நிகழ்ச்சிகள்

"யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா என்பது ஆன்ம ஞானம் மூலம் அடையும் இறை ஐக்கியத்தையும் மெய்ப்பொருளை நாடும் அனைத்து ஆன்மாக்களுடனானத் தோழமையையும் குறிக்கிறது."

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட தியான மையங்கள், ஆசிரமங்கள், ஏகாந்த வாசஸ்தலங்களைக் கொண்டுள்ளது – ஆர்வமுள்ள அனைவருக்கும் கூட்டுத் தியானங்கள், கவனக்குவிப்புடன் கற்கும் ஏகாந்தவாச நிகழ்ச்சிகள், எழுச்சியூட்டும் சேவைகள் மற்றும் ஆன்மீகத் தோழமை ஆகியவற்றின் ஆற்றலை உணரக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது.

பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் போதனைகளை மையமாகக் கொண்டு, எங்கள் வருடாந்திர ஷரத் சங்கம் உட்பட, நாங்கள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகளையும் ஆண்டு முழுவதும் நடத்துகிறோம்; நாடு முழுவதும் உள்ள எங்கள் தியான மையங்கள் மற்றும் குழுக்களுக்கு அருகிலுள்ள இடங்களில் வார இறுதி ஏகாந்த வாச நிகழ்வுகள், ஒவ்வொரு ஆண்டும் பற்பல நகரங்களில் தொடர் விரிவுரைகள் மற்றும் தியான வகுப்புகள் (கிரியா யோக தீட்சை உட்பட) முதலியன. 

இதைப் பகிர