பல காலமாக அகத்தே நீங்கள் தேடிக்கொண்டிருந்தது
தினசரி வாழ்வின் அழுத்தத்தாலும் தொல்லைகளினாலும் மூழ்கிவிட்டதாக மற்றும் மற்றவர்களாலும் சமூகத்தாலும் நம்மீது சுமத்தப்பட்ட எதிர்பார்ப்புகளினால் அமைதி குலைந்ததாக உணருவது எளிது. ஆனால் உச்சபட்ச அமைதி, பாதுகாப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக உங்களுக்குத் தேவைப்படும் எல்லாமும் அகத்தேயே நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கிறீர்கள்.
இந்த மறைந்துள்ள ஊற்றிலிருந்து எடுக்க, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வால் போதிக்கப்பட்ட அறிவுப்பூர்வமான மற்றும் எல்லோருக்கும் பொதுவான யோகப் பாதையைப் பின்பற்றியவாறு ஓர் அன்றாட தியானப் பயிற்சியை வளர்த்துக் கொள்வதே ஆகும்.
உங்களுடைய மிகவும் ஆழ்ந்த கேள்விகளுக்கு உங்களால் மனநிறைவான பதில்களைப் பெற்று ஒரு நீடித்த மகிழ்ச்சியை வளர்க்க முடியும்
உண்மையான நிறைவேற்றம், வாழ்வைப் பற்றிய உங்களுடைய கேள்விகளுக்குப் பதில்கள், மற்றும் நீடித்த மகிழ்ச்சி உங்களுடைய கைகளுக்கு எட்டும் தூரத்தில் உள்ளன—மற்றும் ஆன்மீகப் பாதையில் நீங்கள் படிப்படியாக பயணிக்கும் போது அவை உங்களுடைய அன்றாட அனுபவமாக ஆகலாம்.
தியானம் செல்வாக்கின் புதிய உயரங்களை எட்டியிருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் பல உடல்சார்ந்த மற்றும் மனம்சார்ந்த சுகாதார நன்மைகளை, மற்றும் எப்படி ஓர் அன்றாடப் பயிற்சியால் உங்களுடைய வாழ்வை ஆக்கப்பூர்வமாகத் தாக்கமுறச் செய்ய முடியும் என நிரூபித்திருக்கின்றன. ஆனால் தியானத்தின் மையத்தில் அதைவிட மிகப்பெரிய விஷயம் உள்ளது.
தியானமே பேரின்ப-உணர்வுநிலைக்கான உங்களுடைய வாயில்
தியானம் அறிவியல்பூர்வமாகப் பயிற்சி செய்யப்படும் போது, உங்களால் மனம், மூச்சு, இதயம் ஆகியவற்றை அமைதிப்படுத்தி உங்களுடைய சக்திகளை உள்ளே எடுத்துச்செல்ல முடியும்; அங்கே பேரின்பத்துடனான உங்களுடைய ஆன்மாவின் ஐக்கியத்தை உங்களால் உணர முடியும்.
இந்த ஆன்ம-உணர்வுக்காட்சி அழியும் வரையறைகளின் உணர்வைக் கரைக்கிறது மற்றும் மாபெரும் ஆனந்தத்தை மட்டுமல்லாது, உங்களால் என்றும் கற்பனை செய்ய முடிவதைவிட அதிகமான அமைதி, ஞானம், அன்பு ஆகியவற்றையும் வழங்கும். இதுவே பண்டைக் காலத்தில் யோகிகளால் உணர்ந்தறியப்பட்டிருக்கும், மற்றும் இப்போது நம் எல்லோருக்கும் கிடைக்கும் இருப்பின் நிலை.
உங்களுடைய தனிநபர் பிரச்சனைகளையோ அல்லது வாழ்வின் புதிரைப் புரிந்துகொள்வது எனும் எல்லோருக்கும் பொதுவான மனிதகுலப் பிரச்சனையையோ தீர்க்க உண்மையில் வேட்கை கொண்டவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வின் போதனைகளைப் பயின்று பின்பற்றுங்கள்—பண்டைக் காலம் தொட்டே இந்தியாவின் ஞான ஒளி பெற்ற தீர்க்கதரிசிகளாலும் முனிவர்களாலும் ஒப்படைக்கப்பட்ட அதன் அறிவியல்பூர்வ ஆன்மீக போதனைகள். அதில் நீங்கள் பதில்களைக் காண்பீர்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
YSS பாடங்கள் என்பன உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி அதன் அனைத்து அம்சங்களையும் மாற்றவல்ல புனித அறிவின் ஒரு பரிமாற்றமே: தியான உத்திகளையும் கீர்த்திமிக்க யோக குருமார்களால் – மகாவதார பாபாஜி, லாஹரி மகாசயர், சுவாமி ஶ்ரீ யுக்தேஸ்வரர் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் ஆகியோர் – மரபுவழி ஒப்புவிக்கப்பட்ட ஆன்மீக சாரத்தையும் போதிக்கும் ஒரு சீராக மலர்ச்சியுறும் வீட்டுக் கல்வித்திட்டம், மற்றும் அது உங்களுக்கு கிடைக்கப்பெறும் ஒன்றாகும்.
நீங்கள் ஆன்மீகப் பாதை ஊடாக பயணிக்க விழையும் காலம் வரை, நான் உங்களுக்கு வழிகாட்ட முடியும்; பாடங்களிலுள்ள உத்திகளை நீங்கள் பயிற்சி செய்தால் உங்கள் முன்னேற்றத்தில் ஒருபோதும் தேக்கத்தை நீங்கள் உணர மாட்டீர்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
கிரியா யோக தியானத்தின் பண்டைய, உத்திகளை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்
YSS பாடங்கள் பரமஹம்ஸ யோகானந்தரால் தோற்றுவிக்கப்பட்டன. அவரது போதனைகளின் மையத்தில் தியான உத்திகளின் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு உள்ளது: கிரியா யோக தியான விஞ்ஞானம். இந்தப் பண்டைய ஆன்ம விஞ்ஞானம் — பரமஹம்ஸர் எழுதியருளிய ஒரு யோகியின் சுயசரிதம் மற்றும் அவரது பிற நூல்கள் மூலம் இலட்சக்கணக்கானவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்று – உயர் ஆன்மீக உணர்வுநிலை மற்றும் இறை ஞானத்தின் அகப் பேரின்பத்தை விழிப்புறச் செய்வதற்கான சக்திவாய்ந்த வழிமுறைகளை அளிக்கிறது.
முதல் பாடத்திலிருந்தே, தியானத்தின் பயன்களை நீங்கள் உடனடியாக அனுபவிக்க வழிவகுக்கும் திட்டவட்டமான வழிமுறைகளை நீங்கள் பெறுகிறீர்கள்.
ஆழ்ந்த தியானத்திற்கான ஒரு திடமான அடித்தளத்தை அமைக்கும் அதே சமயம், மிக விரிவான, கிரியா யோக ஆன்மீக விஞ்ஞானத்தில் தேவையான முதல் படிநிலைகளாக பரமஹம்ஸ யோகானந்தரால் போதிக்கப்பட்ட மூன்று ஆற்றல்மிக்க உத்திகளை நீங்கள் கற்பீர்கள்.
பரமஹம்ஸ யோகானந்தரால் உருவாக்கப்பட்ட சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின் ஒப்பற்ற தொகுதியானது, பிரபஞ்ச ஆதாரத்திலிருந்து சக்தியை தேகத்திற்குள் உணர்வுபூர்வமாக ஈர்க்க ஒருவருக்கு வல்லமை அளிக்கிறது. உயிர்ச் சக்தியைக் கட்டுப்படுத்து வதற்கான இந்த உத்தி, தேகத்தை தூய்மைப்படுத்தி, வலிமைப்படுத்தி தியானத்திற்கு அதைத் தயார் செய்து, உயர்உணர்வுநிலைகளை அடைவதற்காக சக்தியை அகமுகமாக செலுத்துவதை மிக எளிதாக்குகிறது. இவ் வுத்தியின் முறைதவறாத பயிற்சி மன மற்றும் தேகத் தளர்த்தலை மேம்படுத்தி ஆற்றல்மிக்க இச்சா சக்தியை பெருக்குகிறது.
இந்தப் பண்டைய சக்திவாய்ந்த உத்தி மனத்தின் உள்ளார்ந்த ஒருமுகப்பாட்டு சக்திகளை விருத்திசெய்ய உதவுகிறது. இவ்வுத்தியை முறைதவறாமல் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர், எண்ணத்தையும் சக்தியையும் அடையப்பட வேண்டிய ஏதாவது இலக்கின் மீதோ அல்லது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையின் மீதோ குவிப்பதற்காக அவற்றை வெளிப்புற கவன மாற்றங்களிலிருந்து உள்ளிழுக்க கற்றுக் கொள்கிறார். அல்லது வெற்றிகரமான பயிற்சியின் மூலம் விளையும் ஒருமுகப்பட்ட கவனத்தை ஒருவர் அகத்தே உள்ள இறை உணர்வுநிலையை உணர்ந்தறிவதற்கு திருப்பலாம்.
முந்தைய உத்திகளின் பயிற்சி வாயிலாகத் தேகத்தைத் தளர்த்தி மனத்தை ஒருமுகப்படுத்த ஒருவர் கற்றவுடன், இந்த உயர்நிலையான தியான உத்தி, உணர்வுநிலையை, தேக மற்றும் மன வரையறைகளுக்கு அப்பாலுள்ள ஒருவரது எல்லையற்ற உள்ளார்ந்த ஆற்றலைப் பற்றிய ஆனந்தமய ஞானத்திற்கு விரிவுபடுத்துகிறது.
ஆன்மீக உணர்வுநிலையுடைய அனைத்து உண்மையான சாதகர்களும் —சார்ந்திருக்கும் சமயத்தைப் பொருட் படுத்தாமல் — மேற்கூறப்பட்ட உத்திகளை YSS அடிப்படைப் பாடத் தொகுதியில் பெறமுடியும். இந்த மூன்று அடிப்படை உத்திகளை, பாடங்களை கற்கும் முதல் எட்டுமாத காலத்தின் போது, கற்று பயிற்சி செய்தபின் கிரியா யோகத்தில் தீட்சை பெற விழைபவர்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம். தீட்சையானது, இப்பாதையில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளும் பொறுப்பை இன்றியமையாததாக்குகிறது. அடிப்படைப் பாடங்களைக் கற்றலும் பயிற்சி செய்தலும் இத் தீவிர ஈடுபாட்டைப் பற்றி முடிவெடுக்க உங்களுக்கு வல்லமையை வழங்கும்.
ஒருவர் கிரியா யோகத் தீட்சையைப் பெற முடிவெடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி, அடிப்படைப் பாடத் தொகுதியிலுள்ள உத்திகளைப் பயிற்சி செய்வதில் மிகவும் சிரத்தையுடனிருப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கான ஒரு மிகவும் ஆழ்ந்த பயனளிக்கும் தியானப் பயிற்சியை உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களால், மேற்கூறப்பட்டுள்ள அடிப்படை உத்திகளின் வாயிலாக —கிரியா யோகம் இறை ஞானத்திற்கான மிக விரைவான மற்றும் பயனளிக்கும் வழிமுறை என்றாலும் — மிக உயர்ந்த தெய்வீக உணர்வுநிலைகள் அடையப்பட முடியும் என்ற பரமஹம்ஸரின் வாக்குறுதியை தமக்குத்தாமே மெய்ப் பித்துக் கொள்ள இயலும்.
இந்தப் பாடங்களைப் பயன்படுத்திக் கொண்டு முறைதவறாமல் தியானம் புரிந்தால் நீங்கள் அத்துணை மகிழ்ச்சியையும், உங்கள் பிரச்சனைகளுக்கு அத்துணை தீர்வுகளையும் காண்பீர்கள்! வார்த்தைகளோடு மனநிறைவு அடையாதீர்கள், மெய்ப்பொருளைப் பற்றிய நிஜமான அனுபவத்தைப் பெறுங்கள், இறை அனுபூதி பெறுங்கள்!
— பரமஹம்ஸ யோகானந்தர்
YSS பாடங்கள், உத்திகளுடன் கூட, ஆன்மீக வாழ்க்கைக்கான அகத்தூண்டுதல் மற்றும் நடைமுறை வழிகாட்டுதலின் வளத்தை — மாற்றம் நிறைந்த இந்த உலகில் இடைவிடாத சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் மத்தியில் எவ்வாறு மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் வாழ்வது பற்றிய விவரங்களை — வழங்குகின்றன. அந்த அகத்தூண்டுதலை ஒரு தினசரி ஆன்மீகப் பயிற்சியாக மாற்றிட நீங்கள் கற்பீர்கள்.
சில பாடத் தலைப்புகளின் ஒரு மாதிரி எடுத்துக்காட்டு
பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய அறிமுகப் பாடத்தை தற்போது படியுங்கள்
பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் மூலமாக வாழ்க்கையை மாற்றும் அமைதி, ஆனந்தம் மற்றும் ஆன்ம ஞானம் ஆகியவற்றைக் காணும் பயணத்தில் எங்களுடன் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம்.
YSS பாடங்களுக்கு மூன்று படிநிலைகளில் விண்ணப்பியுங்கள்.
படிநிலை 1: கணக்கைத் தொடங்குங்கள்
படிநிலை 2: விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்
படிநிலை 3: அச்சடித்து, கையெழுத்திட்டு உறுதிமொழியை மின் அஞ்சல்(email) செய்யுங்கள்.
YSS பாடங்கள் (அடிப்படைத் தொகுதி), 18 விரிவான பாடங்களாக (ஒவ்வொன்றும் ஏறக்குறைய 24 – 40 பக்கங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இவை ஒவ்வொன்றையும் இரு வாரத்திற்கு ஒன்று என 9 மாதத்திற்குப் பெறுவர். கிரியா யோகத் திற்கு ஆயத்தமாக்குகின்ற அனைத்து தியான உத்திகளும் இந்தக் கால வேளைக்குள் அஞ்சலில் அனுப்பப்படும்.
