சான்றுகள்

பிரார்த்தனை சபைக்கு வந்த கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை

"உங்கள் அன்பான பிரார்த்தனைகள் அற்புதங்களை நிகழ்த்த உதவியுள்ளன....நான் விரைவாகக் குணமாகி வருகிறேன், என் நம்பிக்கை அளவிட முடியாதபடி ஆழப்படுத்த ப்பட்டுள்ளது, ஏனெனில் நான் இறைவனின் அன்பான, குணப்படுத்தும் இருப்பு என்னைச் சூழ்ந்துள்ளதை உணர்ந்தேன்.”

— டி.பி., டோபாங்கா, கலிஃபோர்னியா

"நான் எவ்வளவு ஆழமாக நெகிழ்ந்துள்ளேன், மற்றும் பிரார்த்தனை சபைக்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யாருக்காகப் பிரார்த்தனை செய்கிறீர்களோ, அவரை நான் அறிந்திருந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அந்த மனிதரின் வாழ்க்கையில் ஒரு நன்மைபயக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நான் கவனித்தேன். முதலில் இதைப் பார்த்து நான் அப்படியே வியப்படைந்து விட்டேன்; இப்போது இறைவனிலும் பிரார்த்தனையிலும் என் நம்பிக்கை மிகவும் ஆழமாகிவிட்டது. அவனை ஆழமாகவும் உண்மையாகவும் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் இறைவன் உதவுகிறான் என்பதை நான் அறிவேன்."

— ஆர்.எச்., பிட்ஸ்பர்க், பென்ஸில்வேனியா

"எங்கள் உள்ளூர் எஸ்ஆர் எஃப் பக்தர்களில் ஒருவரின் தந்தை சமீபத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார், அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்களில் நானும் ஒருவன். நாங்கள் குணப்படுத்தும் உத்தியைச் செய்த பிறகுதான் அவரது உடல்நலம் அதிசயமாக முன்னேறியது. இந்த உத்தியின் சக்திவாய்ந்த ஆற்றல் எங்களது வழக்கமான முறைகளையும் தாண்டி நல்ல விளைவுகளை உருவாக்கியவாறு எங்கள் ஊடாகச் செயல்படுகிறது என்று நான் கவனித்ததிலிருந்து நான் ஆழமாக ஈர்க்கப்பட்டேன்."

— டாக்டர் ஜி.ஆர்., சாண்டா ஃபே, அர்ஜென்டினா

"பல ஆண்டுகளாக நான் மற்றவர்களுக்கான பிரார்த்தனையின் செயல்திறனைச் சந்தேகித்தேன் - அது உண்மையில் செயல்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை. ஆனால் நிச்சயமாக எனக்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனை சபையின் மனமார்ந்த பிரார்த்தனையின் விளைவாக இப்போது நான் உணரும் ஆன்மாவின் எழுச்சி, பிரார்த்தனை செயல்படுகிறது என்ற உயிர்த்துடிப்புள்ள சான்றை எனக்கு அளிக்கிறது. கடக்க முடியாததாகத் தோன்றிய தடைகள் மெதுவாக விலகிக் கொண்டிருக்கின்றன."

— பி.ஆர்., ஆம்ஹெர்ஸ்ட், மாசசூசெட்ஸ்

"ஒரு வருடத்திற்கு முன்பு இரத்தப் புற்றுநோயாலும் கல்லீரல் அழற்சியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்காக உங்கள் உதவியை நான் வேண்டினேன். இப்போது அவள் நன்றாக இருக்கிறாள். அவளது உடலில் புற்றுநோய் உயிரணுக்களின் அறிகுறிகள் எதுவும் இல்லை. இந்த அபூர்வமான குணமாக்கும் முறை, இந்தக் குழப்பமான உலகில் மனிதன் தனியாக இல்லை என்பதன் ஒரு விலைமதிப்பற்ற மெய்ப்பிக்கும் விளக்கம் ஆகும்."

— ஈ.என்., நபோலி, இத்தாலி

இதைப் பகிர

Collections

More

Author

More

Language

More