சிறப்பு நினைவு நாணயம் இப்போது விற்பனைக்கு உள்ளது

அக்டோபர் 29, 2019 அன்று, மாண்புமிகு நிதியமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் 125வது பிறந்தநாளைப் பெருமைப்படுத்தும் விதமாக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு பற்றிய எங்கள் ஆரம்ப செய்திக் கட்டுரையின் தொடர்சிசியாக (முழு கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ), இந்தியாவில் மட்டும் ஒய் எஸ் எஸ் இலிருந்து வாங்குவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான நாணயங்கள் இப்போது உள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். (இந்த நாணயத்தை வெளிநாடுகளுக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளவும், ஏனெனில் இந்திய அரசாங்கத்திற்கு இந்தியாவிற்கு வெளியே நினைவு நாணயங்களின் விற்பனை அல்லது ஏற்றுமதியை அனுமதிக்காத கட்டுப்பாடு உள்ளது).

சுவாமி சிதானந்தா நினைவு நாணயத்தை பக்தர்களுக்கு காட்சிப்படுத்தினார்.
YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்தஜி, 2019 நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் புதிதாக வெளியிடப்பட்ட நாணயத்தைக் காட்சிப்படுத்தினார்.

நாணயம் பற்றி

நாணயத்தினுடைய முகப்பு முகத்தின் உச்சியில், இந்தியில் “பாரத்” மேலும் ஆங்கிலத்தில் “இந்தியா” என்றும் சூழப்பட்டுள்ள இந்திய அரசின் சின்னம் உள்ளது. அதற்குக் கீழே 125 வது பிறந்த ஆண்டு நிறைவு நாள் கருப்பொருளுடன் இணைந்த நாணயத்தின் மதிப்பு “₹ 125விளங்குகிறது. மறுபுறம் நாணய மறுபுற முகப்பில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பரவலாக பாவிக்கப்படுகிற உருவத் தோற்றம் உள்ளது. உருவத் தோற்றத்தைச் சுற்றி இந்தியிலும் ஆங்கிலத்திலும் “ பரமஹம்ஸ யோகானந்தரின் 125வது பிறந்தஆண்டு நிறைவு நாள்” என்ற வார்த்தைகள் உள்ளன.

அறிமுக விளக்கம்

இந்த நாணயம் ஒரு அழகான சேகரிப்பாளர் உறையில் வருகிறது, இதில் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை மற்றும் பணி பற்றிய சுருக்கமான விளக்கம் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் வழங்கப்படுகிறது. நாணய சேகரிப்பாளர்களுக்கு, நாணயத்தின் உலோக கலவையின் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது.

விலை:

இந்தியாவிற்குள் ₹ 5,000 (அஞ்சல் கட்டணம் மற்றும் பேக்கேஜிங் உட்பட).

அனுப்புதல்:

நாணயம் இந்தியாவிற்குள் மட்டுமே அனுப்பப்படும்.
ஆர்டர் செய்த 5-7 நாட்களுக்குள் அனுப்புதல் நடைபெறும்.
(கோவிட்-19 நிலைமை காரணமாக, சில பகுதிகளில் டெலிவரி தாமதமாகலாம்)

தேவையைப் பதிவு செய்யும் முறை:

ஆன்லைனில்: நீங்கள் ஒய் எஸ் எஸ் ஆன்லைனில் உள்ள புத்தக அரங்கில் வாங்கலாம்.

125வது பிறந்த ஆண்டு நிறைவு நாளுக்கான செய்திக் காப்பகம்

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.