தற்போதைய பெருந்தொற்று நிலைமையின் காரணமாக, எல்லா சன்னியாசப் பயணங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியா -வின் சன்னியாசிகள் நாடு முழுவதிலும் உள்ள நகரங்களுக்குப் பயணங்களை மேற்கொள்கின்றனர்; அவர்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம-முக்திப் போதனைகளுக்கான என்றும்-வளரும் தேவையை நிறைவேற்ற உதவி செய்கின்றனர். அவர்கள் வார-இறுதி ஏகாந்தவாச தியானங்களையும் உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்; அந்நிகழ்ச்சிகளில் பரமஹம்ஸரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள் மீதான வகுப்புகள், ஒய் எஸ் எஸ் யோக உத்திகளின் மறு ஆய்வு, கூட்டுத் தியானங்கள், கீதமிசைத்தல், ஒலி-காணொலி காட்சிகள் மூலம் விளக்கவுரைகள், கிரியா யோக தீட்சை விழாக்கள் ஆகியவை அடக்கம்.
சொற்பொழிவுப் பயணங்கள் புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் பாட மாணவர்களுக்கு ஒய் எஸ் எஸ் தியான உத்திகளில் ஆழ்ந்த வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சிகளும் வட்டார ஏகாந்தவாச நிகழ்ச்சிகளும் ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் மீதான வகுப்புகளை உள்ளடக்குகின்றன மற்றும் கூட்டுத் தியானங்களுக்கும் சத்சங்கத்திற்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன. நிகழ்ச்சிகளில் பின்வருவன போன்ற பரமஹம்ஸ யோகானந்தரின் மற்ற பல முக்கிய அம்சங்களும் அடக்கம்:
- அன்றாட வாழ்வில் தியானத்தின் முக்கியத்துவம்
- ஓர் அதிக ஒத்திசைவான வாழ்வை வாழ்வது எப்படி
- அகத் தேவைகளைப் புறத் தேவைகளுடன் சமநிலைப் படுத்தக் கற்றுக் கொள்ளுதல்
- ஓர் ஆன்மீக அடித்தளத்தின் மீது உறவுகளைக் கட்டமைத்தல்
- வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்
- உடல்நலம், குணமாக்குதல் ஆகியவற்றின் யோகத் தத்துவங்கள்
- மரணத்தையும் மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையையும் பற்றிப் புரிந்து கொள்ளுதல்
- கர்மவினையும் மறுபிறவியும்
- பழங்கால யோக அறிவியலுக்கும் தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள்
- மௌனம், தனிமை ஆகியவற்றின் சக்திவாய்ந்த விளைவுகள்
- எப்படி நம் ஒவ்வொருவராலும் ஓர் அதிக இரக்கமுள்ள மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்க உதவ முடியும்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மெய்ந்நிகர் தியான மையத்தில் நடத்தப்படும் மெய்ந்நிகர் தியானங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.