ஏகாந்தவாச ஆன்மீகப் பயிற்சிகள்

தற்போதைய பெருந்தொற்று நிலைமையின் காரணமாக, நேரடியாகப் பங்குகொள்ளும் அனைத்து ஏகாந்தவாச தியான மையங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.  ஒய் எஸ் எஸ் மெய்ந்நிகர் தியான மையத்தில் நடத்தப்படும் மெய்ந்நிகர் தியானங்கள், பயிற்சி வகுப்புகள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகிய வற்றில் இணையுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஆன்லைன் தியான கேந்திரா.

“இறைவனுடன் தனிமையில் இருப்பது உங்களுடைய மனம், உடல், ஆன்மா ஆகியவற்றுக்கு என்னவெல்லாம் செய் யுமென்று நீங்கள் வியப்படை யக்கூடும்…மௌனத்தின் வாயில்களின் வழியாக விவேகம் மற்றும் அமைதி எனும் குணமாக்கும் ஆதவன் உங்கள் மீது ஒளிவீசுவான்.”

—— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒய் எஸ் எஸ் ஏகாந்தவாச தியான மையங்கள் மற்றும் வாழ்வது-எப்படி ஏகாந்தவாச நிகழ்ச்சிகள்

வாழ்வது-எப்படி ஏகாந்தவாச நிகழ்ச்சிகள், ராஞ்சி

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வின் வாழ்வது-எப்படி ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் தெய்வீக உணர்வு நிலையை ஆழப்படுத்த, ஆன்மீகப் புதுப்பித்தலை நாடுவோரும் அன்றாட வாழ்வின் நெருக்கடிகளைப் பின்னுக்குத் தள்ளிவைக்க—ஒரு சில நாட்களுக்கு மட்டுமேயானாலும் கூட—விரும்புவோரும் கலந்து கொள்ளலாம். அன்றாட ஏகாந் தவாச நிகழ்ச்சிகள், பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்களில், “எல்லையற்றவனால் மீள்நிரப்பு செய்யப்படும் தனித்துவமான நோக்கத்திற்காக நீங்கள் செல்லக் கூடிய இடமான மௌனம் எனும் ஒரு டைனமோவை” அளிக்கின்றன.

ஏகாந்தவாச செயற்பாடுகள்

Retreat, Igatpuriஏகாந்தவாச செயற்பாடுகள் தினசரி கூட்டுத் தியானங்கள், ஒய் எஸ் எஸ் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், உத்வேகமூட்டும் வகுப்புகளும் நிகழ்ச்சிகளும், குருதேவர் மீதான காணொலிக் காட்சி ஆகியவற்றையும் வாய்ப்பிருந்தால் அருகேயுள்ள ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் வழிபாட்டுப் பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியன. அழகான ஏகாந்தவாச மையச் சுற்றுச்சூழல்களில் ஓய்வெடுக்கவும் இறைவனின் இருப்பை அனுபவிக்கவும் போதுமான அளவு ஓய்வு நேரமும் கிடைக்கிறது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வின் புத்தகங்களும் ஒலி-காணொலிப் பதிவுகளும் தனிப்பட்ட முறையில் கேட்பதற்காகவும் படிப்பதற்காகவும் கிடைக்கின்றன, மற்றும் ஏகாந்தவாச தியான ஆலயம் தியானம் செய்வதற்காக திறந்திருக்கிறது.

வழிநடத்தப்படும் வார இறுதி ஏகாந்தவாச நிகழ்ச்சிகள் ஒய் எஸ் எஸ் போதனைகள் மீதும் தியான உத்திகள் மீதும் ஒய் எஸ் எஸ் சன்னியாசப் பரம்பரையின் சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் செறிவான வகுப்பு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. வழிநடத்தப்படும் ஏகாந்தவாச நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் பல வார இறுதி நாட்களில் ஒய் எஸ் எஸ் ஏகாந்தவாச மையங்களிலும் இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற பல்வேறு இடங்களிலும் நடக்க ஏற்பாடு செய்யப்படுகின்றன.

ஏகாந்தவாச அனுபவத்தின் பலன்களை அதிகப்படுத்த, பங்கேற்போர் அங்கே தங்கியிருக்கும் நேரத்தில் மற்ற நட வடிக்கைகளில் ஈடுபடாது, முழுமையான ஏகாந்தவாச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப் படுகிறார்கள்.

இந்த ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் எல்லா பக்தர்களும் கலந்து கொள்ளலாம்: ஆண்கள், பெண்கள், மற்றும் மணமான தம்பதிகள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக தங்கவைக்கப்படுவார்கள்.

குருதேவருடன் தமது இசைவித்தலை ஆழப்படுத்தவும் தமது அகச் சூழலைக் கட்டமைக்கவும் ஏகாந்த வாசத்தின் போது பங்கேற்போர் மௌனத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப் படுகின்றனர்.

