சங்கல்பம் பற்றிய அறிவுறுத்தல்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன்ஸ் எனும் நூலிலிருந்து சங்கல்ப சக்தியைப் பயன்படுத்துவது எப்படி என்று புரிந்து கொள்ளுதல்

மனிதனின் வார்த்தை மனிதனில் பரம்பொருளாகும்….நேர்மை, திடநம்பிக்கை, விசுவாசம், உள்ளுணர்வு ஆகியவற்றால் தோய்விக்கப்பட்ட வார்த்தைகள், அதிக அளவு வெடிக்கும் தன்மையுடைய அதிர்வுக் குண்டுகள் போன்றவை ஆகும்; அவை, இயங்கவிடப்பட்டால், இடர்ப்பாடுகள் எனும் பாறைகளை நொறுக்கி விரும்பிய மாற்றத்தை உருவாக்குகின்றன.

மனஅழுத்தம் அல்லது மகிழ்ச்சியின், எரிச்சல் அல்லது அமைதியின் ஒவ்வோர் எண்ணமும் மூளை-உயிரணுக்களில் நுட்பமான வரிப்பள்ளங்களை ஏற்படுத்தி, சுகவீனம் அல்லது உடல்நலத்திற்கான இயல்புகளை வலுப்படுத்துகிறது.

நோய் அல்லது உடல்நலத்தைப் பற்றிய அடிமன எண்ண-பழக்கம் ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிடிவாதமான மன அல்லது உடல் நோய்கள் எப்போதும் அடிஉணர்வுநிலை யில் ஆழ்ந்து வேரூன்றியுள்ளன. சுகவீனம் அதனுடைய மறைந்திருக்கும் வேர்களைப் பிடுங்கி எறிவதன் மூலம் குணமாக்கப்படலாம். அதனால் தான் உணர்வுப்பூர்வ மனத்தின் எல்லாச் சங்கல்பங்களும் அடி-உணர்வுநிலையை ஊடுருவும் அளவிற்கு ஆழ்ந்து பதியும்படியாக இருக்க வேண்டும்; அதையடுத்து இது தானாகவே உணர்வுப்பூர்வ மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வலிமையான உணர்வுப்பூர்வ சங்கல்பங்கள் இவ்வாறு மனம் மற்றும் உடலின் மீது அடி-உணர்வுநிலை எனும் ஊடகத்தின் வாயிலாக செயலாற்றுகின்றன. இன்னும் வலிமையான சங்கல்பங்கள் அடி-உணர்வுநிலையை மட்டுமன்றி, அற்புதச் சக்திகளின் மந்திரக் களஞ்சியமான உயர்-உணர்வுநிலையையும் சென்றடைகின்றன.

உண்மையின் உறுதிமொழிகள் விருப்பத்துடன், தூண்டுதலின்றி, அறிவார்ந்து மற்றும் பக்திப்பூர்வமாக பயிற்சி செய்யப்பட வேண்டும். ஒருவருடைய கவனம் பின்தங்கிவிட அனுமதிக்கப்படக் கூடாது. அடங்காதக் குழந்தையைப் போல அலைபாயும் கவனம், மீண்டும் மீண்டும் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் மற்றும் அது அதற்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்க திரும்பத்திரும்பவும் பொறுமையுடனும் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.

பொறுமையும் கவனத்துடனான, அறிவார்ந்த முறையில் திரும்பத் திரும்பக் கூறுதலும் அற்புதமான-செயல்வீரர்கள் ஆவர். நீடித்த மனரீதியான அல்லது உடல்ரீதியான பிணிகளைக் குணப்படுத்துவதற்கான சங்கல்பங்கள் ஆழ்ந்தும் தொடர்ச்சியாகவும் (மாறாத அல்லது முரண்பாடான நிலைகள் ஏதேனும் இருந்தால் முற்றிலும் புறக்கணித்தவாறு), அவை ஒருவருடைய ஆழ்ந்த உள்ளுணர்வுப்பூர்வ திடநம்பிக்கைகளின் ஒரு பகுதியாக ஆகும் வரை, அடிக்கடி திரும்பச் சொல்லப்பட வேண்டும்.

தகிக்கும் பேரொளியே! என் இதயத்தை விழித்தெழச் செய்வாய், என் ஆன்மாவை விழித்தெழச் செய்வாய், என் இருளைக் கொளுத்துவாய், மௌனத் திரையைக் கிழித்தெறிவாய், என் ஆலயத்தை உன் மகிமையால் நிரப்புவாய்.

உங்களுடைய சங்கல்பத்தைத் தேர்ந்தெடுத்து, முதலில் உரத்து, பின் மென்மையாக மற்றும் இன்னும் மெதுவாக, உங்கள் குரல் முணுமுணுப்பாக ஆகும் வரை சங்கல்பம் முழுவதையும் திரும்பத் திரும்பக் கூறுங்கள். அதன்பின் படிப்படியாக அதை மனத்தில் மட்டுமே, நாக்கையோ அல்லது உதடுகளையோ அசைக்காமல், நீங்கள் ஆழ்ந்த இடைவிடாத ஒருமுகப்பாட்டை, உணர்வற்ற நிலையை அல்ல, மாறாக, இடையூறற்ற சிந்தனையின் ஓர் ஆழ்ந்த தொடர்ச்சியை அடைந்திருப்பதாக உணரும் வரை வலியுறுத்திக் கூறுங்கள்.

உங்கள் மன சங்கல்பத்தைத் தொடர்ந்து கூறியவாறு, இன்னும் ஆழ்ந்து சென்றால், நீங்கள் அதிகரிக்கும் ஆனந்தம் மற்றும் அமைதியின் உணர்வை அறிவீர்கள். ஆழ்ந்த ஒருமுகப்பாட்டு நிலையின் போது, உங்கள் சங்கல்பம் அடிமன ஓட்டத்துடன் இணையும்; அது பழக்க விதிமுறையின் வாயிலாக உங்களுடைய உணர்வுப்பூர்வ மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்த சக்தியால் வலுவூட்டப்பட்டு பின்னால் திரும்பி வரும்.

நீங்கள் என்றும்-பெருகும் அமைதியை அனுபவிக்கும் நேரத்தில், உங்களுடைய சங்கல்பம் மிக ஆழ்ந்து உயர்-உணர்வுத் தளத்திற்குள் செல்கிறது; அது உங்களுடைய உணர்வுப்பூர்வ மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றவும் கூட, பின்னால் அளவற்ற சக்தியால் நிரப்பப்பட்டு திரும்பி வருகிறது. ஐயம் கொள்ளாதீர்கள், நீங்கள் இந்த அறிவியல்பூர்வ விசுவாசத்தின் அற்புதத்திற்குச் சான்று பகர்வீர்கள்.

சங்கல்பங்களைப் பயிற்சி செய்வது எப்படி

மேலும் படிக்க

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன்ஸ்

இதைப் பகிர