ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை ஆங்கிலத்தில் ஒய் எஸ் எஸ் சன்னியாசி வழிநடத்தும் மூன்று மணி நேர தியானத்தில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். தியான நிகழ்வு ஒரு பதிவுசெய்யப்பட்ட வீடியோவுடன் சக்தியூட்டும் உடற்பயிற்சி செய்வதோடு தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசி வழிநடத்தும் தியானம்.

ஆன்லைன் தியானம் ஒரு துவக்கப் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகம் தரும் வாசிப்பு, மற்றும் கீதமிசைத்தல் மற்றும் மௌன தியான நேரங்கள். மௌன நேரங்கள் மாறுபடலாம். ஆனால் பொதுவாக 45 நிமிடங்களாக இருக்கும். தியான நிகழ்வு பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி பயிற்சி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடையும்.

புதுப்பிப்பு:

பெருந்தொற்று நிலைமை மேம்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்குவதால், நாங்கள் நமது ஆசிரமங்களிலும் மற்றும் மையங்களிலும் நேரில் கூட்டு தியானங்களை மீண்டும் துவங்கியுள்ளோம். இதைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 2022 முதல், சன்னியாசிகள் வழிநடத்தும் தியானங்கள் இப்போது ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடத்தப்படும்.

அட்டவணை (ஏப்ரல் 1, 2022 முதல்)

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை

ஆங்கிலம்

காலை மணி 6:10 முதல் – 9:30 வரை

ஆன்லைன் தியானங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். தியானத்தில் கலந்துகொள்ள , கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூம் லிங்க் அல்லது யூடியூப் லிங்கை கிளிக் செய்யவும்.