பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள், தற்போதைய கடினமான உலகச் சூழ்நிலையில் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப்-ன் உலகளாவிய ஆன்மீகக் குடும்பத்தின் நலனுக்காகவும், அனைத்து மனித இனத்திற்காகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்திற்கான தோல்வியுறாத அக ஆதாரத்தை உங்களுக்குள்ளேயே நாடுவதற்கு உங்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். இந்த அல்லது தேவைப்படும் வேறு எந்த நேரத்திலும் அதைச் செய்வதற்கான உங்கள் முயற்சிகளில் உங்களுக்கு உதவ சில ஆன்லைன் ஆதாரங்கள் இங்கே உள்ளன. வரும் வாரங்களில் கூடுதல் உட்பொருளுடன் இந்தப் பட்டியலைப் புதுப்பிப்போம்:
ஸ்வாமி சிதானந்த கிரியின் செய்திகள்

“நெருக்கடியா அல்லது ஆன்மீக வாய்ப்பா?”என்ற தலைப்பிடப்பட்ட இந்தச் செய்தியில் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, தற்போதைய உலகச் சூழ்நிலையால் முன்வைக்கப்படும் சவால்களை நாம் அனைவரும் எவ்வாறு சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்று வழிகாட்டுகிறார்.
மார்ச் 14 அன்று, ஸ்வாமி சிதானந்தஜி தற்போதைய உலக சூழ்நிலையைப் பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் இந்தக் கடினமான காலத்தை சமாளிப்பதற்கான ஊக்கம் மற்றும் நடைமுறை வழிகாட்டுதலை வழங்குகிறார், அத்துடன் வழிகாட்டப்படும் தியானம் மற்றும் பிரார்த்தனை வழிபாட்டையும் நடத்துகிறார்.
ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையம்

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரா, நீங்கள் இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் சரி, ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் ஏகாந்த மையங்களில் நடத்தப்படும் நேரடி குழு தியானங்களை அனுபவிக்கும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்குகிறது. இந்த தியானங்கள் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் நடத்தப்படுகின்றன. இறைவனுடனும் உலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் மற்றும் சாதகர்களின் ஆன்மீகக் குடும்பத்துடனும் இணைக்கின்ற இந்த சக்திவாய்ந்த வழியில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கானோருடன் சேர உங்களை அழைக்கிறோம்.

வாராந்திர ஆன்லைன் மனவெழுச்சியூட்டும் சத்சங்கங்கள்
தற்போது ஒவ்வொரு வாரமும் ஒய் எஸ் எஸ் அல்லது எஸ் ஆர் எஃப் சன்னியாசி தலைமையில் நடைபெறும் ஒரு புதிய ஆன்லைன் மனவெழுச்சியூட்டும் சத்சங்கத்தை வழங்குகிறோம். இந்த நிகழ்ச்சிகளில் தியானம், பிரபஞ்ச கீதம், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் பற்றிய உரை ஆகியவை அடங்கும். இங்கே வழங்கப்படும் சத்சங்கங்கள் மூலம், நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக குடும்பத்துடன் வாராந்திர தெய்வீகத் தோழமையில் இணைந்துகொள்ள முடியும்.
தயவுசெய்து கவனிக்கவும்: இந்த ஆன்லைன் மனவெழுச்சியூட்டும் வழிபாடுகளை எங்கள் இணையதளத்தின் “வாராந்திர மற்றும் சிறப்பு வழிபாடுகள்” பிரிவில் காப்பகப்படுத்துவோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான-மரபிலிருந்து படிக்க பரிந்துரைக்கப்படுபவை
ஒய் எஸ் எஸ் இணையதளத்தில் எப்படி-வாழ-வேண்டும் பற்றிய ஞானம்
மின்புத்தகங்கள்

ஒளி உள்ள இடத்தினில்: குறிப்பாக அத்தியாயம் 2, “இன்னல் காலங்களில் துணிவு”; அத்தியாயம் 3, “தியானம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்”; மற்றும் அத்தியாயம் 4, “துன்பத்திற்கு மேல் எழுதல்”
உங்களது உள்ளார்ந்த தெய்வீகத்துடன் உங்களை இணைக்க உதவும் வழிகாட்டப்படும் தியானங்கள்

“அச்சமின்றி வாழ்தல்” மற்றும் “அமைதி” உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அனேக வழிகாட்டப்படும் தியானங்களை எங்கள் இணையதளம் வழங்குகிறது. ஒவ்வொன்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்-பின் சன்னியாச சீடரால் வழிநடத்தப்படுகிறது.

பிரார்த்தனை மற்றும் சங்கல்பத்தின் சக்தி
எங்கள் வலைத்தளம் ஒரு முழுப் பகுதியை பிரார்த்தனை மற்றும் சஙகல்பத்திற்கு அர்ப்பணிக்கிறது, இதில் அடங்குபவை:
- நமது வாழ்க்கையையும் நாம் வாழும் உலகத்தையும் மாற்றுவதில் பிரார்த்தனைகளும் சங்கல்பங்களும் ஏன் மற்றும் எவ்வாறு பயன் விளைவிக்கின்றன என்பது பற்றிய விரிவான விளக்கங்கள்
- உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தெய்வீக உதவிக்காக வணங்கி வேண்டிக்கொள்ள நீங்கள் பயன்படுத்தக்கூடிய நடைமுறை உதவிக்குறிப்புகள் மற்றும் குறிப்பிட்ட பிரார்த்தனைகள் மற்றும் சங்கல்பங்கள்
- ஒய் எஸ் எஸ்-ன் உலகளாவிய பிரார்த்தனைக் குழுவில் நீங்கள் எவ்வாறு பங்கேற்க முடியும், அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுடன் உங்களது ஆன்மீக சக்தியை ஒன்றிணைத்து, இறைவனின் ஒளியை எப்போதும் அதிக அளவில் நம் உலகிற்குக் கொண்டு வர உதவ முடியும் என்பது பற்றிய தகவல் — மற்றவர்களை குணப்படுத்துவதற்கு பரமஹம்ஸ யோகானந்தரால் நடைமுறைப் படுத்தப்பட்டு, கற்பிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த யோக உத்தியை எவ்வாறு பயிற்சி செய்வது என்ற போதனைகளும் அடங்கும்

பிரார்த்தனைக்கான கோரிக்கைகள்

குறிப்பிட்ட நபர்களுக்கான பிரார்த்தனைகளுக்கான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் கூட உங்களை அழைக்கிறோம். இவை ஒய் எஸ் எஸ் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி தலைமையிலான ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளைக் கொண்ட யோகதா சத்சங்க சொஸைடி பிரார்த்தனை சபையின் தினசரி பிரார்த்தனைகளில் சேர்க்கப்படும். இக்குழு ஒவ்வொரு காலையும் மாலையும் மற்றவர்களுக்காக ஆழ்ந்த தியானம் மற்றும் பிரார்த்தனையை செய்கிறது மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, போதிக்கப்பட்ட குணப்படுத்தும் உத்தியை செயல்படுத்துகிறது.

ஒய் எஸ் எஸ் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் மற்றும் அறிவிப்புகள்
ஒய் எஸ் எஸ்- இன் செயல்பாடுகள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். மாதாந்திர மனவெழுச்சியையும் முக்கியமான செய்திகளைப் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்புகளையும் பெற எங்கள் செய்திமடலுக்கு ஆதரவளிக்க உங்களை அழைக்கிறோம்.