தனக்குள்ளே கடவுளைக் கண்டறிவதன் மூலம், எல்லா மனிதர்களிலும் எல்லா நிலைகளிலும் நீங்கள் அவனைக் காண்பீர்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி நினைவு நாளை முன்னிட்டு, மார்ச் 7, திங்கட்கிழமை காலை 06:30 மணி முதல் 08:00 மணி வரை, இந்தியிலும், மாலை 6:00 மணி முதல் – இரவு 7:30. மணி வரை ஆங்கிலத்திலும் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் சிறப்பு நினைவு தியானங்களுக்கு தலைமை தாங்கினர்.

இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் கீதங்கள் மற்றும் தியானங்களுக்கான நேரங்களும் மற்றும் அதைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு ஆகியவற்றை உள்ளடக்கியது.