YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி உடனான சங்கத்தின் போது போக்குவரத்து வசதிகள் – பிப்ரவரி 2023

வருகைகள்

பிப்ரவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் ஹைதராபாத் கேந்திராவிலிருந்து பக்தர்கள் கன்ஹா சாந்தி வனம் செல்ல YSS போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு உதவ இந்த ஒவ்வொரு இடத்திலும் நம் தன்னார்வலர்கள் இருப்பார்கள்:

இடத்தில் இருந்து பிக்கப் பாயிண்ட் பிக்அப் பாயிண்டை அடைய வழி குறிப்புகள் தொடர்பு விபரங்கள்
விமான நிலையம்
தரை தளம், "C"
பார்க்கிங் பகுதி

விமான நிலைய வழக்கமாக வெளியேறும் வழி முதல் மாடியில் உள்ளது. தரை தளத்திற்கான எஸ்கலேட்டர் / படிக்கட்டுகளை அடைய, வெளியேறும் வழியாக சென்று, வலதுபுறம் திரும்பி, 30 மீட்டர் நடக்க வேண்டும். இங்கு கன்ஹா சாந்தி வனத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் YSS பேருந்துகளைக் காணலாம். நம் தன்னார்வலர்களும் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள்.

இருப்பினும், தங்கள் சொந்த போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துகொள்ள விரும்பும் பக்தர்கள் டாக்ஸிகளைப் (ஓலா, ஊபர், தனியார் டாக்ஸிகள்) பயன்படுத்தலாம்.

கட்டணம் = சுமார் ரூ.1350 - 1650
பயண நேரம் = 45-60 நிமிடங்கள்
தூரம் = 33 கி.மீ

ஸ்ரீ குமுத் ரஞ்சன் (9963266466)

ஸ்ரீ நாகராஜு (9666022226)
செகந்திராபாத் ரயில் நிலையம்
நடைமேடை 10 வெளியேறும் வழி

உங்கள் ரயில் நிற்கும் நடைமேடையிலிருந்து, மேம்பாலத்தைப் பயன்படுத்தி நடைமேடை10 க்கு செல்லவும். இந்த வெளியேறும் இடத்தில், உங்களுக்கு உதவ YSS பேருந்துகள் மற்றும் தன்னார்வலர்கள் இருப்பார்கள்.

தூரம் = 55 கி.மீ
பயண நேரம் = 1.5 - 2 மணி நேரம்

உங்கள் சொந்த போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ள விரும்பினால், இந்த பக்கத்தில் உங்களுக்கு உதவக்கூடிய கூடுதல் தகவல்கள் உள்ளன.

ஸ்ரீ சாய் ஜெயந்த் (9160706444)

ஸ்ரீ குமார் பாபு (9393714343)
ஹைதராபாத் ரயில் நிலையம் (நம்பள்ளி)
பிரதான நுழைவாயிலுக்கு வெளியே (நடைமேடை #1)

இறங்கிய பின், தயவுசெய்து YSS போக்குவரத்திற்காக நடைமேடை 1 இன் பிரதான நுழைவு / வெளியேறும் வாயிலுக்குச் செல்லுங்கள்.

தூரம் = 45 கி.மீ
பயண நேரம் = 1.5 மணி

உங்கள் சொந்த போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ள விரும்பினால், இந்த பக்கத்தில் உங்களுக்கு உதவக்கூடிய கூடுதல் தகவல்கள் உள்ளன.

ஸ்ரீ சேஷிவர்தன் ரெட்டி (8779378705)

ஸ்ரீநிவாஸ் கொடுரு (9980977758)
கச்சேகுடா ரயில் நிலையம்
பிரதான நுழைவாயிலுக்கு வெளியே (நடைமேடை #1)

இறங்கிய பின், தயவுசெய்து YSS போக்குவரத்திற்காக நடைமேடை 1 இன் பிரதான நுழைவு / வெளியேறும் வாயிலுக்குச் செல்லுங்கள்.

தூரம் = 45 கி.மீ
பயண நேரம் = 1.5 மணி

உங்கள் சொந்த போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ள விரும்பினால், இந்த பக்கத்தில் உங்களுக்கு உதவக்கூடிய கூடுதல் தகவல்கள் உள்ளன.

ஸ்ரீ சந்திரகாந்த் (9618029960)

ஸ்ரீ ஈஸ்வர் (9966206260)
YSDK ஹைதராபாத்
1, சிக்கோட்டி கார்டன்ஸ்,
1-10-63/1, நல்லி சில்க்ஸ் பின்புறம்,
பேகம்பேட்,
ஹைதராபாத்
கேந்திராவுக்கு வெளியே

உள்ளூர் பக்தர்கள், அல்லது பேருந்துகள் மூலம் ஹைதராபாத் வரும் பக்தர்கள் தயவுசெய்து ஹைதராபாத் கேந்திராவிற்கு வந்து விடுங்கள். நம் பேருந்துகள் உங்களை கன்ஹா சாந்தி வனத்திற்கு அழைத்துச் செல்லும்.

தூரம் = 50 கி.மீ
பயண நேரம் = 1.5 மணி

ஸ்ரீ ஆஞ்சநேயலு (9441245839)

ஸ்ரீ பிரவீன் (6305482578)

புறப்பாடுகள்

பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், கன்ஹா சாந்தி வானத்திலிருந்து விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் ஹைதராபாத் கேந்திராவிறகு YSS, போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு உதவ நம் தன்னார்வலர்கள் இருப்பார்கள். கன்ஹா சாந்தி வனத்திற்கு நீங்கள் வந்த பிறகு, ஏதேனும் விசாரணைகளுக்கு தயவுசெய்து YSS போக்குவரத்து உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இதைப் பகிர