“நீங்கள் தியானம் செய்யும் போது, இறைவனிடம் செல்வதற்கான திறந்த வாயில்களை எல்லா இடங்களிலும் காண்பீர்கள். நீங்கள் அவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உலகின் அனைத்து அழிவுகளிலும் கூட அந்தப் பேரனந்தத்தையும் பேரமைதியையும் பறித்துச் செல்ல முடியாது".
—ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்
அன்புள்ள தெய்வீக ஆத்மாக்களே,
கோவிட்-19 தொற்றுநோய் இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நம் அனைவரின் வாழ்க்கையையும் கணிசமாக பாதித்துள்ளது. நிலைமாறிய உலகம் நமதுவாழ்க்கை முறைகள், நமது வேலை முறைகள் மற்றும் நமது முன்னுரிமைகளை பாதித்துள்ளது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவில் நாமும் குருதேவரின் பக்தர்களுக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் புதிய வழிகளில் சேவை செய்ய கற்றுக் கொண்டிருக்கிறோம்.

நமது அன்பிற்குரிய குருதேவரின் அன்பான பக்தர்களான உங்கள் அனைவரின் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவின் பெரும் வெளிப்பாட்டால் நாங்கள் ஆழமாக மனம் கனிந்திருக்கிறோம். இந்த சவாலான காலங்களில் நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள நாங்கள் விழைகிறோம்.
நமது அன்புக்குரிய குருதேவரின் அழியாத போதனைகள் நம் அனைவருக்கும் இறைவன் மீது கவனம் குவிக்கவும், அவனுடைய தெய்வீக பாதுகாப்பில் நமது நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. நமது மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி சமீபத்தில் கூறினார்: “பரமஹம்ஸ யோகானந்தரின் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் போதனைகளில், வாழ்க்கை எனும் போர்க்களத்தில் முழுமையான போர்ச்சாதனங்களைக் கொண்ட ஒரு தெய்வீகப் போர்வீரனாக முனைப்புடன் விளங்கத் தேவையான ஆன்மீகக் கருவிகளைப் பெற்றிருக்கிற நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்.”
குருதேவரின் அருளால், குருதேவரது ஆசிரமங்களில் வசிக்கும் அனைத்து சன்னியாசிகளும் மற்றும் சேவகர்களும் பாதுகாப்பாக உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க, நாங்கள் சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் தனிநிலை தியானங்கள் என அனைத்தையும் தாற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம், மேலும் நமது ஆசிரமங்கள், தியான மந்திரங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் ஆகியவற்றை பக்தர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மூடிவைத்துள்ளோம். நமது அச்சிடுதல் மற்றும் அஞ்சல் செயல்பாடுகளையும் நாங்கள் இடைநிறுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், குருதேவரது உலகளாவிய ஆன்மீகக் குடும்பத்திற்கு புதுமையான வழிகளில் சேவை செய்வதற்காக புதிய நிகழ்ச்சித் தொடர்களும், இணைய வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன, அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
பக்தர்களைச் சென்றடைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
ஆன்லைன் தியானங்கள்: The ஆன்லைன் தியானத்திலிருந்து, ஒரு சரியான காலகட்ட முன்முயற்சியாக நமது தலைவரால் துவக்கி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் தியானங்கள் அநேகருக்கு தங்கள் வீடுகளின் பாதுகாப்பில் இருந்து கொண்டே கூட்டுத் தியானங்களின் சக்தி மற்றும் நன்மைகளை அனுபவிக்கும் ஓர் அருள் வாய்ந்த வாய்ப்பை வழங்கியபடி, ஒரு மகத்தான வரப்பிரசாதமாக, அவர்களுக்கு ஒரு ஆன்மீக நங்கூரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒய் எஸ் எஸ் தற்போது வாரத்திற்கு மூன்று முறை, சன்னியாசினிகளால் வழிநடத்தப்படும் ஆன்லைன் தியானங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு ஞாயிறு காலையும் நடத்தப்படுகிற நீண்ட தியானமும் மூன்று மணி நேர தியானமும் அடங்கும். இந்த ஆன்லைன் தியானங்களில் 2,500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள் மற்றும் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சன்னியாசிகள் தலைமையிலான ஒரு நாள் மௌன தனிநிலை தியானம்: மே 30, 2020 அன்று சுவாமி ஸ்மரணானந்தரால் ஆன்லைனில் ஒரு நாள் மௌன தனிநிலை தியானம் நடத்தப்பட்டது; சுமார் 3,500 பக்தர்கள் மௌன தியானம், கீதமிசைத்தல் மற்றும் உத்வேகம் தரும் உரையாடல்களில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

வாராந்திர ஆன்லைன் அகத்தூண்டுதலளிக்கும் சத்சங்கள்: : ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள், கேந்திராக்கள், மண்டலிகள், மற்றும் தனிநிலை தியான மையங்கள் ஆகியவை தற்காலிகமாக ஞாயிறு சத்சங்கங்களை -நிறுத்தி வைத்திருக்க வேண்டியுள்ள இந்த கடினமான காலகட்டத்தில் நாங்கள் நமது வலைத்தளத்தில் வாராந்திர ஆன்லைன் அகத்தூண்டுதலளிக்கும் சத்சங்கங்களைநடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆன்லைன் சத்சங்கங்களில்,பங்கேற்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள பக்தர்கள், தொலைதூரம் ஒரு பொருட்டாக இல்லாமல், பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய ஆன்மீகக் குடும்பத்தின் ஒரு பகுதியாக, உண்மையாகவே இணைந்திருப்பதை உணர்கிறார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் பெறும் அநேக பாராட்டுச் செய்திகளில், ஒரு இளம் பக்தரிடமிருந்து வந்த ஒன்றைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்:

“” இந்த சவாலான காலகட்டங்களில் நமது குடும்பத்தில் அமைதி மற்றும் அன்பின் சூழலை உருவாக்குவதற்கும் நிறுவுவதற்கும் உதவி செய்துள்ள யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் சேவைகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆன்லைன் தியானங்களும் வாராந்திர சத்சங்கங்களும் எங்களுக்கு மிகவும் நிம்மதியாக உணர்வதற்கும் , கடினமான சூழ்நிலைகளுக்கு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் பதிலளிப்பதற்கும் உதவியுள்ளன…. நாம் எச்சரிக்கையாக இருந்தாலும், பயம் மற்றும் பதட்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது… ஒய் ஏஸ் எஸ் போதனைகள் பயிற்சி இல்லாமல் கற்பனை செய்ய முடியாதது. ”
YSS இணையதளத்தில் பயனுள்ள வாய்ப்பு வளங்கள் : இன்றைய சூழ்நிலையின் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள, பலர் தங்கள் வாழ்க்கையில் புரிதலையும் வழிகாட்டுதலையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மிகவும் தேவையான ஆன்மீக ஞானம் மற்றும் ஆலோசனைகளை வழங்க, நமது இணையதளத்தில் ஊக்கமளிக்கும் உள்ளடக்க விஷயங்களை பெரிதும் மேம்படுத்தி உள்ளோம். இதில் குருதேவரது படைப்புக்களில் இருந்து ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல் தொகுக்கப்பட்ட பட்டியல் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானங்கள் ஒய் எஸ் எஸ் மின்புத்தகங்கள், மற்றும் வீடியோக்கள், வழிகாட்டப்பட்ட தியானங்கள்..
யோகாதா சத்சங்க இதழ்: காலாண்டு யோகதா சத்சங்க இதழின், தற்போதைய இதழை எங்களால் அஞ்சல் செய்ய முடியாததால், , டிஜிட்டல் வடிவில்அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளோம்.
