லாஹிரி மகாசயரின் அவதார தினம்
நினைவுகூரும் தியானம்

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 30, 2022

காலை 6.30 மணி.

– காலை 8:00 மணி.

(IST)

ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர் அவதார தினம் செப்டம்பர் 30, 2022

நிகழ்வு பற்றி

உன் எல்லா பிரச்சனைகளையும் தியானத்தின் மூலமே தீர்த்துக்கொள். பயனற்ற ஊகங்களை தவிர்த்து, அதற்குப் பதிலாக இறைவனுடன் உண்மையான ஒன்றுதலை மேற்கொள்.

— ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர்: ஒரு யோகியின் சுயசரிதம்

பரமஹம்ஸ யோகானந்தரின் பரமகுருவான ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர், செப்டம்பர் 30, 1828 அன்று இந்தியாவின் வங்காளத்தில் உள்ள குர்னி கிராமத்தில் பிறந்தார். அனைத்து YSS/SRF பக்தர்களாலும், யோகாவதாரமாக (“யோகத்தின் அவதாரம்”) போற்றப்படும் லாஹிரி மகாசயர் நவீன உலகிற்கு கிரியா யோகத்தை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதத்தில் பின்வருமாறு எழுதினார்: “மலர்களின் நறுமணத்தை எப்படி அடக்கிவிட முடியாதோ அதே போல் லாஹிரி மகாசயரும் ஒரு லட்சிய இல்லறத்தாராக அமைதியான முறையில் வசித்து வந்தபோதிலும் அவருடைய இயல்பான மகிமையை மறைக்க முடியவில்லை. பாரதத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தேனீக்கள் போல் பக்தர்கள், ஆன்ம அனுபூதி பெற்ற மகானாகிய லாஹிரி மகாசயரிடம் தெய்வீக அமிர்தத்தை நாட ஆரம்பித்தார்கள்…. இணக்கமான சமநிலையில் செயல்பட்ட அந்த மகத்தான இல்லற குருவின் வாழ்க்கை ஆயிரக்கணக்கான ஆடவர், பெண்டிருக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.”

செப்டம்பர் 30, 2022 வெள்ளிக்கிழமை அன்று லாஹிரி மகாசயரை அவரது அவதார தினத்தில் போற்றும் வகையில் YSS சன்னியாசி ஒருவரால் ஒரு சிறப்பு நினைவுகூறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தியானம் அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழுவு நடைபெற்றன.

இந்த புனித லாஹிரி மகாசயர் அவதார தினத்தின் போது நீங்கள் வழக்கப்படியான காணிக்கை அளிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றியை தெரிவித்து கொண்டு ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயரின் சிறப்பு கருணை மற்றும் அருளாசிகளுக்கான உங்கள் நன்றி உணர்வின் அடையாளமாக உங்கள் காணிக்கையை பெற்றுக் கொள்கிறோம்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர