
பரமஹம்ஸ யோகானந்தரின் ஞானக் களஞ்சியத்திலிருந்து
உண்மையான பக்தர்கள் கூட சில நேரங்களில் இறைவன் அவர்களது பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று நினைக்கிறார்கள். அவன் மௌனமாக தனது விதிமுறைகள் மூலம் பதில் அளிக்கிறான்; ஆனால் பக்தரைப் பற்றி முற்றிலும் உறுதியாகத் தெரியும்வரை அவன் வெளிப்படையாக பதில் அளிக்க மாட்டான். மேலும் அவன் இறைவனை தேர்ந்தெடுக்கவோ அல்லது மறுத்துவிடவோ பக்தரின் விருப்பத்தேர்வை தாக்கமுறச் செய்யக்கூடா தென்பதற்காக பக்தரிடம் பேசமாட்டான்.
சர்வ வியாபக இறைவன் தனது அனைத்து உண்மையான பக்தர்களை, அவர்கள் எந்த வடிவில் அவனை நேசித்தாலும், அறிவான்…..(மேலும்) அவர்களது பிரார்த்தனைகளுக்கு பலவழிகளில் பதிலளிக்கிறான். இறைவனுக்கு காட்டப்படும் பக்தி எப்பொழுதும் ஒரு விதமான வெளிப்படையான அல்லது பூடகமான பதிலை வரவழைக்கிறது. உண்மையான பக்தி இறைவனால் புறக்கணிக்கப் படுவதில்லை.
ஆசைகளின் நிறைவேற்றத்தின் மூலம் இறைவன் மறுமொழி அளிக்கிறான்.
தீவிரமான மற்றும் மிகவும் ஒரு ஆழ்ந்த பிரார்த்தனை நிச்சயமாக இறைனது பதிலைப்பெறும். ஏதாவது ஒரு சமயத்தில் ஒவ்வொருவரும் பிரார்த்தனை மூலம் ஒரு ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்கள். முதலிடத்தில் மிகவும் வலிமையாக இருக்கும் போது அது தெய்வத்தந்தையை நெகிழ வைக்கிறது, அதனால் தெய்வத்தந்தை உங்கள் ஆசையை நிறைவேற்றப்பட திருவுள்ளம் கொள்கிறான்.

சிலசமயங்களில் இறைவன் உங்கள் ஆசையை அல்லது தேவையை நிறைவேற்ற வல்லமையுள்ள ஒருவரது மனதில் ஒரு எண்ணத்தை விதைக்கிறான்; அந்த நபர் பிறகு விரும்பிய பலனைக்கொணரும் இறைவனின் கருவியாகச் செயல்படுகிறது.
சில சமயங்களில் அவனது மறுமொழி ‘இல்லை’.
இறைவன் தங்களது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பது இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்; ஏனெனில் இறைவன் சில சமயங்களில் அவர்கள் எதிர்பார்த்ததிலிருந்து அல்லது கேட்பதிலிருந்து மாறுபட்டு வேறுவிதமாக பதிலளிக்கிறான். மனிதர்களின் முழு நிறைவு எனும் இறைவனது விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றும் வரை இறைவன் மனிதர்களின் விருப்பங்களுக்கிணங்க பதிலளிக்க மாட்டான்.

நாம் விரும்பியதை பொறுத்து மிகவும் நல்லது, ஒரு குழந்தை ஒரு தீச்சுடர் தொட ஆசைப்படலாம், ஆனால் தீங்கிலிருந்து அதைக்காப்பாற்ற, தாய் அந்த குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது இல்லை.
அமைதி மற்றும் ஆனந்தத்தின் அனுபவம்தான் இறைவனின் மறுமொழி
நீங்கள் திரும்பத் திரும்ப மிகவும் ஆழ்ந்த ஒருமைப்பாட்டுடன் இறைவனை அழைத்தால்,
அவன் உங்கள் பிரார்த்தனைக்குப் பதில் அளிப்பான். ஒரு அமைதியும், ஆனந்தமும் உங்கள் இதயத்தைத் தாக்கும்; அது நிகழும் போது நீங்கள் இறைவனுடன் தொடர்பிலுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

“இறைவா” என்று அழைத்து, ஒவ்வொரு தடவையும் அவனது திருநாமத்தை உச்சரிக்கும்போது ஒருமுகப்பாட்டையும் பக்தியையும் அதிகரிப்பது, ஆழம் காண முடியாத தெய்வீக அமைதி மற்றும் ஆனந்தத்தின் ஆழங்களை ஒருவர் அடையும்வரை அவனது இருப்பு எனும் பெருங்கடலிற்குள் இன்னும் ஆழ்ந்து ஆழ்ந்து மூழ்கவைப்பதற்கு ஒப்பாகும். தெய்வீக அமைதி மற்றும் ஆனந்தம், ஒருவரது பிரார்த்தனை இறைவனை நெகிழ வைத்துள்ளதற்கான ஒரு நிரூபணம்.

பிற தாக்கங்களால் கட்டுப்படாத நிலைபெற்றிருக்கும் ஒரு ஆனந்தம் இறைவனின் மறுமொழியளிக்கும் இருப்பிற்கான வெளிப்படையான சான்றாகும்.
ஒரு பிரச்சனைக்கான உள்ளுணர்வுபூர்வத் தீர்வாக இறைவனது மறுமொழி வரக்கூடும்.
இரண்டு வழிகளில் நமது தேவைகள் கவனிக்கப்படலாம். ஒன்று உலகியல் வழி. உதாரணமாக நாம் நோய்வாய்ப்படும் போது மருத்துவச் சிகிச்சைக்காக ஒரு மருத்துவரிடம் போகலாம். ஆனால் எந்த மனித உதவியும் துணை புரிய முடியாத ஒரு காலம் வருகிறது. அப்பொழுது நாம் மற்ற வழியான, நமது தேகம், மனம், மற்றும் ஆன்மாவின் படைப்பாளியான ஆன்மீக சக்தியை எதிர்நோக்குகிறோம். உலகியல் சக்தி வரையறைக்கு உட்பட்டது, அது தோல்வியுறும் போது, நாம் எண்ணற்ற தெய்வீக சக்திக்குள் திரும்புகிறோம். இதைப் போன்றுதான் நிதித் தேவைகளுக்கும்; நம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டு அது போதாதென்று வரும்போது நாம் மற்ற அந்த பெரும் சக்தியை நோக்கி திரும்புகிறோம்.
நாம் துன்பங்களால் தாக்குறும்போது, நமக்கு உதவும் என்று நாம் நம்பக்கூடிய எல்லாவிதமான லௌகீக, சரிக்கட்டல்களையும் செய்துகொண்டு, முதலாவதாக சுற்றுப்புறச்சூழலின் மீது எரிச்சல் கொள்கிறோம். ஆனால் “நான் இதுவரை முயற்சி செய்த அனைத்தும் பலன் தரவில்லை; அடுத்து என்ன செய்வது?” என்று எண்ணும் நிலைக்கு வரும்போது, நாம் ஒரு தீர்வுக்காக மூளையைக் கசக்கிக் கொள்ள முனைகிறோம். நாம் போதுமான அளவு ஆழமாக யோசிக்கும்போது நாம் ஒரு தீர்வைக் காண்கிறோம். இது ஒருவிதமான பதிலளிக்கப்பட்ட பிரார்த்தனையாகும்.

லட்சக்கணக்கான மனவாதங்களை விட உங்கள் மனத்தில் அமைதி தோன்றும்வரை ஓரிடத்தில் அமர்ந்து இறைவன்மீது தியானம் செய்வது சாலச்சிறந்தது. பிறகு இறைவனிடம் கூறுங்கள்:” நான் கோடிமுறை வெவ்வேறு முறையில் சிந்தித்தாலும் அப்பிரச்சனையை என்னால் தனியாகத் தீர்க்க முடியாது ஆனால் அதை உன் திருக்கரங்களில் அளித்து உன்னிடம் வழிகாட்டுதலுக்கு வேண்டிக்கொண்டு பிறகு ஒரு சாத்தியமான தீர்வை வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதன் மூலம் என்னால் அதைத் தீர்க்க முடியும்”. இறைவன் நிச்சயமாக முயற்சி செய்பவர்களுக்கு உதவி புரிகிறான். தியானத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபின் உங்கள் மனம் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் நிறைந்திருக்கும் போது உங்கள் பிரச்சனைகளுக்கு வெவ்வேறு தீர்வுகளை உங்களால் காண முடிகிறது; உங்கள் மனம் அமைதியாக இருப்பதால் உங்களால் மிகச் சிறந்த தீர்வை தேர்ந்தெடுக்க முடிகிறது. அந்த தீர்வைப் பின்பற்றுங்கள். நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். இது, தினசரி வாழ்வில் சமூக விஞ்ஞானத்தைப் பயன்படுத்துதல் ஆகும்.
உங்கள் சொந்த இச்சா சக்தியை வெற்றிக்காக மிகுதியாக செறிவூட்டுவதன் வாயிலாக இறைவன் மறுமொழி அளிக்கிறான்.
இச்சாசக்தியை ஆக்கப்பூர்வமான செயல்கள் வாயிலாக வெளிச்செலுத்துங்கள். தோல்வியை ஏற்க மறுத்து நீங்கள் விடாப்பிடியுடன் இருந்தால் நீங்கள் விரும்பிய பொருள் நிச்சயம் உங்களை வந்து சேரும். நீங்கள் தொடர்ந்து அந்த இச்சாசக்தியை உங்கள் சிந்தனை மற்றும் செயல்கள் மூலம் பயன்படுத்தினால், நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அது நடந்தே ஆக வேண்டும். இந்த உலகில் உங்கள் விருப்பத்துடன் ஒத்திசைந்து போக எதுவுமில்லை என்றாலும், உங்களின் இச்சாசக்தி விடாப்பிடியுடன் இருந்தால், நீங்கள் விரும்பிய பலன் எவ்வாறேனும் வெளிப்பட்டே ஆக வேண்டும். அம்மாதிரியான இச்சாசக்தியில் தான் இறைவனின் பதில் அடங்கியுள்ளது. ஏனெனில் இச்சாசக்தி இறைவனிடமிருந்து வருகிறது மற்றும் தொடர்ச்சியான இச்சாசக்தி இறைவனின் சித்தமாகும்.