கிரியா யோக மறுமலர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா -2011

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் செய்தி:

இந்த ஆண்டு நாம் நீண்ட காலமாக இழந்த புனிதமான கிரியா யோக விஞ்ஞானம் சிறப்பாக வழங்கப்பட்ட மறுமலர்ச்சி காலமான 150வது ஆண்டு விழாவாகும். இந்த மைல்கல் பேரானந்தத்துடனும் இறைவன் மற்றும் ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப் வழிவந்த குருமார்கள் அறிவொளி மிக்க ஆன்மீக பொக்கிஷத்திலிருந்து விலைமதிப்பற்ற பரிசினை நமக்கு வழங்கியதற்காக கொண்டாட வேண்டிய தருணமாகும்.

கிரியா யோகம் என்பது மனிதனின் உணர்வுநிலையை மேம்படுத்துவதற்கான விஞ்ஞானம்- மற்றும் ஆன்மாவிற்குள் இருக்கும் இறைவனின் இராஜ்ஜியத்திற்கான திறவுகோல் மற்றும் முற்காலத்தில் மறைக்கப்பட்ட எங்கும் நிறைந்திருக்கும் உருவமுள்ள இறைவனை சாதாரண மரண உணர்வு என்ற விஷயத்தின் மீது கவனம் செலுத்தி பூமியில் சொர்க்கத்தை வெளிப்படுத்துவதாகும். இந்த பரிசானது இறைவனின் கருணையையும் மற்றும் நமது மகத்தான குருமார்களின் உதவி மற்றும் வாக்குறுதிகளையும் உள்ளடக்கி உண்மையான விசுவாசமுள்ள கிரியா யோகிக்கு வழங்கப்பட்ட நன்கொடை ஆகும். நேர்மையான மனசாட்சியுடன் சரியான முறையில் கிரியா பயிற்சி செய்யவும் மற்றும் சரியாக வாழ்வதற்கும் முயற்சிக்கும் பக்தனின் மனப்போக்கு அவர்களின் ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் கிடைக்கின்றன.

பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோகத்தை மறு அறிமுகம் செய்து அதனை உலகம் முழுவதும் தனது அர்ப்பணிப்பின் மூலம் பரவச் செய்ததால் மனித பரிணாம வளர்ச்சியில் முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளார். கடந்த நூற்றாண்டுகளாக அறிவியலும், தொழில்நுட்பமும் மாபெரும் முன்னேற்றத்துடன் வளர்ச்சியடைந்தது. ஆனால் அதே சமயத்தில் ஊடுருவிய கொந்தளிப்பான காலகட்டத்தில் உள்ள சான்றுகள் இத்தகைய முன்னேற்றங்கள் உண்மையான மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவதற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்த்திக்காட்டின. ஆன்மீக ஞானம் மற்றும் இறைவனோடு தொடர்பு இல்லாவிடில் மக்களின் மனம் எப்பொழுதும் வெறுமை மிக்கதாகவும், எந்த புலன்களின் ஆசையையும் பூர்த்தி செய்ய முடியாததாகவும் மாறி அகங்கார இலட்சியங்களால் நிரப்பப்படும். இறைவனுடன் நாம் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதை உணர்ந்து அவரை நம் அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கை நிறைவாக இருக்கும். சரியான வாழ்க்கை முறையான கிரியா யோக விஞ்ஞானம் மற்றும் தியானம், மற்றும் நம்மைப் படைத்தவரோடும் இணக்கத்தை ஏற்படுத்துகின்றது. மாயையின் அடித்தளத்தின் விளைவாக ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட விரும்பும் பலருக்கும் இறைவனின் கருணையான பதிலாகவும் ஆன்ம அழைப்பாகவும் விடுக்கப்படுகின்றது. இறைவனுடனான நமது உறவை நமது நல்வாழ்வை கண்டறிந்து, அவரின் அமைதியையும், தெய்வீக அன்பையும் அனுபவிக்க ஒரு வழியை ஏற்படுத்தும் இது இறுதியாக உடலால் அடையாளப்படுத்தப்படும் அகந்தையின் அழியாத ஆன்மாவை நம் மையமான உணர்வு நிலையாக மாற்றுகின்றது. அத்தகைய உணர்வு நிலையில் தான் நம் குருதேவர் பரமஹம்ஸர் வாழ்ந்தார். அவருக்கு எண்ணற்ற பொறுப்புக்களும், பல சவால்களும் இருந்தாலும் இறைவனால் – வழங்கப்பட்ட பணியை மேற்கொள்வதில் அவர் எப்பொழுதும் தெய்வீகத்தால் நங்கூரமிடப்பட்ட மேலான ஆனந்தத்தில் காட்சிதந்தார். விடுதலை ஆசீர்வாதங்கள் கொண்ட கிரியா யோகத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் அவர் எவ்வளவு அயராது பணியாற்றினார்!

குருதேவர் நாம் ஒவ்வொருவரும் இந்த வாழ்நாளிலேயே இறைவனை அறிந்து கொள்ள ஆன்மீக பிறப்புரிமை உள்ளது என்பதை நினைவூட்டினார். ஆழ்ந்த கிரியா தியானத்தால் நாம் எல்லையற்ற இறைவனை தொழும் போது அவரது தெய்வீக குணங்களை நமக்கான வெளிப்புறப் பணிகளில் கொண்டு வருகின்றோம். அவர்கள் ஞானம் நாம் பிறரைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையின் நம் சொந்த சவால்களுக்கு தீர்வு காணவும் உதவுகின்றது. அவருடைய அன்பை நாம் அனுபவிக்கும் பொழுது மிகுந்த இரக்கம் உள்ளவர்களாகவும் மன்னிப்பவர்களாகவும் மாறுகிறோம்.

இறைவன் மற்றும் குருதேவரின் அன்பில் இடைவிடாத ஆசீர்வாதம்,

ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2011 ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

கிரியா யோக மறுமலர்ச்சியின் 150வது ஆண்டு விழா -2011

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.