தன்னார்வ சீடர்கள் சங்கம் தொடக்க விழா

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரியுடன் நேரடி ஒளிபரப்பு நிகழ்வு

வியாழன், ஜூலை 1, காலை 7:00 (IST)

சுவாமி சிதானந்த கிரி, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப் ரியலைஸேஷன் ஃபெலோஷிப் தலைவர் மற்றும் ஆன்மீகத் தலைவர், ஒரு சிறப்பு சொற்பொழிவு அளிக்கிறார் மற்றும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தன்னார்வ சீடர்கள் சங்கத்தை ஜூலை 1, வியாழக்கிழமை, காலை 7:00 மணிக்கு (ஐஎஸ்டி),தொடங்கி வைக்கிறார். லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள எஸ் ஆர் எஃப் சர்வதேச தலைமையகத்தில் இருந்து இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

தன்னார்வ சீடர்கள் சங்கம் ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் கிரியா யோகிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் பரமஹம்ஸ யோகானந்தரால் வகுக்கப்பட்ட சாதனையை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்கையை அமைத்துள்ளவர்கள் மற்றும் மனித குலத்தின் மேம்பாட்டுக்காக குருதேவரின் பணியை முன்னேற்றுவதற்கு தங்கள் நேரத்தையும் பொருளையும் அளிப்பதற்கு தயாராக உள்ளவர்கள் ஆவர். தன்னார்வ சீடர்கள் சங்கத்தின் துவக்கமானது, பரமஹம்ஸ யோகானந்தரின் இந்தியாவின் பண்டைய அறிவியலான கிரியா யோகம் மற்றும் அவரது “வாழும் கலை” போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதில் ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.

இந்த துவக்க விழா நிகழ்வின் வீடியோ இந்த நேரடி ஒளிபரப்பிற்குப் பிறகு இந்தப் பக்கத்தில் தொடர்ந்து கிடைக்கும் (இது YSS/SRF YouTube சேனலில் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்).

தன்னார்வ சீடர்கள் சங்கத்தில் பதிவுசெய்தல் இப்போது திறக்கப்பட்டுள்ளது

ஒரு சிறப்பு தன்னார்வ சீடர்கள் சங்கத்தின் இணையதளம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் கிரியாபன் சீடராக இருந்தால், இந்த நேரத்தில் தன்னார்வ சீடர்களின் சங்கத்தில் சேர விண்ணப்பிக்க உங்களை அழைக்கிறோம்.

தயவு செய்து VLD இணையதளத்திற்குச் சென்று உள்நுழையவும் (உங்கள் பக்தர் போர்டல் ஐடியுடன்)

  • VLD இன் நோக்கம், வரலாறு மற்றும் செயல்பாடுகள் பற்றி மேலும் அறிக
  • ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சீடர்களின் ஆன்மீகபாதையில் ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் பயனுள்ள வழிகாட்டியான விரிவான VLD கையேட்டைப் படியுங்கள்.
  • VLD இல் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
    வாலண்டரி லீக் ஆஃப் டிசைபிள்ஸ் இணையதளத்திற்குச் செல்லவும்

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.