YSS பாடங்களின் அடிப்படைத் தொகுதியை ஒரு சிறப்பு அறிமுக விலையில் — சாதாரண அஞ்சலில் அனுப்பப்படும் பாடங்களுக்கு ரூ 600 மற்றும் கூரியர்/சிறப்பு அஞ்சலில் அனுப்பப்படும் பாடங்களுக்கு ரூ 1000 — வழங்குகிறோம். இது அவற்றினுடைய உண்மையான விலையை விட கணிசமான அளவில் குறைவாகும்.
மேற்கண்ட விலைகள் இந்தியாவிற்கு மட்டுமே பொருந்தும். பங்களாதேஷ், பூடான், மாலத் தீவுகள், மற்றும் இலங்கைக்கு சந்தாத் தொகை INR 3,120 ஆகும். நேபாளத்தில் உள்ள பாட மாணவர்கள், சந்தாவிற்காக Kopundole வில் உள்ள தியான மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்விலையானது, YSS பாடச் செயலியில் உள்ள பாடங்கள் மற்றும் உங்களது அடிப்படை பாடத் தொகுதிக்கான சந்தாக் காலத்தின் போது பாடங்களுக்கான அனைத்து துணைப் பாடப் பொருள் ஆகியவற்றின் மின்னிலக்க வடிவத்தை இலவசமாக அணுகுவதை உள்ளடக்கியது.
முக்கியக் குறிப்பு: நாங்கள் பாடங்களின் புதிய பதிப்பை எங்களால் முடிந்த வரை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப் படுத்துகிறோம். அதனால் பாடங்களை கட்டணம் செலுத்தி பெற இயலாத அனைவருக்கும் அவை கிடைக்கப் பெறும். பரமஹம்ஸ யோகானந்தரின் பணியை எல்லா நாடுகளிலும் உள்ள மக்களிடம் பரப்புவதற்காக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் அனேக பக்தர்களிடமிருந்து நாங்கள் எதிர் நோக்கும் பெருந்தன்மையான ஆதரவின் காரணமாக மட்டுமே இந்தக் குறைந்த விலையில் எங்களால் அளிக்க இயலுகிறது.
உங்களால் முடிந்தால், நீங்கள் பதிவுசெய்யும் போது நன்கொடை அளிக்கவும்கூட நினைத்தால், நாங்கள் மிகவும் நன்றிபாராட்டுவோம். இது எமது பொதுப் பணியாற்றும் செலவினங்களை எதிர்கொள்ளவும், பரமஹம்ஸ யோகானந்தரது போதனைகள் எல்லா உண்மையான சாதகர்களுக்கு கிடைக்கப் பெறுவதை விரிவுபடுத்தவும் எங்களுக்கு உதவும்.
முதல் பாடம் வருவதற்கு 2 முதல் 4 வாரங்கள் வரை காத்திருக்கவும்.
“புதிய பாடங்களுக்காக உங்களுக்கு மிக்க நன்றி. அவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தற்போது இன்னும் சிறந்த முறையில் போதனைகளைப் புரிந்துகொண்டு, நமது மகத்தான குருதேவரின் அருளாசிகளை உணர்கிறேன்.”
– எஸ்.ஜே., டெல்லி
கிரியாயோகம் ஒரு சாதரண சுவாசப் பயிற்சி அல்ல. அதுதான் மிகப்பிரபலமான பிராணாயாம உத்தி. இதன் வாயிலாக உடலில் உயிர் சக்தியை கட்டுப்படுத்தி அதன்மூலம் பிரபஞ்ச உணர்வு நிலையை அடைய முடியும்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
எப்பொழுது நான் கிரியா யோகத்தீட்சை பெறமுடியும்?
கிரியாயோகமெனும் உயரிய உத்தியைப் பயிற்சி செய்வதற்குமுன் தியானத்தில் ஒரு திடமான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம், பரமஹம்ஸ யோகானந்தரின் தனிப்பட்ட அறிவுரையைக் கொண்ட பாடங்களைப்பெறும் முதல் எட்டு மாதங்களின் ஊடே, மூன்று அடிப்படை உத்திகளை (சக்தியூட்டம், ஒருமுகப்பாடு மற்றும் தியானம்) கற்று பயிற்சி செய்தபின்னர், விருப்பமுள்ளவர்கள், கிரியா யோ தீட்சை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
கிரியா யோகத்தை கற்றுக்கொடுப்பதற்கு ஒய் எஸ் எஸ் பாடங்களின் புனிதமான விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன
பரமஹம்ஸ யோகானந்தர், ஒரு யோகியின் சுயசரிதத்தில், கிரியாயோகம், மொத்த மனித இனத்திற்காக, எவ்வாறு 1861-ல் மகாவதார பாஜியால் புத்தியிரளிக்கப்பட்டது வரலாற்றை விவரிக்கிறார். பாபாஜி தம் சீடர் லாஹரி மகாசயருக்கு அந்த பண்டைய விஞ்ஞானத்தை உபதேசித்து, வாழ்க்கையில் மகாசயரது பணி அவ்விஞ்ஞானத்தை மற்றவர்களுக்கு வெளிப்படையாகக் கற்றுக் கொடுப்பதுதான்(பல நூற்றாண்டுகளாக அவ்வாறு செய்யப்படாததால்) என்றும் கூறினார். முதலில் பாபாஜி, கிரியாயோகத் தீட்சைக்கு, ஒரு மிக உயர்ந்த படிநிலையை விதித்தார். லாஹரி மகாசயர், அப்பொழுது பாபாஜி அவர்களை (கிரியா யோக) சீடத்துவத்திற்கு மரபுரீதியான மிகக் கடினமான விதிமுறைகளைத் தளர்த்துமாறு கேட்டுக் கொண்டார். பாபாஜி அவர்கள் கருணையுடன் அவ்வேண்டுகோளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டார்,” உன்மூலம் இறைவனின் விருப்பமே வெளியிடப்பட்டது. உன்னிடம் பணிவுடன் உதவியை நாடுவோர் யாவருக்கும் கிரியாவை அளி!
