ஒய் எஸ் எஸ் சேவகர் சங்கத்தின் எதிர்வரும் தொடக்க விழா

28 ஜனவரி, 2021

சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஒரு செய்தி

ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் கிரியாபான்களின் ஒரு புதிய சங்கம்

ஒரு நூற்றாண்டிற்கு முன், 1920ல், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோகம் எனும் இந்தியாவின் பழம்பெறும் அறிவியலை உலகம் முழுவதும் பரப்புவது என்ற தெய்வீகமாக விதிக்கப்பட்ட தன் ஆன்மீகப் பணியைத் துவக்க தனது பிரியமான இந்தியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டார். முப்பது வருடங்களுக்கும் மேலாக, தான் 1952ல் மகாசமாதி அடையும் வரை, அவர் அந்தப் பணியின் நிறைவேற்றத்தில் தூய்மையான தெய்வீக அன்புடன், அயர்வில்லாமலும் ஆனந்தமாகவும், உழைத்தார்.

பரமஹம்ஸருடைய சர்வதேசப் பணியின் நூறு வருட நிறைவு ஆண்டின் போது அவருடைய உலகளாவிய பணியின் வளர்ச்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லை அறிமுகப்படுத்துவது ஒரு சிறப்பான ஆனந்தமாகும். 2020 ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் உலகப் பேரவை நிகழ்ச்சியின் நிறைவுச் சொற்பொழிவில் நான் விளக்கியது போல, 1) அவர் அளித்த ஆன்மீக இலட்சியங்களைச் சுற்றி சாதனா தமது அன்றாட வாழ்க்கைகளைக் கட்டமைக்க; மற்றும் 2) அவருடைய ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் நிறுவனத்திற்குச் சேவை செய்யவும் ஆதரிக்கவும் தம் நேரத்தையும் துணைவளங்களையும் தாராளமாக அளிக்க, ஓர் அதிக ஆழ்ந்த ஈடுபாட்டைச் சங்கல்பம் செய்ய விரும்பும் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் கிரியாபான் சீடர்களின் ஓர் உலகளாவிய சங்கத்தை உருவாக்கும் திட்டம் உள்ளது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா –வில் அது ஒய் எஸ் எஸ் சேவகர் சங்கம் என்றழைக்கப்படும்; மற்றும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் –ல் அது எஸ் ஆர் எஃப் தன்னார்வ பாமர பக்தர்கள் சங்கம் என்றழைக்கப்படும்.

உலகம் முழுவதிலும் உள்ள ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் கிரியாபான் பக்தர்கள் அவருடைய பணியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் ஈடுபாட்டுடன் கலந்துகொள்ள ஏதுவாக ஒரு வாகனத்தை அல்லது கட்டமைப்பை உருவாக்குவதில் நமது குருதேவர் தன் வாழ்நாளின் இறுதி ஆண்டுகளின் பெரும்பகுதி நேரத்தை அர்ப்பணித்தார். இப்போது அவருடைய அந்தக் கனவு நனவாகிறது.

பரமஹம்ஸ யோகானந்தர் கடைசி புன்னகை

“உங்கள் பங்கை ஆற்றுங்கள். ஸெல்ஃப்-ரியலைசேஷன் (யோகதா சத்சங்கம்) –ன் பணியை உங்கள் வார்த்தைகளின் மற்றும் எடுத்துக்காட்டின் வாயிலாக, உங்கள் பக்தியின் வாயிலாக, பரப்புங்கள். என் பணியின் சுமையால் நான் ஒடிந்துபோகவில்லை, ஆனால் உதவியை நாடுவோர் அனைவருக்கும் உதவிசெய்ய நான் ஆர்வத்துடன் இருக்கிறேன்; மற்றும் இந்தப் போதனைகளை மற்றவர்களுக்கு உங்கள் ஆன்மீக அதிர்வுகளின் வாயிலாகப் பரப்புவதும் உங்கள் கடமையாகும்; அதனால் அவர்களும் இந்த உண்மையைப் பெறுவார்கள்.

சேவகர் சங்க 2021 தொடக்க விழா தேதி பற்றிய மேலதிகத் தகவல்

ஓர் ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரத்தை ஜனவரி 31, 2021 அன்று திறந்து வைப்பது எமது தற்போதைய திட்டமாகும். இந்தக் கோடையில் ஒய் எஸ் எஸ் சேவகர் சங்கத்திற்கான ஒரு முழுமையான இணைய தளத்தைத் தயார் செய்து வைத்திருப்போம் மற்றும் அதேசமயம் அதில் இணைய விண்ணப்பங்களைப் பெறத் துவங்கத் தயாராக இருப்போம் என்றும் நாங்கள் நம்புகிறோம். அதில் சேர்வோருக்காக ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் சீடத்துவப் பாதை, சாதனா(ஆன்மீகப் பயிற்சி), குரு-சேவை (குருதேவருக்கு சேவை) ஆகியவை பற்றிய ஓர் உத்வேகமூட்டும் கையேட்டை நாங்கள் வெளியிடவும் செய்வோம்.

இதற்கிடையில், இந்தப் புதிய செயல்முனைப்பிற்குப் பின்னால் உள்ள உத்வேகமூட்டும் நிகழ்ச்சிக் கோவைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு புதிய வலைப்பதிவின் வாயிலாக (அதில் இதுவே முதல் பதிவு) சேவகர் சங்கத்தை அறிமுகப்படுத்தும் செயல்முறையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் சேவகர் திட்ட உருவாக்கம் பற்றி மேலும் சில தகவல்கள்

பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய பணிக்குச் சேவை செய்யும் சன்னியாசிகளுக்கு உதவ ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் பக்தர்களுக்கான புதிய வழிகளை இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஆராயத் துவங்கினோம் என்பது உங்களில் பலர் அறிந்ததே. நமது குருதேவரின் பணியை முன்னெடுத்துச் செல்ல உதவ நமது சர்வதேச ஆன்மீகக் குடும்பத்தினுள் இருக்கும் பெரிய அளவிலான திறமைகளிலிருந்து அதிக விரிவாகத் தரவு செய்வது இலக்குகளில் ஒன்றாக இருந்தது. என் வழிகாட்டுதலின் கீழ், நீண்டகால சம்சார சீடர்களின் ஒரு சிறிய குழு ஒன்றுசேர்ந்தது மற்றும் இறுதியாக யோகானந்த சேவை , என்ற உலகம் முழுவதிலுமிருந்தும் இணைந்த பரமஹம்ஸருடைய பக்தர்களின் ஒரு மெய்நிகர் சமூகம் உருவாக்கப்பட்டது. அவர்கள் குருதேவரின் சன்னியாசிகள் அல்லாத தொண்டர்களுக்காக புதிய சேவை வாய்ப்புகளை ஆராயவும் உருவாக்கவும் பல “முன்னோட்ட நிகழ்ச்சிகளை” மேற்கொண்டனர். கீழ்க்கண்டவைகள் உள்ளிட்ட பல முக்கியச் செயல் திட்டங்கள் யோகானந்த சேவையால் வெற்றிகரமாக நிதியளிக்கப்பட்டன, துவங்கப்பட்டன, மற்றும் நிர்வகிக்கப்பட்டன:
  • ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆன்லைன் தியான மையம்: , இதில் வாரந்தோறும் பல டஜன் கணக்கிலான கூட்டுத் தியானங்களும் ஆன்மீக ஆய்வுகளும், பல மொழிகளிலும் பல நேர மண்டலங்களிலும் நடத்தப்படுகின்றன; பக்தர்களாலும் அத்துடன் சன்னியாசிகளாலும் வழிநடத்தப்படுகின்றன; மற்றும் 80க்கும் மேலான நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். (அதே போன்ற ஓர் ஆன்லைன் தியான கேந்திரம் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா –வின் ஆதரவின் கீழும் சமீபத்தில் உருவாக்கப்பட்டது; ஜனவரி 31, 2021 அன்று துவக்கப்பட உள்ளது.)
ஆன்லைன் தியான யோகா கேந்திரா
பக்தர்கள் ஓர் ஆன்லைன் தியான அமர்வில் இணைகின்றனர்
  • சர்வதேச உதவி மையம்: மாநாடு, பாடப் பதிவு போன்ற எஸ் ஆர் எஃப் –ன் ஆன்லைன் பங்களிப்புகள் பற்றிய தொழில்நுட்ப உதவியைத் தனிப்பட்ட முறையில் பக்தர்களுக்கு வழங்குவதற்கானது.
  • ஆன்லைன் தன்னார்வலர் இணைத்தளம்: தொண்டு செய்ய விரும்பும் பக்தர்கள் பற்றிய ஒரு தரவுத்தளத்தைச் சேமித்துப் பராமரிப்பதற்கானது. இதில் அவர்கள் சேவைசெய்ய விரும்பும் காலம், அவர்களுடைய திறன்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் அடக்கம். இதன் மூலம் நமது குருதேவரின் பணிக்கு அவர்கள் சேவை செய்ய அவர்களுக்கான சிறந்த வழியை எங்களால் கண்டுபிடிக்க முடியும்.
  • மற்ற பல செயல் திட்டங்களுக்கான ஆரம்பகாலத் திட்டமிடுதல்.
பல வழிகளில், யோகானந்த சேவை உலகம் முழுவதிலும் உள்ள நமது அர்ப்பணிப்புமிக்க பக்தர்களின் சேவையைச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்க மின்னியல்ரீதியாக வலைக் கட்டமைப்பு செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்கும் ஓர் ஆரம்ப-காலச் சோதனையாக (மிகவும் வெற்றிகரமான ஒன்று!) இருந்தது. அதன் விளைவாக, கடந்த வருடத்தில் எஸ் ஆர் எஃப் மற்றும் ஒய் எஸ் எஸ் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க மேற்கொள்ளும்படி நான் கேட்டுக்கொண்ட பல்வேறு செயல் திட்டங்களுக்காக ஆர்வத்துடன் தொண்டு செய்திருக்கும் உலகம் முழுவதிலுமான பக்தர்களிடமிருந்து சேவைமிகு செயற்பாட்டின் ஓர் உத்வேகமூட்டும் எழுச்சியை நாங்கள் கண்டிருக்கிறோம். இதைவிடச் சரியான நேரத்தில் அது வந்திருக்க முடியாது, ஏனெனில் இந்தச் செயல் திட்டங்களில் பல, தவிர்க்க முடியாத 2020ன் பெருந்தொற்றுப் பணிநிறுத்தக் காலத்தில் எஸ் ஆர் எஃப் மற்றும் ஒய் எஸ் எஸ் ஆன்லைனில் வழங்க முடிந்திருக்கும் பெருமளவிலான உத்வேகமூட்டும் விஷயங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பங்களித்தன. இந்த ஆரம்பச் சோதனை ஓட்ட “முன்னோட்ட நிகழ்ச்சிகள்” நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து ஒய் எஸ் எஸ் சேவகர் சங்கத்தை முறைப்படி தொடங்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சேவகர் சங்கத்திற்கான பரமஹம்ஸ யோகானந்தரின் தொலைநோக்குப் பார்வை

குருதேவரின் பணி தொடர்ந்து வளர்ச்சியடையும் போது இன்றியமையாதது என்று நான் நம்பும் சாதகச் சேவகர்களின் விரிவடையும் பங்கிற்கு முன்னிரிமை அளிப்பதின் ஒரு பகுதியாக, குருதேவரின் சிந்தனையிலும் எவர்களுடன் தன் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் இந்தச் செயல்முனைப்பை உருவாக்க அவர் துவங்கினாரோ, அந்த ஆரம்பகால சீடர்களுக்கு அவர் அளித்த ஆவணப்படுத்தப்பட்ட வழிகாட்டலிலும் ஆழ்ந்து சென்றேன்.

அன்பான சேவையின் வாயிலாக பரமஹம்ஸருடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் அர்ப்பணிப்புமிக்க பக்தர்களின் ஒரு நீண்ட பாரம்பரியத்தை ஒய் எஸ் எஸ் கொண்டுள்ளது. ஸ்ரீ சச்சினந்தன் சென் (வலப்பக்கம்) மற்றும் பின்னாளில் பிரம்மச்சாரிணி மீராபாய் என்று அறியப்பட்ட ஸ்ரீமதி ரேணுகா சென் அத்தகைய இரு பக்தர்கள் ஆவர். ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் வசிக்கும்படி ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவி ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவால் (மத்தியில்) அழைக்கப்பட்ட அவர்கள் யோகதா சத்சங்க சங்கீத் கலா பாரதி –யை (இசைப்பள்ளி) நிறுவ உதவினர். இந்தப் படம் 1961ல் ராஞ்சியில் எடுக்கப்பட்டது.

மரியாதைக்குரிய ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவாலும் ஏனைய முதல்-தலைமுறை சீடர்களாலும் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தச் செய்யப்பட்ட பணிகளை நான் சீராய்வு செய்த போது, நமது ஆசிரமங்களிலும் கேந்திரங்களிலும் பல தசாப்தங்களாகப் பேணி வளர்க்கப்பட்டிருக்கும் குரு-சேவையின் உணர்வை எடுத்து அதை மின்னியல் தகவல் தொடர்புடனும் யோகானந்த சேவை –யுடன் நமது சமீபத்திய பணியில் நாம் தீவிரமாக சோதனை செய்து கொண்டிருக்கும் தன்னார்வலர் ஒருங்கிணைப்புடனும் இணைக்கும் நேரம் இப்போது வந்திருக்கிறது என்பது உடனடியாகத் தெளிவாகியது. இது தன் சமூகத்திற்காக எதிர்வரும் காலங்களில் நம் குருதேவரால் கருத்துருவாக்கப்பட்ட வளர்ச்சியில் ஒரு தேவையான மற்றும் மிக அர்த்தமுள்ள பங்கை – தம் ஆன்மீக வாழ்வின் மற்றும் இறைவனுக்கும் குருதேவருக்கும் ஆன பக்தியின் (தம் சாதனா) பகுதியாக — ஆற்றும் சேவகர்களின் ஓர் உண்மையான உலகளாவிய சங்கத்தின் உருவாக்கத்தைச் சாத்தியமாக்கும்.

கடந்த சில மாதங்களாக, குருதேவருடைய தொலைநோக்குத் திட்டம் பற்றிய ஒரு தெளிவான புரிதல், இந்தப் புதிய உலகளாவிய செயல்முனைப்பிற்கு ஆதரவளிக்கத் தேவையான நிறுவனம் சார்ந்த அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்க நான் எதனுடன் பணி செய்து கொண்டிருந்தேனோ, அந்த மூத்த எஸ் ஆர் எஃப் மற்றும் ஒய் எஸ் எஸ் சன்னியாசக் குழுவில் உருப்பெற்றிருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது, மற்றும் 2021-ல் பக்தர்கள் சேர்வதற்காக புதிய ஒய் எஸ் எஸ் சேவகர் சங்கத்தையும் எஸ் ஆர் எஃப் தன்னார்வச் சங்கத்தையும் திறக்கத்த் தயாராக இருப்போம் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

எதிர்வரும் உலகளாவிய நாகரிகத்திற்கான ஓர் அனைவருக்கும் பொதுவான ஆன்மீகத்தைக் கொண்டுவரும் தன் செயல்திட்டத்திற்கான அன்பான சேவையில் நமது குருதேவருடைய சர்வதேசப் பணியின் இரண்டாம் நூற்றாண்டைத் துவக்க என்னே ஒரு மங்களகரமான வழி! இந்த உத்வேகமூட்டும் செயல்முனைப்பின் வளராக்கம் பற்றி அதிகமாகப் பகிர்வதற்கு நான் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

ஜெய் குரு!

—சுவாமி சிதானந்த கிரி

1963ல் குருதேவரின் ஹாலிவுட் கோவிலில் பாமர சீடர் குழுவிடம் பேசியவாறு, ஸ்ரீ தயா மாதா கூறினார்:

“நாம் அனைவரும் நமக்கே உரிய வழியில் இறைவனுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறோம் — ஆசிரமத்தில் நாங்கள் ஒரு வழியில், மற்றும் நீங்கள் உலகில் அதற்குச் சமமான ஒரு முக்கிய வழியில். இறைவனுடைய செய்தி உங்களைப் போன்ற தூதர்கள் இன்றி உலகைச் சென்றடைய முடியாது. மற்ற மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர்கள் நீங்கள்தான். மேலும் அது முதன்மையாக உங்களுடைய எடுத்துக்காட்டின் மூலம் மற்றும் குருதேவருடைய போதனைகளைப் பற்றிய உங்களுடைய புரிதலின் மூலம் நீங்கள் மனிதகுலத்திற்குச் சேவை செய்யும் ஒரு பெரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.”

தயா மாதா சங்கமதா

இதைப் பகிர