றும் பிளம்பிங் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பிஎச்டியு-ன் தொடக்க விழாவின் போது சுவாமி ஈஸ்வரானந்தா தனது சுருக்கமான உரையில், ஒய் எஸ் எஸ் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கிய ஜார்கண்ட் அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார், மேலும் சுகாதாரத் துறை, அங்காரா சிஹெச்சி-ன் பொறுப்பாளரான மருத்துவ அதிகாரி மற்றும் பிற மருத்துவர்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தார்.

2021_Covid_Relief_Ranchi_0038
துவக்க விழா நிகழ்ச்சியில் சுவாமி ஈஸ்வரானந்தா பேசுகிறார்.

அங்காரா சிஹெச்சி-ல் உள்ள இந்த பிஎச்டியு ராஞ்சி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது. ராஞ்சி மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர்மன்ஜி சிஹெச்சியில் இதேபோன்ற பிஎச்டியு அமைக்கப்படுகிறது. தாராள மனம் கொண்ட ஒய் எஸ் எஸ் பக்தர்கள் பெருமளவில் அளித்த நன்கொடையால் தான், தொற்றுநோய் காலத்தின் போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்புகளை நாங்கள் அமைக்க முடிந்தது. அனைவருக்கும் சேவை செய்ய இறைவன் மற்றும் குருமார்களின் பாதங்களில் அர்ப்பணிக்கப்பட்ட இந்த அற்புதமான அமைப்பை உருவாக்க, தங்கள் நேரத்தையும் சக்தியையும் வளத்தையும் அளித்த இந்த அனைத்து மகத்தான உள்ளங்களுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றி.

இதைப் பகிர