1949-ல் எஸ் ஆர் எஃப் தலைமையகத்தில் சீடர்களிடம் உரையாடிய பரமஹம்ஸர் இதைப்பற்றி கூடுதல் விவரங்கள் அளித்தார்:
“திரளான மக்கள் கிரியாயோகம் வாயிலாக நன்மை அடையும் பொருட்டு, பாபாஜியால் பண்டையகாலத் தவம் மற்றும் துறவு சார்ந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், லாஹரி மகாசயர் மற்றும் அவரது ஆன்மீகப் பரம்பரையின் (ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் பரம்பரை குருமார்கள்) சந்ததியினர் அனைவரும், கிரியா யோகத் தீட்சையை நாடும் எந்த பக்தருக்கும், கிரியா யோகப் பயிற்சிக்குத் தயாராகும் நிமித்தம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆரம்பநிலை ஆன்மீகப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் என பாபாஜி விரும்பினார்”.
மேற்கில் தனது பணியின் ஆரம்ப வருடங்களிலிருந்தே பரமஹம்ஸர், தீவிர ஆர்வமுள்ள பக்தர்களை கிரியாயோகத் தீட்சைக்குத் தயார் செய்யும் வண்ணம், பாபாஜியினால் தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளுக்கிணங்க, ஒரு முறையானப் பாடத் தொகுதியை, உருவாக்கத் தொடங்கினார். முதலில் இந்தப் பாடத் தொகுதி, அவர் நேரடியாக நடத்திய வகுப்புகளில் கற்பிக்கப்பட்டது; அத்தொகுதியில் , கிரியாயோகத்தின் முழுப்பயனைப் பெறுவதில் ஒருங்கிணந்துள்ளன என்று பரமஹம்ஸர் கருதியமூன்று அடிப்படை உத்திகளும் சேர்க்கப்பட்டன: சக்தியூட்டும் உத்தி, ஹாங்-ஸா ஒருமுகப்பாட்டு உத்தி மற்றும் ஓம் தியான உத்தி.
1934 லிலிருந்து மேற்கண்ட அடிப்படை உத்திகளுக்கான விரிவாக்கப்பட்ட அறிவுரைகள் யோகதா சத்சங்கப் பாடங்களில் அளிக்கப்பட்டு வருகின்றன. கிரியா யோக விஞ்ஞானம் இறைவனுக்கான தன் தனிப்பட்ட பாதை என்று அவ்விஞ்ஞானத்திற்கு ஈர்க்கப்படும் ஒய் எஸ் எஸ் பாட மாணவருக்கு பரமஹம்ஸர் கிரியா யோகப் பயிற்சியில் உபதேசம் அளித்தார். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வாயிலாக அளிக்கப்படும் அந்தப் புனித தீட்சை (உபதேசம்), மாணவருக்கும் பரமஹம்ஸ யோகானந்தருக்கும் இடையே குரு-சிஷ்ய உறவுமுறையை ஏற்படுத்துகிறது.
பரமஹம்ஸ யோகானந்தர், குரு-சிஷ்ய உறவு முறையை, “ஒரு மிகவும் சொந்த மற்றும் தனிப்பட்ட ஆன்மீகப் பந்தம் …… சீடர் தரப்பிலுள்ள விசுவாசமிக்க ஆன்மீக முயற்சி மற்றும், குருவால் வழங்கப்படும் அருளாசிகள் ஆகிய இரண்டின் ஒரு சங்கமம்” என்று விவரித்தார்.
உங்களிடமிருந்து நான், இறைவனில் உங்கள் ஆனந்தம், என்பதைத் தவிர வேறெதையும் நாடுவதில்லை. நீங்களும் இறைவனின் ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகிய இவைத்தவிர வேறெதையும் என்னிடமிருந்து நாடுவதில்லை.
