சுவாமி சிதானந்தஜி நம்பிக்கை செய்தியை வழங்குகிறார் – மே 21

YSS/SRF கிரியாபன் சேவகர் சங்கம் துவக்கத்தின் போது சுவாமி சித்தானந்த கிரி

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் ஏஃப் தலைவர் சுவாமி சிதானந்த கிரி, மற்ற உலக ஆன்மீக பிரமுகர்களுடன் இணைந்து, Sion Earth இன்  #MAYDAY ஆன்லைன் நிகழ்வின் போது, இந்த  வியாழன், மே 21, இரவு 11:30 மணிக்கு (IST) அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல் செய்தியை வழங்குவார். “உலக தியான தினத்தன்று” நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வானது, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒன்றுபட்ட தியானம் மற்றும் பிரார்த்தனைக்கான உலகின் மிகப்பெரிய கூட்டமாக இருக்கும் என்று நிகழ்வின் அமைப்பாளர்கள் நம்புகிறார்கள்.

“உலகம் ஒரு புதிய வடிவத்திற்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், உலகளாவிய ஆற்றலை அச்சத்திலிருந்து அன்பிற்கு மாற்ற, நம் காலத்திய உலகின் முன்னணி ஆன்மீக ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுடன் இணையுமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று Sion Earth அவர்களின், உன்னத லட்சியத்தை முன்வைக்கிறது. #MAYDAY இல் பேச்சாளர்கள் மற்றும் கலைஞர்களின் ஒரு மணி நேர நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இருபது நிமிட உலகளாவிய தியானமும் இருக்கும். ஒரு ஆன்மீக முயற்சியில் பல நம்பிக்கை மரபுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதன் மூலம், “குணப்படுத்துதல், பரிவு மற்றும் மனப்பான்மை” ஆகியவற்றில் கவனம் செலுத்த மக்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும் என்று Sion Earth நம்புகிறது.

இந்த நிகழ்வில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்புடன் பங்கேற்கும் நிறுவனங்கள் அகாப் இன்டர்நேஷனல், பிரம்மா குமாரிஸ், ஹஃபிங்டன் போஸ்ட், எ கிரேட்டர் குட் ஃபவுண்டேஷன் மற்றும் பல.

தொடர்ச்சியான அடிப்படையில், ஒய் எஸ் எஸ் அனைத்து நாடுபவர்களையும்,
எஸ் ஆர் எஃப் ஆன்லைன் தியான மையத்தின் மூலம் நடைபெறும் எங்களின் உலகளாவிய தியான சேவைகளில் சேர அழைக்கிறது

Sion Earth #MAYDAY நிகழ்வைப் பற்றிய மேலும் தகவலுக்கு www.sionearth.com ஐப் பார்வையிடவும்.

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.