விழித்தெழு: யோகானந்தரின் வாழ்க்கை – சியாட்ல் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

நமது குருவின் வாழ்க்கை மற்றும் பணி – விழித்தெழு: யோகானந்தரின் வாழ்க்கை பற்றிய கௌன்டர்பாயின்ட் ஃபிலிம்ஸின் ஆவணப்படம் 2014 இலையுதிர் காலத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட திட்டமிடப்பட்ட உற்சாகமூட்டும் செய்தியை கடந்த மாதம் நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். இந்த மாத இறுதியில் சியாட்ல் சர்வதேச திரைப்பட விழாவில் (SIFF) இத் திரைப்படத்தின் உலகத் திரைப்பட விழா முதல் காட்சி நடைபெறும் என்பதை இப்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்காவில் மிகவும் அதிகமாக மக்கள் வருகைபுரியக்கூடிய திரைப்பட விழாக்களில் ஒன்றான SIFF, மே 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கும் மீண்டும் மே 19 திங்கள் காலை 7 மணிக்கும் இப் படத்தைத் திரையிடுகிறது.

முன்பு அறிவித்தபடி, அரிசோனாவின் செடோனாவில் ஒளிரும் திரைப்பட விழா – உணர்வுப்பூர்வமான சினிமாவுக்கான தளம் – அதன் ஆவணப்பட அம்சங்களில் ஒன்றாக விழித்தெழு வைத் தேர்ந்தெடுத்துள்ளது.  படம் மே 30 வெள்ளிக்கிழமை திரையிடப்படும்.  ஜூன் 1 ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது திரையிடலும் திட்டமிடப்படலாம். திரையிடலைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர்களுடன்  கேள்வி & பதில் வேளை. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து  www.illuminatefilmfestival.com.ஐப் பார்வையிடவும்.

திரைப்பட விழாக் காட்சிகளில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகள் பொதுமக்களுக்குக் கிடைக்கும். திரைப்படம் அல்லது விழா காட்சிகள் பற்றிய மேலும் தகவல்களைப் பெறவும், திரைப்படத் தயாரிப்பாளர்களின் அஞ்சல் பட்டியலில் சேரவும் விரும்பினால், தயவுசெய்து படத்தின் வலைதளத்தை  www.AWAKEtheYoganandaMovie.comல் பார்வையிடவும்.

படம் குறித்த முந்தைய செய்திகளைப் பார்க்கவும்

இதைப் பகிர