— பரமஹம்ஸ யோகானந்தர்
யோகதா சத்சங்க போதனைகளின் முதன்மையான கவனமே தேவையற்ற கோட்பாடுகள் நீக்கப்பட்ட உத்தி ஒன்றே. பாடங்களில் விளக்கப்பட்டுள்ள உண்மைகள் யாவருக்கும் பொதுவான நடைமுறை ரீதியானவை. அவற்றின் தெளிவான மற்றும் எளிய அறிமுகம், அதி சிக்கலான உண்மைகளைக்கூட உடனேயே புரிந்து கொள்ளக் கூடியதாகவும், இளைஞர்களும் முதியவர்களும் ஒன்றுபோல் தினசரி வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் செய்கிறது. இந்தப் போதனைகளை மிகவும் மும்முரமாய் உள்ள தனிநபராலும் கூட பின்பற்றவும் பயிற்சி செய்யவும் முடியும், ஏனெனில் இவ்வுலகத்தின் பயிற்சிக்கு, ஒப்பிட்டுப்பார்ப்பின், தினசரி சிறிது நேரமே தேவப்படுகிறது.
— பரமஹம்ஸ யோகானந்தர்
ஒய் எஸ் எஸ் பாடங்களுக்கு மூன்று எளிய படிநிலைகளில் விண்ணப்பியுங்கள்:
படிநிலை 1: கணக்கைத் தொடங்குங்கள்
படிநிலை 2: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள்
படிநிலை 3: அச்சடித்து, கையெழுத்திட்டு உறுதி மொழியை மின் அஞ்சல் செய்யுங்கள்.
இந்தியாவிற்கு வெளியிலும் அண்டைய நாடுகளிலும் வசிப்பவர்களுக்கானக் குறிப்பு:
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை, இந்தியா, பங்களாதேஷ், பூடான், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரப்புகிறது. நீங்கள் இந்த நாடுகளுக்கு வெளியில் வசித்தால், தயவு செய்து, ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் மூலமாக பாடங்களுக்கு விண்ணப்பியுங்கள். எஸ் ஆர் எஃப் எங்கள் சகோதர நிறுவனம் தான். 1920-ல், உலகில் மற்ற அனைத்துப் பகுதிகளும் தன் போதனைகளைப் பரப்புவதற்காக பரமஹம்ஸர் அதை நிறுவினார். ஒய் எஸ் எஸ் பாடங்களிலும், எஸ் ஆர் எஃப் பாடம்களிலும் உள்ள விஷயங்கள், முற்றிலும் ஒன்றானவை.
ஒய் எஸ் எஸ் பாடங்கள் (அடிப்படைத் தொகுதி) 18 மிக விரிவானப் (ஒவ்வொரு பாடமும் தோராயமாக 24-40 பக்கங்கள் கொண்டவை) பாடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாட மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தையும் ஒருவாரக்கால இடைவெளியில் பெறுவார்கள். அனைத்துப் பாடங்களும் 9 மாதத்தில் பெறப்படும். கிரியா யோகத்திற்கு மாணவரைத் தயார் செய்யும் வண்ணமுள்ள அனைத்து அடிப்படைத் தியான உத்திகளும் இக்காலவரை முடிவிற்குள் அஞ்சல் செய்யப்படும்
நாங்கள் ஒய் எஸ் எஸ் பாடத் தொகுதியை, ஒரு சிறப்பு கட்டண விகிதத்தில் – ரூ 600 ஐ சாதாரண அஞ்சலில் அனுப்புவதற்கும், ரூ 1000 ஐ கூரியர்/ சிறப்பு அஞ்சலில் அனுப்புவதற்கும் – உண்மையான செலவினத்திற்கு மிகவும் குறைந்த விலையில், அளிக்க முன் வந்துள்ளோம்.
மேற்கூறிய கட்டணங்கள் இந்தியாவிற்கு மட்டுமே பொருந்தும். பங்களாதேஷ், பூடான், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை நாடுகளுக்கு சந்தாக் கட்டணம் இந்திய ரூபாய் 3120/-. நேபாள நாட்டு பாடமாணவர்கள் சந்தாத் தொகைப்பற்றி அறிவதற்கு கோபுண்டோவிலுள்ள எமது தியான மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இந்தக் கட்டணம், ஒய் எஸ் எஸ் பாட செயலியிலுள்ள பாடங்களின் மின்னியல் வடிவம் மற்றும் அடிப்படைப் பாடத் தொகுதி சந்தா காலத்தில் பாடங்களுடன் அனுப்பப்படும் துணை இணைப்பு விஷயங்களின் மின்னியல் வடிவம் ஆகியவற்றிற்கான இலவச அனுமதியையும், உள்ளடக்கியது
சிறப்புக் குறிப்பு: அதிகமான சந்தாவைக் கட்ட இயலாத அனைவருக்கும் இப்பாடங்கள் கிடைக்கப் பெறச் செய்வதற்காக, பாடங்களின் இந்தப் புதியப்பதிப்பை எங்களால் இயன்ற அளவு மிகக் குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளோம். நாங்கள் இந்த மிகக்குறைந்த சந்தாவை வழங்க முன் வர முடிந்ததற்கு காரணம், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் அநேக பக்தர்களிடமிருந்து, பரமஹம்ஸரின் பணி உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவும் நோக்கத்திற்கு, நாங்கள் எதிர்பார்க்கும் மிகத் தாராளமான ஆதரவு மட்டுமே.
பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களால் முடிந்தால், ஒரு நன்கொடையையும் அளிக்க நீங்கள் முன்வந்தால், நாங்கள் மிக்க நன்றியுடையவர்களாவோம். இது, எங்கள் பொதுவான நிர்வாக செலவினத்தை ஈடுசெய்வதற்கும் அனைத்து உண்மையான சாதகர்களுக்கும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் கிடைக்கச் செய்யும் பணியை விரிவுபடுத்தவும் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
முதல் பாடம் வருவதற்கு 2 லிருந்து 4 வாரங்கள் வரை காத்திருங்கள்.
“புதிய பாடங்களுக்காக மிகவும் நன்றி, அவை மிகவும் உதவிகரமாக உள்ளன. நான் ஒய் எஸ் எஸ் போதனைகளை இப்பொழுது செம்மையாக புரிந்து கொண்டு நமது உன்னத குருதேவரின் அறுளாசிகளை உணர்கிறேன்.”
– எஸ். ஜே., தில்லி
ஆன்மீக உன்னத இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதம் அருளிய பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் மூலம் ஆன்மாவின் அமைதி, ஆனந்தம் மற்றும் ஞானத்தின், வாழ்க்கையை மாற்றும் விழிப்புணர்வை உணரப் பெறுங்கள்
எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் செயலி அனைவருக்குமானது —நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவராக இருந்தாலும் சரி அல்லது பல வருடங்களாக இந்த மகத்தான ஆசானின் ஞானத்தில் மூழ்கி இருப்பவராக இருந்தாலும் சரி. தியானம், கிரியா யோக விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக ரீதியில் சமநிலை வாழ்க்கையை வாழ்வதற்கான நடைமுறை வழிகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் எவருக்கும் இது பொருந்தும்.
இடம்பெறுபவை:
உங்கள் அன்றாட வாழ்க்கையில் எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் கிரியா யோக போதனைகளை பயன்படுத்த உங்களுக்கு உதவ, உங்கள் பாடங்களின் டிஜிட்டல் பதிப்புகள் மற்றும் பல தரப்பட்ட மல்டிமீடியா உள்ளடக்கம் ஆகியவை இந்த செயலியில் உள்ளது.
இவைகள் உட்பட:
நீங்கள் ஒரு எஸ் ஆர் எஃப் அல்லது ஒய் எஸ் எஸ் பாட மாணவராக இருந்தால், செயலியில் உள்ள பாடங்களை அணுக உங்கள் சரிபார்க்கப்பட்ட பக்தர் இணைய தள தகவலைப் பயன்படுத்தவும்.
ஒய் எஸ் எஸ் பாட மாணவர்கள் டெஸ்க்டாப் செயலியில் ஒய் எஸ் எஸ் பாடங்கள் மற்றும் துணை சாதனங்களை காணலாம்:
இந்த அற்புத புதிய செயலியை உருவாக்கியதற்கு மிகவும் நன்றி. அதன் பல செயல்பாடுகள் குறித்து நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன். பாடங்களைப் படிப்பது, முக்கியமான விஷயங்களை முன்னிலைப்படுத்துவது மற்றும் ஃப்ளாஷ்கார்டுகளை உருவாக்குவது எவ்வளவு நன்றாக இருக்கிறது. மேலும் இந்தப் புதிய செயலியின் காரணமாக, எனது அன்றாட வாழ்விலும் இறைவனின் இருப்பை அதிகமாக இப்போது உணர்கிறேன். ஓய்வு நேரத்தின் ஒரு குறுகிய காலத்தில், நான் விரைவாக என் ஃப்ளாஷ்கார்டுகளை பார்த்து, என் வாழ்க்கையில் இன்றியமையாதது எது என்பதை அல்லது இந்த நேரத்தில் நான் எதில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்பதை நினைவில் கொள்ள முடியும். இந்த அருளாசிக் கொடையின் பொருட்டு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!
