ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவிடம் இருந்து 2015 கிறிஸ்துமஸ் செய்தி

"உங்கள் அனைவரையும், உங்களுக்குள் இருக்கும் எல்லையற்ற கிறிஸ்துவையும் வணங்குகிறேன். கிறிஸ்துவே, உங்களுடைய ஆனந்தத்தின் பரவசத்தை, அது ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நிமிடமும், எங்களுடன் இருக்கும்படியாக, எங்களுக்கு வழங்குங்கள்.”

கிறிஸ்துமஸ் 2015

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு கிறிஸ்துமஸ் அருளாசிகள் உரித்தாகுக. கிறிஸ்து-அன்பு மற்றும் மகிழ்ச்சியின் அதிர்வுகளால் ஊடுருவப்பட்ட இந்த புனிதப் பருவத்தின் போது, அன்பிற்குரிய ஆண்டவர் இயேசுவாக அவதரித்த கிறிஸ்து-உணர்வுநிலையின் நிலைமாற்றும் தரிசனத்தை உங்கள் இதய பக்தியின் ஏற்புத்தன்மையின் வாயிலாக நீங்கள் உணர நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். மாயையின் பிளவுபடுத்தும் சக்திகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஓர் உலகில், இறைவனின் ஒளியை முழுமையாகப் பிரதிபலிக்கும் அனைவரின் வாழ்க்கைகளிலிருந்தும் வெளிப்படும் பணிவு, அன்பு ஆகியவற்றின் ஒன்றிணைக்கும் சக்தியான அமைதி எனும் மருந்திற்கு நம் ஆத்மாக்கள் எவ்வளவு ஆழமாக மறுமொழியளிக்கின்றன. அந்தப் பிரபஞ்ச உணர்வுநிலையின் மெய்ம்மை, உங்களாலும் உள்ளே இருக்கும் தெய்வீக உருவத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு அளித்தவாறு, உங்களை அரவணைக்கட்டும்.

இயேசுவின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் போது, அவர் வெளிப்படுத்திய என்றும்-வாழும் கிறிஸ்து-உணர்வுநிலையை, அந்தத் தெய்வீக தரிசனத்தை நம்மில் எழுப்பும் குணங்களை அவருடைய தெய்வீக வாழ்க்கையின் வேதத்திலிருந்து கிரகிப்பதற்கான நமது புதுப்பிக்கப்பட்ட உறுதியின் மூலம் அவரைக் கௌரவிப்போம். அனைத்து மனித வரம்புகளின் மீதான அவரது வெற்றியிலிருந்து மன உறுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் ஆன்ம சுதந்திரத்தை புலன்கள், தன்முனைப்பு மற்றும் வெளிப்புற சூழ்நிலைகளின் கட்டளைகளிலிருந்து மீட்டெடுக்க நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியுடனும், நீங்கள் கிறிஸ்து-உணர்வுநிலையின் முக்தியளிக்கும் சக்தியை, அன்பு மற்றும் உண்மையின் விதிமுறைகளால் உங்கள் வாழ்க்கையை ஆளும் வலிமையைப் பெற்றவாறு, உங்களுக்குள் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது மனம் மற்றும் இதயத்தின் எல்லைகளைப் பெரிதாக்க தொடர்ந்து நம்மைத் தூண்டும் ஒரு சக்தி. நம்மைவிட மிகவும் வித்தியாசமான மனிதர்களை நாம் சந்திக்கும்போது, மனித இயல்பு வேறுபாடுகளில் கவனம் செலுத்துகிறது, மற்றும் பெரும்பாலும் மதிப்பீடு செய்கிறது. ஆனால் இயேசு, கிருஷ்ணர் மற்றும் அனைத்து மகான்களாலும் வெளிப்படுத்தப்பட்ட எல்லாம்-உள்ளடக்கும் அன்பு, தெய்வீகக் குழந்தையாக அனைவரையும் பார்க்கும் வழி எந்த அளவிற்கு ஒன்றிணைக்கிறது என்பதைக் காட்டுகிறது. விரிவடையும் நமது புரிதலுடனும் பச்சாதாபத்துடனும், நாம் மற்றவர்களை நம்முடைய பெரும்-சுயத்தின் ஒரு பகுதியாக பார்க்கத் தொடங்குகிறோம்—இயேசு செய்ததைப் போல மன்னிக்கும் குணப்படுத்தும் சக்திக்கு நம் வாழ்வில் இடமளிக்கவும், சேவை செய்வதன் உண்மையான மகிழ்ச்சியை உணரவும் தொடங்குகிறோம். அவருடைய பிறப்பைக் கொண்டாடும் இந்தப் பருவம் அவர் அத்துணை முழுநிறைவாக வெளிப்படுத்திய விழுமிய குணங்களைப் பற்றிய உயர்ந்த விழிப்புணர்வை, நமக்குள் ஓர் அதிக இரக்கத்தையும், தாராள மனப்பான்மையையும், மற்றவர்களுக்கு உதவும் உந்துதலையும் தூண்டியவாறு, கொண்டுவருகிறது. அந்த உணர்வில், ஓர் எளிய இரக்கம் கூட ஆன்மாக்களுக்கு இடையே பாலங்களை உருவாக்குகிறது மற்றும் அதனால் இறைவனின் அன்பின் முத்திரையை இன்னொருவரின் இதயத்தில் பதிக்க முடியும்.

கிறிஸ்துவைப் போன்ற செயல்களால் நம் வாழ்க்கையை உயர்த்தவும் மாற்றவும் முடியும், ஆனால் எல்லையற்ற கிறிஸ்து-உணர்வுநிலையின் மகிமையை (இந்தியாவின் புனித மரபுகளில் அறியப்படும் கூடஸ்த சைதன்யம் அல்லது கிருஷ்ணா-உணர்வுநிலை) நாம் மிகவும் நேரடியாக அனுபவிப்பது அக அமைதி எனும் புனித கோவிலில் தான். நம் வாழ்வு மற்றும் உயிர் எனும் சிற்றலைக்குப் பின்னால் இருக்கும் இறைவனின் இருப்பு எனும் இந்தப் பரந்த பெருங்கடலுடனான ஒரு கணநேரத் தொடர்பே கூட, எதில் அவன் ஒவ்வோர் ஆன்மாவிற்கும் புகலிடம் அளிக்கிறானோ, அந்த விவரிக்க முடியாத மென்மை பற்றிய நிலைமாற்றும் விழிப்புணர்வைக் கொண்டுவருகிறது. நமது குருதேவர் கூறியுள்ளார்: “இறைவனிடம் தனது பக்தருக்குக் கொடுக்க இதயத்தின் அனைத்து எல்லைகளையும் உடைக்கும் படியான அத்துணை அன்பு உள்ளது. இறைவனின் அந்த அன்பு ஒருவரின் இருப்பை நிரப்பும்போது, அது அனைவரையும் அன்பு, சேவை மற்றும் இரக்கம் எனும் பிரபஞ்ச உணர்வுநிலையில் அரவணைக்கிறது.” அந்தத் தெய்வீக அன்பு இயேசுவில் பிறந்தது போல் உங்களில் பிறக்கட்டும், மற்றும் உங்கள் தியானத்தால்-இசைவிக்கப்பட்ட உணர்வுநிலையின் வாயிலாக உங்களில் வாழட்டும்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஒளியும் ஆனந்தமும் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

இதைப் பகிர