புத்தகங்கள்

யோகதா சத்சங்கப் பாடங்கள்

கிரியாயோகம் உட்பட பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த விஞ்ஞானரீதியான தியான உத்திகளும் — அத்துடன் சரிசமநிலையான ஆன்மீக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பற்றிய அவரது வழிகாட்டுதலும் யோகதா சத்சங்கப் பாடங்களில் கற்பிக்கப்படுகின்றன. இந்த விரிவான வீட்டுப்பாடத் தொடர், இம் மகத்தான குருவின் மாணவர்களுக்கான தனிப்பட்ட அறிவுறுத்தல்களை ஆயிரக்கணக்கான பக்கங்களில் கொண்டுள்ளது. இது எளிதில் கிரகித்துக் கொள்ளக்கூடிய வாராந்திர பாடங்களாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யோகதா சத்சங்கப் பாடங்களுக்கு விண்ணப்பிக்க.

யோகியின் சுயசரிதம் ஆன்மீக இலக்கியம்

ஒரு யோகியின் சுயசரிதம்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வால் வெளியிடப்படும் இந்த ஆன்மீக இலக்கியத்தின் பதிப்புகள் மட்டும்தான், இறுதி நூல் வடிவத்திற்கான ஆசிரியரின் அனைத்து விருப்பங்களையும் உள்ளடக்கியவையாகும் — 1924 முதல் அவர் மறைந்த 1952 வரை தன்னுடன் பணியாற்றிய பதிப்பாசிரியரிடம் அவரால் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டவை; மற்றும் அவர் பதிப்பாசிரியரிடம் தன் படைப்புகளின் வெளியீடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஒப்படைத்தார்.

இப்போதே வாங்க

சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு

தினசரி  வாழ்க்கையில் இறைவனை உணர்தல் குறித்த சொற்பொழிவு

மனிதனின் நிரந்தரத் தேடல்

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு, ஒரு யோகியின் சுயசரிதத்தில் லட்சக்கணக்கானவர்களை ஈர்த்த பரந்த அளவிலான எழுச்சியூட்டும் மற்றும் உலகளாவிய உண்மைகளைப் பற்றிய விரிவான ஆய்வுரைகளை முன்வைக்கின்றன. பாகம் 1 — தியானம், மரணத்திற்குப் பின்னாலான வாழ்வு, படைப்பின் தன்மை, ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்துதல், மனத்தின் எல்லையற்ற ஆற்றல்கள் மற்றும் இறைவனிடம் மட்டுமே நிறைவைக் காணும் நிரந்தரத் தேடல் ஆகியவற்றைப் பற்றி சிறிது அறியப்பட்ட மற்றும் அபூர்வமாக புரிந்துகொள்ளப்பட்ட அம்சங்களை ஆராய்கிறது.

இப்போதே வாங்க

பரமஹம்ஸ யோகானந்தரின் தெய்வீகக் காதல்

தெய்வீகக் காதல்

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு, பாகம் II. பரந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் உள்ளவை: தெய்வீக அன்பை வளர்ப்பது எப்படி; உடல், மனம் மற்றும் ஆன்மீக குணப்படுத்தும் முறைகளை இணக்கமாக்குதல்; எல்லைகள் இல்லாத உலகம்; உங்கள் ஊழ்வினையை கட்டுப்படுத்துதல்; மாளும் உணர்வையும் மரணத்தையும் வெல்லுகின்ற யோகக் கலை; பிரபஞ்சப் பேரன்பன்; வாழ்க்கையில் ஆனந்தத்தைக் காணல்.

இப்போதே வாங்க

ஜர்னி டு ஸெல்ஃப்-ரியலைசேஷன்: தினசரி  வாழ்க்கையில் இறைவனை உணர்தல் குறித்த சொற்பொழிவு

ஜர்னி டு ஸெல்ஃப்-ரியலைசேஷன் (ஆங்கிலம்)

சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு III –ம் பாகம், ஸ்ரீ யோகானந்தருடைய ஞானம், இரக்கம், முற்றிலும் நடைமுறைக்கேற்ற வழிகாட்டுதல், ஊக்கமளித்தல் ஆகியவற்றை பல கவர்ந்திழுக்கும் தலைப்புகளில் — மனித பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்தல், என்றும் இளமையை வெளிப்படுத்துவது எப்படி, மற்றும் உங்களுடைய தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்தல் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துகிறது.

இப்போதே வாங்க

மறைநூல்களைப் பற்றிய விளக்கவுரைகள்

காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: பகவத் கீதை குறித்த யோகனந்தரின் விளக்கவுரை

காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா —ஒரு புதிய மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க உரை (ஆங்கிலம்)

இந்த சிறப்புமிக்க இரு-பாகங்களைக் கொண்ட நூலில், பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவின் மிகவும் ஒப்பற்ற மறைநூலின் உள்ளார்ந்த சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதன் உளவியல், ஆன்மீக மற்றும் பரதத்துவ ஆழங்களை ஆராய்ந்து, ஆன்ம-அனுபூதிக்கான இராஜ விஞ்ஞானத்தின் மூலம் ஞானம் பெறுவதற்கான ஆன்மாவின் பயணத்தைப் பற்றிய ஒரு விரிவான தொகுக்கப்பட்ட விளக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

இப்போதே வாங்க

தி செகன்ட் கமிங் ஆஃப் க்ரைஸ்ட்: இயேசுவின் மூல போதனைகளைப் பற்றி புதிதாக வெளிப்படுத்தும் ஒரு விளக்கஉரைSecond coming of Christ

தி செகன்ட் கமிங் ஆஃப் க்ரைஸ்ட்: தி ரிசரெக்ஷ்ன் ஆஃப் தி க்ரைஸ்ட் விதின் யு — இயேசுவின் மூல போதனைகளைப் பற்றி புதிதாக வெளிப்படுத்தும் ஒரு விளக்கஉரை (ஆங்கிலம்)

மனவெழுச்சியூட்டும் இந்த ஈடிணையற்ற அற்புதப் படைப்பில், கிட்டத்தட்ட 1700 பக்கங்கள் நீளம், பரமஹம்ஸ யோகானந்தர் நான்கு நற்செய்திகளின் ஊடாக ஆழ்ந்த வளமூட்டும் பயணத்தில் வாசிப்பவரை அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு வசனமாக இயேசு தம்முடைய நேரடி சீடர்களுக்குக் கற்பித்த, ஆனால் பல நூற்றாண்டுகளாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, இறைவனோடு ஒன்றுவதற்கான அனைவருக்கும் பொருந்தும் பாதையை அவர் வெளிப்படுத்துகிறார்: “கிறிஸ்துவைப் போல மாறுவது எப்படி, உங்களுக்குள் நித்திய கிறிஸ்துவை உயிர்ப்பிப்பது எப்படி”

இப்போதே வாங்க

ஆன்மீக-சக்திவாய்ந்த கவிதை

சாங்ஸ் ஆஃப் தி சோல் (ஆன்மாவின் கவிதைகள்): யோகானந்தர்  எழுதிய கவிதைகள்

சாங்ஸ் ஆஃப் தி சோல் (ஆன்மாவின் கவிதைகள்) (ஆங்கிலம்)

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக-சக்திவாய்ந்த கவிதை—இயற்கையின் அழகுகளிலும், மனிதனிலும், அன்றாட அனுபவங்களிலும், சமாதி தியானத்தின் ஆன்மீக விழிப்புநிலையிலும் இறைவனது நேரடி தரிசனத்தைப் பற்றிய ஒரு கவிதைப் பொழிவு.

இப்போதே வாங்க

பரமஹம்ஸ யோகானந்தரின் விஸ்பர்ஸ் ஃப்ரம் இடர்னிடி (சாசுவதத்திலிருந்து வரும் மென்குரல்கள்)

விஸ்பர்ஸ் ஃப்ரம் இடர்னிடி (சாசுவதத்திலிருந்து வரும் மென்குரல்கள்) (ஆங்கிலம்)

தியானத்தின் உயர்நிலைகளில் பரமஹம்ஸ யோகானந்தரின் பிரார்த்தனைகள் மற்றும் தெய்வீக அனுபவங்களின் தொகுப்பு. கம்பீரமான லயத்திலும், கவிதை அழகிலும் வெளிப்படுத்தப்பட்ட அவரது வார்த்தைகள் இறை-இயல்பின் வற்றாத பல்வகைமைகளையும், அவரை நாடுபவர்களுக்கு அவர் அளிக்கும் மறுமொழியின் எல்லையற்ற இனிமையையும் வெளிப்படுத்துகின்றன.

இப்போதே வாங்க

ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன் (அறிவியல்பூர்வமான குணமாக்கும் சங்கல்பம்) மேலுறை பரமஹம்ஸ யோகானந்தர்

ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன்ஸ் (அறிவியல்பூர்வமான குணமாக்கும் சங்கல்பங்கள்) (ஆங்கிலம்)

பரமஹம்ஸ யோகானந்தர் சங்கல்ப விஞ்ஞானத்தின் ஆழமான விளக்கத்தை இங்கே முன்வைக்கிறார். சங்கல்பங்கள் ஏன் செயல்படுகின்றன என்பதையும், குணப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வார்த்தை மற்றும் எண்ணத்தின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். இது பலவிதமான சங்கல்பங்களை உள்ளடக்கியது.