YSS ஆங்கிலப்பாடங்கள்: எங்களால் அச்சிடப்பட்ட பாடங்களின் , புதிய ஆங்கிலப் பதிப்பிற்காகப் பதிவு செய்துள்ள பக்தர்கள் அனைவரும் அவற்றினுடைய அஞ்சல் வருகையின் கால அட்டவணைக்கு ஏற்ப ஒய் எஸ் எஸ் பாடங்கள் செயலியில் அவற்றைப் பெறுவதைத் தொடரமுடியும். ஒய் எஸ் எஸ் பாடங்கள் செயலிக்கான இணைய பாடங்களின் சந்தா காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒய் எஸ் எஸ் இந்தி பாடங்கள்: ஆர்வமுள்ளவர்கள் விரைவில் இந்தி பாடங்களுக்கு ஆன்லைனில் பதிவுசெய்ய முடியும். அனைத்து ஹிந்தி பாட மாணவர்களுக்கும் பக்தர் இணைய வாசல் மூலம் அடிப்படை உத்தியின் பாடங்கள் டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கும் .
ஒய் எஸ் எஸ் மையத் துறை பக்தர்களை அணுகுகிறது
மையத் துறையில் உள்ள சன்னியாசிகள், அவரவர்களது மையங்களின் நிர்வாகக் குழு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் ஓர் ஆன்மீகக் குடும்பமாக இணைந்திருக்கும் உணர்வைப் பேணுவதற்காக அவர்களை அணுகி வருகின்றனர். சன்னியாசிகள் அவர்களை ஆன்லைன் தியானங்கள், உலகளாவிய பிரார்த்தனைக் குழு ஆகியவற்றில் பங்கேற்க ஊக்குவித்தனர் மற்றும் தேவைப்படும்போது ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கினர்.
பல தன்னார்வலர்கள் தங்களுக்கு ஓய்வு நேரம் இருப்பதாகவும், குருதேவரின் பணிக்கு சேவை செய்வதில் சிறந்த கருவிகளாக மாறுவதற்கு அதைப் பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர். எனவே, மையத் துறையானது பல நூறு தியான நடத்துனர்களுக்கு அவர்களின் தியான வழிநடத்தும் திறன்களை மேம்படுத்த ஆன்லைன் பயிற்சி பட்டறைகளின் தொடர்களை ஏற்பாடு செய்தது.

மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை
மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வது யோகதா சத்சங்க பாதையின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும். கடந்த இரண்டு மாதங்களில்,ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் உலகத்திற்கும், பிரார்த்தனைகளுக்காகக் குறிப்பாக வேண்டிக் கொள்பவர்களுக்கும் குணமளிக்கும் அதிர்வலைகளை அனுப்பியவாறு ஒரு நாளில் மூன்று முறை பிரார்த்தனை செய்து வருகின்றனர். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் தெய்வீக உதவியைப் பெற, நீங்கள் வீட்டிலிருந்தே இந்த பிரார்த்தனைகளில் எங்களுடன் சேரலாம்.

நமது கோவிட்-19 சேவை நடவடிக்கைகள்
உதவித்தேவைப்படுகிற இந்த காலகட்டத்தில், ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகள், தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை விநியோகித்தல் வாழ்வாதாரம் ஸ்தம்பித்துள்ள உள்ளூர் சமூகங்களுக்கு உதவுதல்; தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதன் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு உதவுதல் போன்ற பலவிதமான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்; சில மையங்கள் திக்கற்ற விலங்குகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கின.
குருதேவரது குடும்பம் எவ்வாறு மனிதகுலம் முழுவதையும் தன்னுடைய உறவாகக் கருதி அரவணைத்து, துன்பப்படுபவர்களை இயன்ற வழிகளிலெல்லாம் உதவ முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதைக்காண இதயம் கனிகின்றது.
ஒய் எஸ் எஸ்ஆசிரமங்களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.
லாக்டவுன் காலத்தில், வழக்கமான பணியாளர்கள் வர முடியாத நிலையில், சன்னியாசிகள் மற்றும் குடியுரிமை சேவகர்கள் ஆசிரம மைதானங்கள் மற்றும் வசதிகளை பராமரிக்கும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். நான்கு ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் சுமார் 150 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர், அவர்கள் அனைவரும் சமையலறைகளை நடத்துவதற்கும் ஆசிரம மைதானங்கள் மற்றும் தோட்டங்களை பராமரிப்பதற்கும் உதவுகின்றனர். லாக்டவுன் காரணமாக ஆசிரமத்தின் பல ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிலேயே தங்கியிருந்தாலும், ஒய் எஸ் எஸ் அவர்களின் சம்பளத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

உதவிக்கான உங்கள் தாராளமான நன்கொடைகள்.
