பரமஹம்ஸ யோகானந்தரின் முழுமையான படைப்புகள்

பரமஹம்ஸ யோகானந்தர் தோன்றி ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் நம் காலத்தின் ஒப்புயர்வற்ற ஆன்மீகவாதிகளில் ஒருவராக அங்கீகரிக்கப்படுகிறார்; அவரது வாழ்க்கை மற்றும் பணியின் தாக்கம் வளர்ந்து வருகிறது. பல வருடங்களுக்கு முன்னர் அவர் அறிமுகப்படுத்திய பல சமய மற்றும் தத்துவக் கருத்துகளும் வழிமுறைகளும் இப்போது கல்வி, உளவியல், வணிகம், மருத்துவம் மற்றும் பெருமுயற்சி எடுக்கப்படும் பிற துறைகளில் பயன்பாட்டைக் காண்கின்றன. அவை ஓர் அதிக ஒருங்கிணைந்த, மனிதநேயமிக்க மற்றும் ஆன்மீக தொலைநோக்குடைய மனித வாழ்விற்கு பரந்த-செயல்விளைவுடைய வழிகளில் பங்களிக்கின்றன.

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் பல வெவ்வேறு துறைகளிலும், அத்துடன் பல்வேறு தத்துவ மற்றும் பரவியல் இயக்கங்களின் வல்லுனர்களாலும், விளக்கப்பட்டும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன என்ற உண்மையானது, அவர் போதித்தவற்றின் பெருமளவிலான நடைமுறைப் பயன்பாட்டை மட்டுமே குறிப்பிடவில்லை. அவர் விட்டுச்சென்ற தெய்வீகப் பரம்பரைச் செல்வம் காலப்போக்கில் தரம் குன்றாமலோ, பகுக்கப்படாமலோ சிதைக்கப்படாமலோ இருப்பதை உறுதி செய்வதற்கான சில வழிமுறைகள் தேவை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றிய தகவல்கள் பல வழிகளில் பெருகி வருவதால், ஒரு பிரசுரம் அவரது வாழ்க்கையையும் போதனைகளையும் சரியாக எடுத்துரைக்கிறது என்று தாங்கள் எவ்வாறு நிச்சயம் செய்து கொள்ள முடியும் என சில சமயங்களில் வாசகர்கள் விசாரிக்கின்றனர். இவ்விசாரணைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பரமஹம்ஸ யோகானந்தர் அவரது போதனைகளைப் பரப்பவும், எதிர்காலச் சந்ததிகளுக்காக அவற்றின் பரிசுத்தத்தையும் முழுமையையும் பாதுகாக்கவும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ஐ நிறுவினார் என நாங்கள் விளக்க விரும்புகிறோம். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப் வெளியீடுகள் குழுவிற்குத் தலைமை வகிக்கும் நெருங்கிய சீடர்களை அவர் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்து பயிற்சியளித்தார், மேலும் அவர்களுக்கு தனது விரிவுரைகள், நூல்கள் மற்றும் யோகதா சத்சங்கப் பாடங்கள் தயார் செய்யவும் பிரசுரிக்கவும் திட்டவட்டமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். இந்த அன்பிற்குரிய உலக ஆசானின் அனைவருக்கும் ஏற்ற உபதேசங்கள் மூல சக்தியுடனும் உண்மையுடனும் இருக்கும் பொருட்டு ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் வெளியீடுகள் குழுவின் அங்கத்தினர்கள், இவ்வழிமுறைகளைப் புனிதப் பொறுப்பாக மதிக்கின்றனர்.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் – இவற்றின் பெயரும், ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் சின்னமும் (கீழே காண்பிக்கப்பட்டுள்ளது) ஆன்மீக மற்றும் மானிட சேவை புரிய அவர் உலகம் முழுவதும் நிறுவிய ஸ்தாபனத்தை அடையாளம் காட்டுவதற்காக பரமஹம்ஸ யோகானந்தரால் உருவாக்கப்பட்டவை. இவை ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் -ன் அனைத்து புத்தகங்கள் ஒலி/ஒளிப் பதிவுகள், திரைப்படங்கள் மற்றும் இதர வெளியீடுகளின் மீதும் காணப்படுகின்றன. மேலும் இவை ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட ஸ்தாபனத்தில் ஒரு பணி உருவாகிறது என்பதையும் அவரது போதனைகள் அவர் நோக்கத்தின்படியே சரியாக கொடுக்கப்படுகிறது என்பதையும் வாசகர்களுக்கு உறுதி செய்கின்றன.

அனைத்து முக்கிய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடுகளும் அவற்றின் அட்டைப் படத்தில் ஒரு ‘ஹாலோகிராம்’ (வலதுபுறம் காண்பிக்கப்பட்டுள்ளது) உள்ளது. இது, பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட ஸ்தாபனத்தில் வெளியீடுகள் உருவாகின்றன என்பதையும் அவரது போதனைகள் அவர் நோக்கத்தின் படியே சரியாக கொடுக்கப்படுகின்றன என்பதையும் வாசகர்களுக்கு உறுதி செய்கின்றன.

பரமஹம்ஸ யோகானந்தர் –கீழை நாட்டிற்கும் மேலை நாட்டிற்குமான ஒரு யோகி.

இதைப் பகிர