ஜன்மோத்ஸவ் நினைவு தியானம்

வியாழன், ஜனவரி 5, 2023

காலை 6:30

– 8:30

(IST)

Janmotsav Commemorative Meditation - 2023

நிகழ்வு பற்றி

இறைவனில் காணக் கிடைக்கும் ஆனந்தத்தையும், நீங்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக கண்டுணரப்படக் கூடிய ஆனந்தத்தையும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் என்னுள் ஊடுருவியுள்ள ஆனந்தத்தையும் உங்களுக்குச் சொல்ல நான் இங்கு வந்திருக்கிறேன்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

ஜனவரி 5 ஆம் தேதி நமது அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ ஶ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் அவதார தினம் (பிறந்த நாள்) ஆகும், மேலும் இந்த சிறப்பு நாள் YSS ஆல் ஜன்மோத்ஸவ் என்று நினைவுகூரப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை கௌரவிக்கும் வகையில், YSS சன்னியாசியால் ஆங்கிலத்தில் ஆன்லைன் நினைவு தியானம் மற்றும் சத்சங்கம் நடத்தப்பட்டது.

இந்த புனித சந்தர்ப்பத்தில், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு மரபாக இருந்து வருகிறது – அவரது ஆன்மீக பாரம்பரியமான கிரியா யோக போதனைகளுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வது. நமது புனித குருதேவரின் ஆன்மாவை விடுவிக்கும் போதனைகளை ஊக்குவிக்கவும் பரப்பவும் உங்கள் மதிப்புமிக்க காணிக்கை பயன்படுத்தப்படும்.

நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர