பருவகால அகத்தூண்டுதல்

வருடம் முழுதூடாக விடுமுறை நாட்களுக்கான, இதயத்திற்கு மகிழ்ச்சியையும் இன்பதையும் நல்கும் இறை-எழுச்சியூட்டப்பட்ட செய்திகளை அனுபவித்து மகிழுங்கள்.

கிறிஸ்துமஸ் காலத்திற்கான வழிகாட்டப்பட்ட தியானம்.

அருளியவர் ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப்பின் அன்பிற்குரிய நாலாவது தலைவி ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவால் தலைமையேற்று டிசம்பர் 23, 2002ல் எஸ்.ஆர்.எஃப் சர்வதேச தலைமையகத்தில் நடத்தப்பட்ட முழு நாள் கிறிஸ்துமஸ் தியான வழிபாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்.

1936-ல் ஒரு முழு – நாள் கிறிஸ்துமஸ் தியான வழிபாட்டின்போது பரமஹம்ஸ யோகானந்தரால் உரைக்கப்பட்ட வார்த்தைகளை தனது தொடக்க கருத்தாக எடுத்துக் கொண்டு அவர், தன் குருதேவருடன் இசைவிக்கப்பட்ட பக்தி மற்றும் ஞானத்தின் ஆழங்களிலிருந்து தியானத்தை வழிநடத்துகிறார். அவர் நம்மை, விஞ்ஞானப்பூர்வமான தியான உத்திகள் மற்றும் முழுமையான சுய – சரணாகதி ஆகியவற்றின் பயிற்சி மூலம் எல்லையற்ற கிறிஸ்து உணர்வுநிலைக்கான நமது ஏற்புத் திறனை அதிகரிக்கும் படி ஊக்குவிக்கிறார்.

இந்த ஞானம் மற்றும் அகத்தூண்டுதலை இன்னும் ஆழமாக மனதினுள் எடுத்துச் செல்வதற்கு உதவி புரியும் வண்ணம், வழிபாடு முழுதூடாக குறுகியகால மௌன இடைவெளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன

இதைப் பகிர