இந்த ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பங்கெடுக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு/ மையத்திற்கு/ சாதனாலயத்திற்கு நிகழ்ச்சித் தேதிக்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் கொடுங்கள்; உங்கள் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாடப்பதிவு எண், வயது, வரப்போகும் மற்றும் திரும்பிச் செல்லப்போகும் தேதிகள் ஆகியவற்றையும் கொடுங்கள். அதன்பின் உங்களுடைய பதிவிற்கான ஓர் உறுதிப்படுத்தும் செய் தியை நீங்கள் பெறுவீர்கள். பதிவுத் தொகை இருந்தால் அதை நீங்கள் முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரமத்தை/ மையத்தை/ சாதனாலயத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

குருதேவர் கூறினார்: “எல்லாக் கடமைகளிலும் தலையானது இறைவனை நினைவில் நிறுத்துவது ஆகும். நாள்முழுவதும் நீங்கள் அவனுடைய ஆனந்தத்தால் நிறைந்திருக்க அவன் மீது தியானம் செய்து எப்படி உங்கள் வாழ்க்கையை அவனுடைய சேவைக்கு அளிப்பது என்று எண்ணுவதே காலையில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலையாகும்.“

ஒய் எஸ் எஸ் ஏகாந்தவாச தியான மையங்கள்

யோகதா சத்சங்க ஆனந்த ஷிகார் சாதனாலயம், சிம்லா

யோகதா சத்சங்க ஆனந்த ஷிகார் சாதனாலயம், சிம்லா
பனோதி பஹால் ரோடு
கிராமம்: பன்டி, சிம்லா 171011
ஹிமாசல பிரதேசம்
தொலைபேசி எண்:
(0177) 6521788, 09418638808, 09459051087
E-mail: [email protected]
எவ்வாறு சென்றடைவது

ஒய் எஸ் எஸ் சென்னை ரிட்ரீட்

ஒய் எஸ் எஸ் சென்னை ரிட்ரீட்
கிராமம்: மண்ணூர்,  வளர்புரம் – அஞ்சல்
தாலுகா: ஸ்ரீபெரும்புதூர்
மாவட்டம்: காஞ்சிபுரம் 602105, தமிழ்நாடு
தொலைபேசி எண்கள்: 0944439909, 09600048364, 08939281905

மின்னஞ்சல்: [email protected]
எவ்வாறு சென்றடைவது

யோகதா சத்சங்க சரோவர் சாதனாலயம் – பூனா

யோகதா சத்சங்க சரோவர் சாதனாலயம் – பூனா
பன்சேத் அணை-க்கு 12வது மைல்கல்
பன்சேத் ரோடு, கானாபூர் கிராமம்
நந்தி மஹால் எதிரில், சாந்திவனம் ரிசார்ட்டிற்கு ஒரு நிறுத்தம் முன்பு
கானாபூர் கிராமத்திற்கு 2.5 கி.மீ முன்னதாக
மாவட்டம்: பூனா, மஹாராஷ்டிரா
தொலைபேசி எண்கள்: 09850883124, 09850885228
மின்னஞ்சல்:[email protected]
எவ்வாறு சென்றடைவது

பரமஹம்ஸ யோகானந்த சாதனாலயம், இகத்புரி

பரமஹம்ஸ யோகானந்த சாதனாலயம், இகத்புரி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
யோகானந்தபுரம்
இகத்புரி 422403
மாவட்டம்: நாசிக், மஹாராஷ்டிரா
தொலைபேசி எண்கள்: 09226618554, 09823459145
மின்னஞ்சல்: [email protected]
எவ்வாறு சென்றடைவது

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – திஹிகா

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – திஹிகா
தாமோதர் ரயில் கேட்டிற்கு அருகே
தாமோதர்
தபால் அலுவலகம்: சூரஜ்நகர்
மாவட்டம்: பர்துவான் 713361
மேற்கு வங்காளம்
தொலைபேசி எண்கள்: 09163146565, 09163146566
மின்னஞ்சல்: [email protected]
எவ்வாறு சென்றடைவது

ஆசிரமம்-பூரி

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – பூரி
ஒடிசா பேக்கரிக்கு அருகே
வாட்டர் வொர்க்ஸ் ரோடு
பூரி 752002
தொலைபேசி எண்கள்: (06752) 233272, 09778373452
மின்னஞ்சல்: [email protected]
எவ்வாறு சென்றடைவது

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – பூரி

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – செராம்பூர்
57, நேதாஜி சுபா‌ஸ் அவெனியூ
செராம்பூர் 712201
மாவட்டம்: ஹூக்ளி
மேற்கு வங்காளம்
தொலைபேசி எண்கள்: (033) 26626615, 08420061454
மின்னஞ்சல்: [email protected]
எவ்வாறு சென்றடைவது

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – தெலாரி

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – தெலாரி
கிராமம்: தெலாரி
பாஹிர்குஞ்சா 743318
மாவட்டம்: தெற்கு 24 பாரகன்ஸ்
மேற்கு வங்காளம்
தொலைபேசி எண்கள்: 09831849431
மின்னஞ்சல்:[email protected]
எவ்வாறு சென்றடைவது

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – கோயம்புத்தூர்

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – கோயம்புத்தூர்
பெர்க்ஸ் பள்ளி வளாகம்
திருச்சி ரோடு, பிருந்தாவனம் காலனி
சிங்கநல்லூர், கோயம்புத்தூர் 641015
தமிழ்நாடு
தொலைபேசி எண்கள்: 09344098058, 09894664044
மின்னஞ்சல்: [email protected]
எவ்வாறு சென்றடைவது

இந்த ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் எல்லா பக்தர்களும் கலந்து கொள்ளலாம்: ஆண்கள், பெண்கள், மற்றும் மணமான தம்பதிகள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக தங்கவைக்கப் படுவார்கள். 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான மணமான தம்பதிகளுக்கு சில விதிவிலக்குகள் கொடுக்கப்படலாம்.

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.