இப்போதே வாங்க

சேங்க்சுரி ஆஃப் தி சோல் (ஆன்ம சரணாலயம்)

இன் தி சேங்க்சுரி ஆஃப் தி சோல்: அ கைட் டு எஃபக்டிவ் ப்ரேயர் (ஆன்ம சரணாலயத்தில்: பயன்தரும் பிரார்த்தனைக்கான ஒருவழிகாட்டுதல்) (ஆங்கிலம்)

பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த எழுச்சியூட்டும் பக்திமிகு தோழன், பிரார்த்தனையை, அன்பு, வலிமை மற்றும் வழிகாட்டுதலின் தினசரி ஆதாரமாகச் செய்வதற்கான வழிகளை வெளிப்படுத்துகிறது.

இப்போதே வாங்க

தியானம் மற்றும் கிரியாயோகம்

பரமஹம்ஸ யோகானந்தரின் சமய விஞ்ஞானம்

சமய விஞ்ஞானம்

பரமஹம்ஸ யோகானந்தர் எழுதுகிறார், “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், துன்பத்தை வெல்வதற்கும், முடிவற்ற மகிழ்ச்சியை அடைவதற்கும் தவிர்க்க முடியாத ஒர் ஆசை இருக்கிறது: இந்த ஏக்கங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை விளக்கி, இந்த இலக்கிற்கான வெவ்வேறு அணுகுமுறைகளின் ஒப்பீட்டு செயல்திறனை அவர் ஆராய்கிறார்.”

இப்போதே வாங்க

மெடஃபிசிகல் மெடிடேஷன்ஸ் (பரதத்துவ தியானங்கள்): இறைவனின் பேரின்பமயமான இருப்பைப் பற்றிய உணர்வுபூர்வ விழிப்புநிலையில் அதிக முழுமையாக வாழ்வதற்கு

மெடஃபிசிகல் மெடிடேஷன்ஸ் (பரதத்துவ தியானங்கள்) (ஆங்கிலம்)

அதிக ஆரோக்கியம் மற்றும் உயிராற்றல், படைப்பாற்றல், தன்னம்பிக்கை, அமைதி ஆகியவற்றை உருவாக்கவும்; இறைவனின் பேரின்பமயமான இருப்பைப் பற்றிய உணர்வுபூர்வ விழிப்புநிலையில் அதிக முழுமையாக வாழ்வதற்கும் பயன்படுத்தக்கூடிய 300—க்கும் மேற்பட்ட ஆன்மீக எழுச்சியூட்டும் தியானங்கள், பிரார்த்தனைகள் மற்றும் சங்கல்பங்கள்.

இப்போதே வாங்க

மனவெழுச்சியூட்டுபவை

ஒளி உள்ள இடத்தினில்: இறைவனின் என்றும் உள்ள ஆற்றலைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்விற்குமான ஒரு தனித்துவமான கையேடு

ஒளி உள்ள இடத்தினில்: வாழ்க்கையின் சவால்களைச் சந்திப்பதற்கான உள்நோக்கு மற்றும் உள்ளெழுச்சி

பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து தொகுத்து, தலைப்புகளின்படி அமைக்கப்பட்ட சிந்தனை இரத்தினங்கள். நிச்சயமற்ற அல்லது நெருக்கடியான காலங்களில, வாசகர்கள், நம்பிக்கையை மீட்டளிக்கும் வழிகாட்டுதலுக்காக உடனடியாக நாடுவதற்கும், அல்லது அன்றாட வாழ்க்கையில் ஒருவர் பெறக்கூடிய இறைவனின் என்றும்–உள்ள ஆற்றலைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்விற்குமான ஒரு தனித்துவமான கையேடு.

இப்போதே வாங்க

பரமஹம்ஸ யோகானந்தரின் அருள்மொழிகள்: அவரது நெருங்கிய சீடர்கள் பலரால் பதிவுசெய்யப்பட்டவை

பரமஹம்ஸ யோகானந்தரின் அருள்மொழிகள்

வழிகாட்டுதலுக்காக தன்னிடம் வந்தவர்களுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் நேர்மையான மற்றும் அன்பான மறுமொழிகளைத் தெரிவிக்கும் அருள்மொழிகள் மற்றும் விவேகமான ஆலோசனைகளின் தொகுப்பு. அவரது நெருங்கிய சீடர்கள் பலரால் பதிவுசெய்யப்பட்ட இப்புத்தகத்தில் உள்ள நிகழ்வுகள், வாசிப்போருக்கு குருதேவருடனான தமது தனிப்பட்ட சந்திப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கின்றன.

