புவியில் அமைதிக்கான பிரார்த்தனை

பல ஆண்டுகளுக்கு முன்பு, பரமஹம்ஸ யோகானந்தர் பின்வரும் “புவியில் அமைதிக்கான பிரார்த்தனை”யை, உலகெங்கிலும் அமைதியை பரப்ப உதவுவதற்கு அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு வழிகாட்டப்பட்ட தியானத்தை, வழங்கினார். 60 ஆண்டுகளுக்கு முன்பு பரமஹம்ஸர் வழங்கிய இறைவனது அருளாசியின் இந்தச் சக்திவாய்ந்த வேண்டுகோளை அறிமுகப்படுத்திய ஸ்ரீ தயா மாதா இவ்வாறு எழுதினார்:” ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் உலகளாவிய பிரார்த்தனைக் குழுவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அனைத்து மக்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் இடையே உலக அமைதிக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் தினமும் பிரார்த்தனை செய்வதன் மூலம் பரமஹம்ஸர் சரியான நேரத்தில் அருளிய வார்த்தைகளின் உணர்வில் இணையவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” ​ ஶ்ரீ தயா மாதா

“தெய்வத் தந்தையே, தாயே, நண்பனே, அன்புக்குரிய இறைவா! என் பக்தி என்னும் சரணாலயத்தில் உனது அன்பு என்றென்றும் ஒளிரட்டும், உனது அன்பை எல்லா இதயங்களிலும் நான் விழித்தெழச் செய்யும் வல்லமை பெற அருள்வாயாக!”

உங்கள் கண்களை மூடி, இறை உணர்வுநிலை மையமாகிய புருவ மத்தியில் ஆழமாக கவனம் செலுத்துங்கள். இறைவனின் எல்லையற்ற அன்பை உங்கள் இதயத்தில் உணருங்கள். அந்த அன்பை உங்கள் இதயம் உலகம் முழுவதற்கும் வெளிப்படுத்தட்டும். போர் மேகங்கள் மறைய ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். மாயையின் ஆலோசனைகளாகிய கருத்து முரண்பாடு மற்றும் பகைமையினால் எப்பொழுதும் வான்வெளியில் நுட்பமாக அதிர்வுறும் நல்லுணர்வு மற்றும் அன்பின் தெய்வீக சக்திகள் மனிதர்களின் இதயங்களிலும் மனதிலும் அடக்கியாட் கொள்ளப்படாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். ஏனெனில் தீய சக்திகள் ஆக்ரோஷமானவை, அதே சமயம் நல்ல சக்திகள் அடக்கமானவை மற்றும் பகட்டற்றவை.

“தெய்வத் தந்தையே, மாயையின் அறியாமை மற்றும் வெறுப்பின் ஆவேசத்திலிருந்து விடுபட, இருண்ட யுத்த மேகங்களின் கீழ் வாழும் எங்கள் சகோதர சகோதரிகளை ஆசீர்வதியுங்கள்; மேலும் அன்பையும் அமைதியையும் ஒன்றிணைக்கும் உமது பகட்டற்ற சக்தி தீமையின் ஆக்கிரமிப்பு சக்திகளை வெல்லட்டும். சகோதரத்துவம் மற்றும் புரிதல் எனும் உங்கள் ஒளியைப் பெறுவதற்காக, மற்றும் அதன் மூலம் ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்வதையும், உலகெங்கிலும் மன அழுத்தம், பேரழிவு, சிதைவு ஆகியவற்றின் கூட்டுக் கர்மவினையைக் கொண்டுவரும் தீய அதிர்வுகளை உருவாக்குவதை நிறுத்த வழிகாட்டப்படுவதற்காக, அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அன்பை அனுப்புகிறோம்.”

சர்வாதிகாரிகள் மற்றும் பிரதமர்கள் மற்றும் அனைத்து நாடுகளின் தலைவர்கள் அழிவுக்கு பதிலாக பூமியில் அமைதியையும் சர்வதேசச் செழிப்பையும் கொண்டு வரும் படியாக உங்கள் அன்பு ஒரு கண்ணுக்கு தெரியாத எக்ஸ்-ரே போல முன்னோக்கிச் சென்று விண்வெளியின் ஊடாகப் பயணித்தவாறு, அவர்களுடைய இதயங்களில் நுழைவதாக உணருங்கள். உங்கள் அன்பின் சக்திவாய்ந்த கதிர்வீச்சில் உலகின் அனைத்து மக்களையும் சேரத்துக் கொள்ளுங்கள். நமது அன்பின் ஒருங்கிணைக்கப்பட்ட குணமாக்கும் கதிர்கள் நமது தெய்வத்தந்தையின் எல்லையற்ற அன்பினால் செறிவூட்டப்பட்டு, உலகின் அனைத்து தலைவர்கள் மற்றும் குடிமக்களின் இதயங்களில் ஊடுருவியவாறு, பூமி முழுவதிலும் பொழியட்டும்; இதனால் அவர்கள் இறைவன் என்னும் ஒரே தந்தைமையின் கீழ் புவியில் அமைதியையும், அனைவருக்கும் நல்லெண்ணத்தையும் கொண்டு வந்தவாறு, பரம்பொருளின் உலகளாவிய நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தால் நிரப்பப்படட்டும்.

தெய்வத் தந்தையே, உனது குழந்தைகளாக தங்களின் சாசுவதச் சகோதரத்துவத்தை அனைவரும் உணரும்படியாக பூமியிலுள்ள தேசங்களை, நம்முடைய பெரிய குடும்பத்தை, ஆசீர்வதியுங்கள். நீதான் எங்களின் ஒரே ஆன்மீகத் தந்தை, பிரபஞ்சத்திற்குப் பிரியமானவன் மற்றும் எங்கள் இதயங்களுக்குப் பிரியமானவன். சர்வாதிகாரிகள் மற்றும் படைத்தலைவர்களின் மூளைகள் உன் ஞானத்தால் நிரப்பப்பட்டு, அதன் மூலம் மனிதகுலத்தின் பொதுவான அழிவை நோக்கி வேலை செய்வதைத் தவிர்க்கும் படியாக, இன்று நாம் வெளிப்படுத்தும் அன்பின் வலுவான எண்ணங்கள் அவற்றை ஆக்கிரமிக்கட்டும். அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாய். பூமியிலுள்ள சகல குடிமக்களும் எல்லா ஆன்மாக்களிடையேயும் ஒரு கூட்டுறவு ஒற்றுமையை நிலைநாட்டவும், உன்னுடைய ராஜ்ஜியத்திற்கு எங்களை வழிநடத்தும் உனது சக்தியுடனும் அன்பின் ஒளியுடனும் ஒரு ஐக்கிய உலகில் வாழவும் ஆசீர்வதிப்பாயாக.”

ஓம். சாந்தி. ஆமென்

இந்த கூடுதல் ஆதாரங்களையும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

இதைப் பகிர