இறைவனைக் கண்டு பிடித்துவிட்டால் நம்முடைய துக்கங்களுக்கு எல்லாம் அதுதான் தகனமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி மே 10, 1855 அன்று இந்தியாவின் வங்காளத்தில் உள்ள செராம்பூரில் பிறந்தார். அவர் ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயரின் சீடராவார், மேலும் ஞானாவதார் அல்லது ஞானத்தின் அவதாரமாக போற்றப்படுகிறார். அவர் அனைத்து ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப் பக்தர்களின் பரமகுரு ஆவார்.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் பிறந்த தினம் நினைவாக, மே 10, செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை ஒரு ஒய் எஸ் எஸ். சன்னியாசி ஆங்கிலத்தில் வழி நடத்தும் சிறப்பு தியானம் நடைபெறும்.

நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல் மற்றும் தியானம், தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த சிறப்பு நாளில் எங்களுடன் ஆன்லைனில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.