ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களுக்கு எஸ் ஆர் எஃப் சன்னியாசினிகளின் வருகை

28 ஜூலை, 2022

எஸ் ஆர் எஃப் சன்னியாசினிகள் 2022 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது, அவர்கள் தியானங்களை நடத்துவார்கள், மேலும் குருதேவரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகளை நடத்துவார்கள். நிகழ்ச்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் அனுமதி உண்டு. இந்த நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்ள நீங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள். குருதேவரின் போதனைகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவதில் எஸ் ஆர் எஃப் சன்னியாசினிகளிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெற குரு-பெஹன்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைக்கும். இந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் முழு விவரங்களையும், பதிவு செய்வதற்கான முறையையும், அவை முடிவு செய்யப்பட்டவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

தயவுசெய்து கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாடு மற்றும் எஸ் ஆர் எஃப் சன்னயாசினிகளின் பங்கேற்பானது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன்னர் நடைமுறையில் உள்ள கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொறுத்தது.

para-ornament

இதைப் பகிர