குணப்படுத்தும் பிரார்த்தனைக்கான ஓர் உலகளாவிய கட்டமைப்பு

யோகானந்thar தனது சீடர்களை ஆசீர்வதிக்கிறார்

பரமஹம்ஸ யோகானந்தர் உலக அமைதிக்காகவும், மற்றவர்களின் உடல், மன மற்றும் ஆன்மீக துன்பங்களைக் குணப்படுத்துவதற்காகவும் தனது பிரார்த்தனைகள் மூலம் மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த சேவையை வழங்கினார். ஒவ்வொரு காலையிலும் அவர் ஆழ்ந்த தியானத்தில், உதவி கோரிய அனைவருக்கும் இறைவனின் அருளாசிகளை வணங்கியழைத்து, ஓர் எளிய ஆனால் மிகவும் பயனுள்ள உத்தியை ஆற்றுவதன் மூலம் அவர்களுக்கு குணப்படுத்தும் சக்தியை செலுத்தினார். காலம் செல்லச் செல்ல, யோகதா சத்சங்க சன்னியாச மரபின் சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகள் அனைவரையும் பிரார்த்தனை மூலம் உலகிற்கு சேவை செய்யும் இந்த முயற்சியில் தன்னுடன் சேர்ந்துகொள்ள பரமஹம்ஸர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு தான் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பிரார்த்தனை சபை பிறந்தது.

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக வாரிசுகளின் தலைமையில், இந்தப் பிரார்த்தனை சபையின் பணி பல ஆண்டுகளாக தடையின்றி தொடர்கிறது. இச்சபை ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் மற்றவர்களுக்காக ஆழ்ந்து தியானித்து, பிரார்த்தனை செய்து வருகிறது, மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரால் பயிற்சி செய்யப்பட்டு போதிக்கப்பட்ட குணமளிக்கும் பிரார்த்தனை உத்தியைச் செயற்படுத்துகிறது. உதவியை நாடிப் பெற்றிருப்போரிடமிருந்து யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-விற்கு எண்ணற்ற கடிதங்கள் வருகின்றன. இவை உடல், மனம் மற்றும் ஆன்மாவை குணப்படுத்துவதற்காக பிரார்த்தனை சபையால் மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இறைவனின் வரம்பற்ற சக்திக்கு சான்றளிக்கின்றன.

பிரார்த்தனை சபையின் குணப்படுத்தும் பணிகள் ஒவ்வொரு தேசத்திலும் உள்ள யோகதா சத்சங்க சொஸைடி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பிரார்த்தனைகளின் மூலம், இரக்கமுள்ள இதயங்களின் ஆன்மீக ஐக்கியத்தை, அதாவது உலகளாவிய பிரார்த்தனைக் குழுவை உருவாக்கும் வண்ணம், பிரார்த்தனை சபை விரிவாக்கப்பட வேண்டும் என்று பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்தினார்.

உலகளாவிய பிரார்த்தனைக் குழு நிறுவப்பட்டதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள பங்கேற்பாளர்கள் செலுத்தும் பிரார்த்தனைகள் நல்லிணக்கம், நல்லெண்ணம் மற்றும் அமைதியால் உலகைச் சூழ்ந்தவாறு, வளர்ந்து வரும் தெய்வீக சக்தியின் அலையை உருவாக்க உதவியுள்ளன.

உங்கள் பிரார்த்தனைகளின் ஆன்ம ஆற்றலால் இந்தக் குணப்படுத்தும் அலைகளை வலுப்படுத்த நீங்கள் உதவுவீர்கள் என்று நம்புகிறோம். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஆசிரமங்கள், மையங்கள் மற்றும் தியான குழுக்களில் வாராந்திர பிரார்த்தனை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. உங்களால் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் அல்லது நீங்கள் வேறொரு ஆன்மீக போதனையைப் பின்பற்றுபவர் என்றால், நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே ஒவ்வொரு வாரமும் ஒரு தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். முன்பு குறிப்பிட்டபடி, இங்கே விவரிக்கப்பட்டுள்ள பிரார்த்தனை மற்றும் குணப்படுத்தலின் அடிப்படைக் கொள்கைகள் எவருக்கும் பொருந்தும், மதச் சார்பு ஒரு பொருட்டு அல்ல.

விண்வெளியில் இருந்து பார்த்தபடி பூமி.

இதைப் பகிர