குருபூர்ணிமா 2012

அன்பிற்குரியவர்களே!

குரு பூர்ணிமா எனும் வழிபாட்டுமிக்க இந்நன்னாளில், தன் குருவிற்கு பணிவான பக்தியைச் சமர்ப்பிக்கும் இந்திய மரபைப் பின்பற்றும் அனைத்து பக்தர்களுடன் நாங்களும் கலந்து கொள்கிறோம். நமது சொந்த, பேரன்புக்குரிய ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரை நாம் ஆழ்ந்து நினைக்கும் போது அவர் தமது ஒவ்வொரு சீடருக்கும் தன் எல்லையற்ற அன்பு மற்றும் ஞானப் புதையலிலிருந்து இடைவிடாத அருளாசியைப் பொழிவதால், நாம் அவரை உயர்வாகப் போற்றுகிறோம். அவர் கூறினார், “சர்வவல்லமை வாய்ந்த இறைவனின் போதையூட்டும் தெய்வீக அன்பை ஒருவரால் வெளிப்படுத்த முடியும் போது, அவ்வன்பு மற்றவர்களது வாழ்க்கையில் இறைவனது அன்பெனும் உயிர்த்துடிப்புள்ள மையத்தை விழித்தெழச் செய்கிறது.”அவரது வார்த்தைகள் மற்றும் அருளாசிகளுள் நம்மை இறைவனது உண்மையான முன்னிலையினுள் உயர்த்தவல்ல ஓர் உணரத்தக்க அதிர்வுறும் சக்தி உள்ளது.” முக்தி அடைந்துள்ள குருமார்கள், எல்லையற்றவனின் சர்வ வியாபகத்தில் ஸ்தூல இறப்பிற்குப் பின்னும் அருளாசிகளை வழங்குவதில் தடையற்று உள்ளனர்.” என அவர் எங்களிடம் கூறினார்.

ஒரு உண்மையான குருவினுள் விசுவாசமிக்க சீடர் இறைவனது அன்பை, அவனே மனித வடிவத்தில் வெளிப்பட்டு இருப்பதன் மூலம் காண்கிறார் என்பதை குருதேவர் எங்களுக்குப் போதித்தார். குருதேவர் எழுதியுள்ள இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் இருத்துங்கள்:

நண்பர்களின் தூய்மையான அன்பில், கட்புலனாகாத இறைவன் ஓரளவு புலனாகும் கணநேரக்காட்சியை ஒருவர் காண்கிறார், ஆனால் குருவினுள் அவன் மெய்யாகவே வெளிப்பட்டுள்ளான். குருவின் மூலம் மௌனம் சாதிக்கும் இறைவன் வெளிப்படையாகப் பேசுகிறான். இதயமானது அறிவுக்கெட்டாத இறைவனுக்கான ஏக்கத்தால் கொழுந்துவிட்டு எரிந்து அதன்மூலம் இறைவன் உண்மையிலேயே குருவாக வரும் பொழுது அடையும் மனநிறைவை விட உயர்ந்த ஒன்றை உங்களால் அடைய முடியுமா? இறைவன் பக்தரின் முக்திக்கான தன் விருப்பத்தை, தன் சீடர் அறியாமை மிக்க வழிகளை கைவிட்டு இறைவனை நோக்கிய ஒளிமிக்கப்பாதையை பின்பற்றுவதற்கு உதவி புரிய வேண்டும் என்ற குருவின் விருப்பத்துடன் ஒன்று சேர்ந்து விடுகிறான். இறைவனால் அனுப்பப்பட்ட குருவைப் பின்பற்றுகிறவர் இறைவனின் சாசுவத ஒளியில் நடை போடுகிறார். மகா மௌனம், குருவின் குரல் மூலம் பேசக் கூடியதாகிறது. கருத்திற்கெட்டாதது குருவின் இறை அனுபூதியில் கருத்திற் கெட்டுவதாகிறது….

ஏற்கும் திறன் உள்ளவர்கள், குரு உரையாற்றும்போது, தங்கள் இதயங்கள் மற்றும் மனங்களினுள் இறைஞானம் பொழிந்து கொண்டிருக்கும் ஓர் உயர் உணர்வு நிலைக்குள் தாங்கள் கொண்டு செல்லப்படுவதை உணர்கின்றனர். இந்த ஒத்திசைவு, ஆழ்ந்த வழிபாடு மிக்க தியானம் எனும் அகக்கோவிலில் சீடர் குருவின் கருணையை வரவழைக்கும் போதெல்லாம், அவரது உணர்வு நிலையில் மிக உயர்ந்த வழியில் ஊடுருவிப் பரவுகிறது.

நீங்கள், குருதேவரிடம் ஞான போதனைகள் எனும் அவரது “குரலை” விசுவாசத்துடன் கேட்டு, கருத்தில் கொண்டு மேலும் அவரால் அளிக்கப்பட்ட யோக உத்திகளை சிரத்தையுடன் பயிற்சி செய்தால், உங்கள் தினசரி வாழ்க்கையில் ஊடுருவிப்பரவும் குருதேவரின் மாற்றமுறச் செய்யும் இருப்பை, இந்நன்னாளில் நீங்கள் புதிதாக அறிந்துணர நான் அன்புடன் பிரார்த்திக்கிறேன். குருதேவரின் அருளாசிகள் எனும் பெறும்வளத்திற்கு உங்கள் இதயம் என்றும் முழுவதுமாக ஏற்கும் திறன் வாய்ந்ததாக இருக்கட்டும்.
ஜெய் குரு!

இறைவன் மற்றும் குருதேவரின் தெய்வீக அன்பில்,


ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2012 ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பாதுபாக்கப்பட்டவை

இதைப் பகிர