கோவிட்-19 இன் உலகளாவிய தாக்கத்தில் இருந்து யாரும் விடுபடவில்லை என்பதையும் உங்களில் சிலர் உங்கள் நிதி ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டிருக்கலாம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் இதயம் அன்போடு உங்களை நாடி வருகிறது. பிரார்த்தனை, நல்லெண்ணம், சேவை நடவடிக்கைகள் மற்றும் குருதேவரின் ஆன்மீகப் பாதையை உண்மையாக பின்பற்றுதல் – என ஒவ்வொரு விருப்பக் கொடையின் மூலமும் பின்பற்றுதல் நீங்கள் ஒய் எஸ் எஸ் மற்றும் நமது உலகளாவிய ஆன்மீக குடும்பத்திற்கு பங்களிக்கிறீர்கள். ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் நீங்கள் அனைவரும் அனுப்பிய அன்பான பிரார்த்தனைகளின் இடைவிடாத அலைகளை நாங்கள் உணர்கிறோம், மேலும் அவை குருதேவரின் மிகப்பெரிய குடும்பத்திற்கு எங்கள் சேவையைத் தொடர உத்வேகத்தையும் வலிமையையும் தருகின்றன.
பண உதவி செய்யும் திறனும் விருப்பமும் உள்ளவர்களுக்கு, உங்கள் தாராள மனப்பான்மையினை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம், உங்கள் ஆதரவை வரவேற்கிறோம். அன்புடனும் பக்தியுடனும் உண்மையாக வழங்கப்படும் ஒரு பரிசு, இறைவனின் கையில், தெய்வீக அன்பு மற்றும் ஆசி கொண்ட ஒரு கருவியாக ஆகின்றது.
இந்த நன்கொடைகள் ஒய் எஸ் எஸ்-ன் அத்தியாவசிய அன்றாட செயல்பாடுகள், ஊழியர்களின் சம்பளப்பட்டுவாடா மற்றும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நமது முயற்சிகளுக்கு நிதியளிக்கும். எங்களைப் பொறுத்தவரை, பரமஹம்ஸ யோகானந்தரின் முக்தியளிக்கும் போதனையைத் தொடர்ந்து பரப்புவதும், நமது ஆன்மீகக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் ஆன்மீக வாழ்க்கையையும் பேணி வளர்ப்பதும் மிக உயர்ந்த முன்னுரிமையாகத் தொடர்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் தாராளமாகவும் அன்பாகவும் நன்கொடை வழங்கிய உங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்கும், தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுவதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.
உள்ளூர் அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உங்கள் நன்கொடையை வழங்குவதற்காக எங்கள் ஆசிரமங்கள் அல்லது தியான கேந்திரங்கள் அல்லது மண்டலிகளுக்கு நேரடியாகச் செல்ல உங்களை அனுமதிக்காது என்பதால், ஆன்லைனில் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆன்மீகரீதியான ஆதரவு அல்லது வழிகாட்டுதல் தேவைப்பட்டால், எங்கள் ஆசிரமங்களை அழப்பதற்கு மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள்.
குருதேவர் கூறினார், “உங்களுக்கு அளப்பரிய வலிமையை வழங்குவதற்காக உங்கள் எண்ணங்கள், பிரார்த்தனைகள் மற்றும் நம்பிக்கைகளுக்குப் பின்புலமாக இறைவனின் சக்தி உங்களில் செயல்படுகிறது என்பதில் எப்போதும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிக்கை கொள்ளுங்கள். ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இறைவனது பணியை நன்றியோடு ஒப்புக் கொள்ளுங்கள்.”
அப்போது உங்களுடன் அவனை எப்போதும் பெற்றிருப்பீர்கள். இறை இருப்பு உங்கள் வாழ்க்கையையும் உங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையையும் வழிநடத்திப் பாதுகாப்பதை நீங்கள் என்றென்றும் உணர்வீர்கள்.
தெய்வீக நட்பில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா