அன்புள்ள தெய்வீக ஆத்மாக்களே,
COVID-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவை இதுவரை இல்லாத நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது. மருத்துவ வசதிகள், உபகரணங்கள், மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை, அவசரத் தேவை மற்றும் பெரும்பாலும் உயிர்காக்கும் தேவையுள்ளவர்களுக்கு தனிப்பட்ட நிவாரணம் வழங்க முடியாதது உள்ளிட்ட முக்கிய சவால்களை சமாளிக்க நாடு போராடி வருகிறது. அன்பானவர்களின் இழப்பு, வருமான இழப்பு, அனைவரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்ட COVID-19 இன் தாக்கத்தின் நேரடி அனுபவத்திலிருந்து சில உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இத்தகைய இழப்புகளைச் சந்தித்த அனைவருக்காகவும் எங்கள் இதயம் வேதனைப்படுகிறது, மேலும் அவர்கள் தெய்வீக அன்னையின் ஆறுதலளிக்கும் அன்பினால் நிரப்பப்படட்டும் என்று ஆழ்ந்த பிரார்த்தனை செய்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு – குறிப்பாக நல்வாய்ப்பற்ற மற்றும் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பொருள் உதவி மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த நெருக்கடியை தீர்க்க உதவுவதில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா நாடு தழுவிய முயற்சிகளில் இணைந்துள்ளது. இந்த நிவாரண நடவடிக்கைகள் 20 மாநிலங்களில் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகின்றன, ஒவ்வொரு நாளும் அதிகமான நகரங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த நேரத்தில் நாங்கள் தற்போது மேற்கொண்டுள்ளவற்றைப் பற்றியும், நம் நாட்டின் இந்த நெருக்கடியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதற்கான எங்கள் தொடர் முயற்சிகளில் நாங்கள் என்ன வழங்க விரும்புகிறோம் என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
பொருள் உதவி மற்றும் சேவைகள்
நாங்கள் நம் ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளை மையங்களாகக் கொண்டு, அங்கிருந்து உதவும் முயற்சிகளை மேற்கொள்ளுகிறோம். நமது இந்த முயற்சிகள் நேரடியாக, தேவைப்படும் நபர்களையும் குடும்பங்களையும் சென்றடைகின்றன. கூடுதலாக, COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ சேவை நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம். ஒய்.எஸ்.எஸ் முயற்சிகள் பின்வருமாறு:


- கடுமையான பற்றாக்குறையை சந்திக்கும் மருத்துவமனைகளுக்கு கூடுதல் படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் BiPAP இயந்திரங்கள் (நான் – இன்வேசிவ் வென்டிலேட்டர் ), ஆக்ஸிஜன் கான்சன்ரேட்ஸ் போன்றவற்றை நாங்கள் வழங்குகிறோம், கோயம்புத்தூர், மதுரை, மும்பை, ஹரித்வார், நாக்பூர், செராம்பூர் , வேலூர் மற்றும் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைகள் இதில் அடங்கும்.
- COVID-19 நோயாளிகளுக்கு நேரடியாக சேவை செய்யும் மருத்துவ முன்னணி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மருந்துகள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், பிபிஇ கிட்கள், முகக் கவசங்கள், மருத்துவக் கையுறைகள், சுத்திகரிப்பான்கள், என் 95 மாஸ்க்குகள் மற்றும் தெர்மோ மீட்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறோம். இந்தநிவாரணத்தை தக்ஷினேஸ்வர், துவாரஹாட், அர்சிகேர், பெல்லாரி, பெங்களூரு, சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், லக்னோ, மங்களூரு, மைசூர், ராய்ப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய
நகரங்களில் விரிவுபடுத்துகிறோம். - துவாரஹட்டில், சிறிய உள்ளூர் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளை அருகில் ஹல்த்வானியிலுள்ள முக்கிய மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல மிகவும் அவசியமான ஆம்புலன்ஸ் உபகரணங்கள் இருக்கவில்லை. இந்த தேவையை பூர்த்தி செய்ய தேவையான ஆம்பூலன்ஸ் உபகரணங்கள் பொருத்தப்படும் ஒரு வேனை நாங்கள் வாங்கினோம்.
- உடுப்பியில் சுடு நீர் விநியோகிக்கும் கேன், சென்னையில் உள்ள கேடவர் பைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன.
- நம் ராஞ்சி ஆசிரம மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்கள் இருபத்தி நான்கு மணிநேர -ஆம்புலன்ஸ் சேவை, அமரர் ஊர்தி சேவை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
- ஐ.சி.யு களில் தேவைப்படும் நோயாளிகளுக்கு செலவினங்களைக் குறைக்க நாங்கள் நிதி உதவி வழங்கியுள்ளோம்; சில சந்தர்ப்பங்களில், ஒரு குடும்பத்தில் இறந்த நபர், ஒரே வருவாய் ஈட்டும் நபராக இருந்தால், அவரது அடுத்த உறவினருக்கு நாங்கள் நிதி உதவி அளித்துள்ளோம்.
- ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உலர் ரேஷன் பொருட்கள் வழங்கும் முயற்சி நடந்து வருகிறது. ராஞ்சி, துவாரஹாட் , டெல்லி மற்றும் என்.சி.ஆர், அகமதாபாத், பெல்லாரி, பெங்களூரு, பெலகாவி, ஹரித்வார், ஹாசன், கைகா-கார்வார், மண்டியா, முசாபர்பூர், ஓங்கோல், ராஜமுந்திரி மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் இது மேற்கொள்ளப்படுகிறது.