நான் இன்று உங்களுக்கு இந்த மின்னஞ்சலை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுப்புகிறேன். புதிய SRF செயலி இப்போது பார்வையற்றவர்களுக்கு எவ்வாறு அணுகத்தக்க வகையில் உள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். இது மிகவும் அற்புதமானது, இந்த கொடையின் பரிமாணத்தின் காரணமாக இன்னும் அதிகமாக நான் பூரிப்படைவதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் செயலியை ஒரு "ஆவண வாசிப்பளர்" ஐ விட "திரை வாசிப்பாளர்" தேவைப்படுபவர்கள் அணுகக்கூடியதாக ஆக்குகின்றன. இந்த செயலியின் மூலம் வழங்கப்படும் தியானங்கள் மற்றும் பிற SRF / YSS நிகழ்வுகளை பார்வையற்ற பக்தர்கள் எவ்வாறு அணுக முடியும் என்பதை இந்த செயலி மாற்றும். வழக்கம் போல, நமது குருதேவர் நாம் எப்போதும் கோர நினைத்ததைவிட மிக தாராளமாக நமக்கு எல்லையற்றதை வழங்கியுள்ளார். நம் SRF குடும்பம் நம் தேவைகளை அறிந்து பதிலளித்தது குறித்து நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன்.
நான் செயலி அறிவிப்பைப் பார்த்தேன், மேம்படுத்தல் ஒரு திடீர் திருப்புமுனை பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். பழைய செயலியிலிருந்து நான் கொண்டிருந்த அனைத்து விருப்பங்களும் இதில் செயலாக்கப்பட்டு உள்ளன —
‘லேண்ட்ஸ்கேப்’ பயன்முறை, படிப்பிற்காக தேடக்கூடிய முன்னிலை படுத்தும் அம்சம் (ஆனால் என் தீவிர ஆசைகளை காட்டிலும் சிறப்பாகவே உள்ளது), உரைக்கு குரல் வழி, மற்றும் அனைத்து இணைப்புகளும் வசதியாக அங்கேயே உள்ளன. நான் ஏற்கனவே மற்றவற்றை விட அதனுடன் அதிக வாசிப்பு நேரத்தை செலவிட்டேன். குறிப்பாக என் முன்னிலைப் படுத்தியவைகளை ஸ்க்ரோலிங் செய்து படித்தல், அதை இப்போது வண்ணத்தின் அடிப்படையில் வகைப்படுத்தலாம் மற்றும் வடிகட்டலாம். இது உறுதிமொழிகளின் எனது அனைத்து முன்னிலைப்படுத்தியவைகளையும் ஒரு வண்ணமாக அமைக்கவும், அவற்றை தடையில்லா பட்டியலாக பார்க்கவும் ஏதுவாக்குகிறது! இது ஒன்றே ஒரு புதையல்! பல ஆண்டுகளாக நான் எண்ணிக் கொண்டிருந்த செயலி மேம்படுத்தல்கள் அனைத்தையும் SRF மிகவும் ஈர்க்கக்கூடிய ஒற்றை பாய்ச்சலில் கொண்டு வந்துள்ளது என நினைத்துக்கொண்டேன். நன்றி!
கணினியில் எனது பாடங்களை இப்போது படிக்க முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கப் பெறும் அனைத்து அருளாசிகளுக்கும் என்னால் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு எல்லாமே மிகச் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன!
எனவே நான் இப்போது பழக்கப்பட்ட SRF / YSS செயலியை திறக்கிறேன். எனக்கு ஒரு அறிவிப்பு வருகிறது: புதிய புதுப்பிப்பு கிடைக்கப் பெறும். நான் ஆப் ஸ்டோரில் உள்ள "புதியது என்ன" பகுதியைப் படிக்கத் தொடங்குகிறேன், மேலும் இந்த புதிய புதுப்பிப்பில் (பதிப்பு 3.0.0). பல புதிய அம்சங்கள் மனதை கவர்ந்தது!
இந்த செயலியின் புத்தம் புதிய பதிப்பை நான் மிகவும் விரும்புகிறேன், தியானம் பயிற்சி செய்வதற்கும், கற்பதற்கும் மற்றும் சக பக்தர்களுடன் இணைவதற்கும், SRF இலிருந்து சமீபத்திய செய்திகளைப் பெறுவதற்கும் அதிக அம்சங்கள் உள்ளன.
இந்த செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு முற்றிலும் அற்புதமானது. அனைத்து விஷயங்களையும் ஒரே பக்கத்தில் கொண்டு வருவது மிகவும் அருமை. மிகச் சிறப்பு.
புதுப்பிக்கப்பட்ட செயலியை நேசித்தல், குறிப்பாக TTS [உரை-க்கு-குரல் வழி]!
செயலி தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளைப் படிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
மேலே உள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறிப்பாக SRF / YSS செயலியுடன் தொடர்புடையது, நீங்கள் YSS மற்றும் இந்த போதனைகளுக்கான பொது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைத் தேடுகிறீர்களானால், எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பார்வையிடவும்.
Please share your location to continue.
Check our help guide for more info.