இப்போதே வாங்க

ஆன்மீக ஆலோசனை

Inner Peace(அகஅமைதி): 2000 பெஞ்சமின் ஃபிராங்க்ளின் விருதை வென்றது

இன்னர் பீஸ்: ஹவ் டு பி காம்லி ஆக்டிவ் அன்ட் ஆக்டிவ்லி காம் (அகஅமைதி: எவ்வாறு அமைதியாக செயல்திறத்துடனும், செயல்திறமுடைய அமைதியுடனும் இருப்பது (ஆங்கிலம்)

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு நடைமுறை மற்றும் எழுச்சியூட்டும் வழிகாட்டி. இந்த நூல், ஆற்றல்மிக்க, நிறைவுபடுத்துகின்ற, சரிசமநிலையான வாழ்க்கையை வாழும்பொழுதே, நமது சொந்த இன்றியமையாத இயல்பாகிய அமைதி மற்றும் ஆனந்தத்தில் நிலைத்திருந்து, தியானத்தின் மூலம் அமைதியை ஏற்படுத்தி “செயல்திறமுடைய அமைதியுடன்” இருப்பது எப்படி மற்றும், “அமைதியாக செயல்திறத்துடன்” இருப்பது எப்படி என்பதை தெளிவுபடுத்திக் காட்டுகிறது. இதன் ஆங்கிலப் பதிப்பு 2000 பெஞ்சமின் ஃபிராங்க்ளின் விருதை வென்றது — பரதத்துவ / ஆன்மீகத் துறையில் மிகச் சிறந்த புத்தகம்.

இப்போதே வாங்க

வெற்றியின் விதிமுறை: வெற்றிகளையும் நிறைவையும் தருவிக்கும் உலகளாவிய விதிகள்

வெற்றியின் விதிமுறை

வாழ்க்கையில் ஒருவரின் குறிக்கோள்களை அடைவதற்கான சக்திமிக்க கோட்பாடுகளை விளக்குகிறது, மேலும் தனிப்பட்ட, தொழில்முறை மற்றும் ஆன்மீக வெற்றிகளையும் நிறைவையும் தருவிக்கும் உலகளாவிய விதிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.

இப்போதே வாங்க

இறைவனுடன் நீங்கள் பேசுவது எப்படி

இறைவனுடன் நீங்கள் பேசுவது எப்படி

இறைவனை, எல்லைகடந்த, அனைவருக்கும் பொதுவான பரம்பொருள் என்றும், நெருக்கமான முறையில் சொந்தத் தந்தை, தாய், நண்பர் மற்றும் அனைவரின் அன்பன் எனவும், இரண்டுமாக விவரித்து பரமஹம்ஸ யோகானந்தர் நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் எவ்வளவு நெருக்கமானவர் என்பதையும், “அவன் தனது மௌனத்தைக் கலைக்க” மற்றும் தெளிவாக அறியக்கூடிய வகையில் மறுமொழிகூற அவனை எவ்வாறு இணங்கவைப்பது என்பதையும் தெரிவிக்கிறார்.

இப்போதே வாங்குவதற்கு

கீர்த்தனை மற்றும் பக்திஇசை

பிரபஞ்ச கீதங்கள்: இறைத் தொடர்புக்கான ஆன்மீகமயமாக்கப்பட்ட கீதங்கள்

பிரபஞ்ச கீதங்கள்: இறைத் தொடர்புக்கான ஆன்மீகமயமாக்கப்பட்ட கீதங்கள் (ஆங்கிலம்)

ஆன்மீக கீதம் இசைத்தல் இறை-தொடர்புக்கு எவ்வாறு இட்டுச்செல்லும் என்பதை விளக்கும் ஓர் அறிமுகத்துடன், அறுபது பக்தி கீதங்களுக்கான சொற்களும் இசையும்.

இப்போதே வாங்குவதற்கு

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆடியோ பதிவுகள் (ஆங்கிலத்தில்)

அனைத்து யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடுகள் மற்றும் ஆடியோ/ வீடியோ பதிவுகளின் முழுமையான தொகுப்பிற்கு எங்கள் இணையதள (ஆன்லைன்) புக் ஸ்டோரைப்  பார்வையிடுங்கள்.

இதைப் பகிர

Collections

More

Author

More

Language

More