உதவி தேவைப்படும் நபர்களை அடையாளம் காணவும், எங்கள் COVID-19 நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவுவதில் கருவியாக இருந்த நம் ஒய்.எஸ்.எஸ் பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு நாங்கள் மிகவும் கடன் பட்டிருக்கிறோம். நமது அன்பிற்குரிய குருதேவர் நமக்கு வழங்கிய ஒய்.எஸ்.எஸ் ஸின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களில் ஒன்றான அவர்களின் தன்னலமற்ற சேவை உணர்வை அவர்களில் நாங்கள் கண்டுணர்கிறோம்: “மனித இனத்தைத் தன்னுடைய பெரிய ஆன்மாவாகக் கருதி சேவை செய்தல்.”




நிவாரணம் வழங்கும் நமது பக்தர் தன்னார்வலர்கள் இருவர் பின்வரும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்:
“பாதிக்கப்பட்டவர்களுக்கும் பராமரிப்பாளருக்கும் உதவுவது, 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்' என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது ஆழ்ந்த திருப்தி அளிக்கிறது.”
— கே.பி. ராஜமுந்திரி
“BiPAP போன்ற உயிர் காக்கும் உபகரணங்கள் மிகவும் தேவைப்பட்ட அரசு மருத்துவமனைக்கு நாம் உதவிக்கரம் நீட்ட முடிந்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதும், நமது குருதேவரின் உழைக்கும் கரங்களாக இருப்பதும் நாம் பெற்ற அருளாசிகளே!”
— ஆர்.ஆர்.நாக்பூர்
உங்கள் ஆதரவு மிக முக்கியமானது. COVID நிவாரணத்திற்கான தேவை முடிந்துவிடவில்லை. மக்களுக்கு உங்கள் உதவி தேவை. நம் முயற்சிகளைத் தொடர, நம் COVID-19 நிவாரண செயல்பாடுகளுக்கு நன்கொடை அளிக்கக்கூடியவர்களை அழைக்கிறோம். பெருமளவு தேவை இருக்கும் இந்த நேரத்தில் ஒய்.எஸ்.எஸ். சன்னியாசிகள் ஆன்லைனில் தினமும் சிறப்பு குணமளிக்கும் பிரார்த்தனை அமர்வுகள் 9.40 p.m. முதல் 10.00 p.m. (ist) உட்பட பிரார்த்தனைகள் மேற்கொள்கிறார்கள். உங்களுக்கு எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்போது இணைந்து கொள்ளுங்கள்.
நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், “ஒவ்வொரு நாளும், உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு உதவிக்கொள்வதைப் போல, உங்கள் சூழலில் யார் உடல், மனரீதியாக அல்லது ஆன்மீக ரீதியில் நோயுற்று இருக்கிறார்களோ, அவர்களை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். பின் வாழ்க்கை மேடையில் உங்கள் பங்கு எதுவாக இருப்பினும், அனைத்து விதிகளின் மேடை நடத்துனரால், இயக்கப்பட்ட நீங்கள் அதை சரியாக நடிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.”
நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும் உதவவும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கான நம் ஒன்றுபட்ட முயற்சிகளில் இணைய உங்களை ஊக்குவிக்கிறோம், வரவேற்கிறோம். இறைவனும் குருமார்களும் கருணைமிக்க குணப்படுத்தும் ஒளி மற்றும் தெய்வீக அன்பினால் நம்முடைய உள்ளார்ந்த பிரார்த்தனைகளையும் மனிதாபிமான நிவாரண முயற்சிகளையும் சூழ்ந்துள்ளனர்.
தெய்வீக நட்பில்,
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா
இந்த சேவா செயல்பாட்டில் நீங்கள் பங்களிக்க விரும்பினால், ஆன்லைனில் நன்கொடை அளிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
யோகதா சத்சங்க ஸொசைடி ஆஃப் இந்தியா, வருமான வரி சட்டத்தின் வழிகாட்டுதல் விதிகள் 1961 இன் கீழ் ஒரு சேவா நிறுவனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்க. சொசைட்டிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு (நிரந்தர கணக்கு / PAN எண்: AAATY0283H) இந்தியாவில் வருமான வரி சட்டத்தின் 80- G பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.
நன்கொடை அல்லது எங்கள் நிவாரண செயல்பாடுகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து ராஞ்சி உதவி மையத்தை helpdesk@yssi.org என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும் : +91 (651) 6655 555 (திங்கள் முதல் சனி வரை காலை 9:00 மணி முதல் 4 மணி வரை)
Media Coverage of Charitable Activities
Print Media
- Birsa Vani (Hindi)
- Dainik Bhaskar (Hindi)
- Desh Prana (Hindi)
- Freedom Fighter (Hindi)
- Jadeed Bharat (Urdu)
- Prabhat Khabar (Hindi)
- Punch (Hindi)
- Punjab Kesari (Hindi)
- Pioneer (English)
- Ranchi Express (Hindi)
- Sanmarg City (Hindi)
- Santal Express (Hindi)
- Janadesh (Daraunda, Hindi)
- Dainik Jagran (Haridwar, Hindi)