ஜன்மாஷ்டமி நினைவுகூரும் தியானம்

19 ஆகஸ்ட், 2022

காலை 6.30 மணி

– காலை 8.00 மணி

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

ஓ பார்த்தா (அர்ஜுனா) ! ஒன்றிய மனதுடன், இடைவிடாது, தினமும் என்னை நினைவுகூருபவனாயும், அவனுடைய மனம் என்மீது மட்டுமே தீவிரமாக ஒருமுகப்பட்டு இருப்பவனுமாகிய அந்த யோகியால் நான் எளிதாக அடையப்படுகிறேன்.

— காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: பகவத் கீதை

பகவான் கிருஷ்ணரின் இந்த ஜன்ம தின புனித தருணத்தில் நமது இதயங்களின் ஆலயத்தில் மெளன வழிபாடு செய்ய ஒன்றிணைவோம். இதுபோன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில், கூட்டு தியானங்கள், இப்பாதையில் உள்ள பக்தர்களுக்கு சிறப்பு அருளாசிகளை வழங்குகின்றன, எனவே இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.

ஆகஸ்ட் 19, வெள்ளிக்கிழமை, நாம் பகவான் கிருஷ்ணரை போற்றும் அத்தருணத்தில் காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை YSS சன்னியாசி வழிநடத்தும் ஒரு சிறப்பு தியானத்திற்கு எங்களுடன் இணைந்திருங்கள். இந்த நிகழ்ச்சியில் கீதமிசைத்தல் மற்றும் தியானம், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை இருக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் இது நிறைவடையும்.

இந்த ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ள நிகழ்ச்சியில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.

கவனிக்கவும்: இந்த நிகழ்வு ஆகஸ்ட் 20, சனிக்கிழமை இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி) பார்ப்பதற்கு கிடைக்கும்.

YSS/SRF தலைவர் சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஜென்மாஷ்டமி செய்தி

ஜன்மாஷ்டமியின் இந்த புனித சந்தர்ப்பத்தில் நீங்கள் வழக்கப்படியான காணிக்கை அளிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். நாங்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, பகவான் கிருஷ்ணரின் பிரத்யேக கருணை மற்றும் அருளாசிகளுக்கான உங்கள் நன்றியின் அடையாளமாக உங்கள் காணிக்கையை பெற்றுக் கொள்கிறோம்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர